Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்: 15 அம்ச திட்டம் முன்வைப்பு!

போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரானின் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்கவும் மற்றும் மின்சாரத் தேவைக்காக சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் தடையற்ற போக்குவரத்து போன்ற பாதுகாப்பு சார்ந்த அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

1. நட்டான்ஸ் (Natanz), இஸ்பஹான் (Isfahan), போர்டோ (Fordow) ஆகிய அணு நிலையங்கள் செயலிழக்கச் செய்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்.

2. International Atomic Energy Agency (IAEA) மூலம் முழுமையான கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

3. ஈரான் தனது பிராந்திய ஆயுதப்படை கூட்டாளிகளுக்கு (proxies) ஆதரவு, நிதி, ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.

4. ஏற்கனவே உருவாக்கப்பட்ட அணு திறன்கள் முழுமையாக களைந்துவிடப்பட வேண்டும்.

5. இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்காது என்று உறுதி அளிக்க வேண்டும்.

6. ஈரான் நிலப்பரப்பில் யுரேனியம் செறிவூட்டல் (enrichment) செய்யக்கூடாது; ஏற்கனவே உள்ள அனைத்தும் IAEA-க்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.

7. ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த “சுதந்திர கடல் மண்டலம்” ஆக இருக்க வேண்டும்.

8. ஈரானின் ஏவுகணை திட்டம் வரம்பில் வைக்கப்படும் (எண்ணிக்கை மற்றும் தூரம் குறைக்கப்பட வேண்டும்..சுய பாதுகாப்பிற்கே பயன்படுத்த வேண்டும்)

9. புஷேர் (Bushehr) பகுதியில் மின்சாரம் உற்பத்திக்கான சிவில் அணு திட்டத்தில் அமெரிக்க உதவி.

10. அனைத்து பொருளாதார தடைகள் (sanctions) நீக்கம்.

11. மீண்டும் தடைகள் விதிக்கும் அச்சுறுத்தல் நீக்கம்.

12.பேச்சுவார்த்தைக்காக சுமார் ஒரு மாத கால தற்காலிக போர் நிறுத்தம்.

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்: 15 அம்ச திட்டம் முன்வைப்பு! Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.