Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

துரைவி விருது - 2026

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

துரைவியின் 95 ஆவது  பிறந்த தின நினைவுப் பேருரையும், துரை மற்றும் ஜெயம் விருது வழங்கல் நிகழ்வும் கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன் தலைமையில் (29) நடைபெற்றது.

இந்நிகழ்வின்  தொகுப்புரையையும்,  வரவேற்புரையையும்  மேமன்கவி நிகழ்த்தினார் .

இதன்போது ந. இரவீந்திரன் எழுதிய "தமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்" என்ற ஆய்வு நூலுக்கும், இரா.சடகோபன் எழுதிய  "சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு'' என்ற ஆய்வு நூலுக்கும் ராஜன் ஹூல் - ஆங்கிலத்தில் எழுதிய "உயிர்த்தஞாயிறு அனர்த்தம்" '(மறைகரம் வெளிப்பட்டபோது)'  என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்த எ ன்.எம். அமீனின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் துரைவி விருதுகள் வழங்கப்பட்டன.

பெண் ஊடகவியலாளர் நாகபூசணி கருப்பையாவுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான "ஜெயம் விருது" வழங்கப்பட்டது.

துரைவி 95 ஆவது பிறந்த தின நினைவுப் பேருவுரையை ''பாலின சமத்துவத்தை நசுக்கும் இரட்டைச் சுமை பெண்ணிய உரையாடல்'' என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரமீளா பிரதீபன் உரை  நிகழ்த்தினார். 

நிகழ்வில் நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் வழங்கினார்.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் எம். வாமதேவன்  ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர். 

படத்தில் என். எம். அமீன், இரா.சடகோபன்,  நா. ரவிந்தரன், நாகபூசணி கருப்பையா ஆகியோர் காணப்படுகின்றனர்.
துரைவி விருது - 2026 Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 31, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.