Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தில் காத்தான்குடியும் உள்வாங்கப்பட்டுள்ளது.



ஆசிய அபிவிருத்தி வங்கியின் நேரடி நிதிப்பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 உள்ளூராட்சி சபைகளில் மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை வலையத்தினுள் காத்தான்குடியும் உள்வாங்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் பல்வேறு சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்திகள் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. 


இவ்வேலை திட்டமானது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. 

இதன் பூர்வாங்க சாத்திய வள ஆய்வுகள், ஆலோசனைகள், கருத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்  30.03.2026 மட்டக்களப்பு உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 


இக்கலந்துரையாடலில், காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வ, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான அபிவிருத்தி பணிப்பாளர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுற்றுலாத்துறை ஆலோசகர் கலாநிதி சமந்த பத்திரன, பொது நிர்வாக உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சி திட்டத்தில் காத்தான்குடியும் உள்வாங்கப்பட்டுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 31, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.