SLBC தலைவருடன் மீடியா போரம் சந்திப்பு; முஸ்லிம் சேவையின் எதிர்கால மேம்பாடு தொடர்பில் பரிந்துரைகளும் முன்வைப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி உதித கயாஷான் குணசேகர அவர்களுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (17) நடை பெற்றது.
இதன்போது, முஸ்லிம் சேவையின் எதிர்கால மேம்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையும் கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை நிரந்தரமாக்குதல், கலைஞர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல், முஸ்லிம் சேவைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கணிசமான பகுதியை விளம்பரங்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் நேயர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன.
இவற்றை பணிப்பாளர் சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ், ஸ்தாபக போஷகர் என்.எம்.அமீன், உப தலைவர் ஜெம்சித் அஸீஸ், முன்னாள் தலைவி புர்கான் பி இப்திகார் ஆகியோர் கலந்துகொண்டனர். முஸ்லிம் சேவைப் பிரதானி பாத்திமா ரினூஸியாவும் இச்சந்திப்பில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
SLBC தலைவருடன் மீடியா போரம் சந்திப்பு; முஸ்லிம் சேவையின் எதிர்கால மேம்பாடு தொடர்பில் பரிந்துரைகளும் முன்வைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 20, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 20, 2025
Rating:

கருத்துகள் இல்லை: