Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்


மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில், நீதிமன்ற உத்தரவின்படி இன்று 30 உத்தியோகபூர்வ அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் நேரடியாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.


30.03.2026 காலை 8:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணிகள் மாலை 6:00 மணி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினத்திற்காக 
அகழ்வுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. 

மீண்டும் 31.03.2026 காலை 8:00 மணிக்கு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இது குறித்துப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, குருக்கள்மடம் பகுதியில் வைத்து நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இந்த அகழ்வுப் பணியின்போது கடத்தப்பட்டு மரணித்தவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்ததுடன், முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.


பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த அகழ்வுப் பணியில் பொலிஸ் தடயவியல் நிபுணர்கள், அகழ்வாராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அகழ்வாராய்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த சகல தரப்பினரும் பங்கேற்றுள்ளனர். 

அரசாங்கத்தினால் இதற்கான முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததுடன், சம்பந்தப்பட்ட பிரதேச சபை இந்த அகழ்வுப் பணிக்கு மிகவும் ஒத்துழைப்புடனும் உதவியாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நூற்றுக்கணக்கான பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பல தசாப்தங்களுக்கு முன் இடம்பெற்ற இந்த பாரிய மனிதப்படுகொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இதன் மூலம் வெளிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

KR TV Network
உள்நாட்டுச் செய்தி


සිය ගණනක් වළදමා ඇතැයි සැකකෙරෙන මඩකලපුව කුරුක්කල්මඩම් සමූහ මිනීවළේ කැණීම් කටයුතු ආරම්භ වෙයි

මඩකලපුව, කලුමංචිකුඩි පොලිස් බලප්‍රදේශයට අයත් කුරුක්කල්මඩම් ප්‍රදේශයේ සිය ගණනක් පිරිසක් වළදමා ඇතැයි සැකකෙරෙන මිනිස් මිනීවළක් පවතින බවට හඳුනාගත් ස්ථානයේ අධිකරණ නියෝග මත අද දින කැණීම් කටයුතු ආරම්භ විය. කලුමංචිකුඩි මහේස්ත්‍රාත් අධිකරණ විනිසුරුවරයා එම ස්ථානයට සෘජුවම පැමිණ මෙම කැණීම් කටයුතු නිල වශයෙන් ආරම්භ කරන ලදී.

අද උදෑසන 8:00 ට ආරම්භ වූ මෙම කැණීම් කටයුතු සවස 6:00 දක්වා අඛණ්ඩව සිදු කෙරුණු අතර අද දින සඳහා එය අවසන් කරන ලදී. හෙට උදෑසන 8:00 ට නැවත කැණීම් කටයුතු ආරම්භ කරන බව අදාළ බලධාරීන් ප්‍රකාශ කර ඇත.

1990 වසරේ ජූලි මස 12 වන දින හජ් වන්දනාව නිමා කර කල්මුණේ හරහා කාත්තන්කුඩි බලා යමින් සිටියදී පැහැරගෙන ගොස් ඝාතනය කරන ලද සිය ගණනක් පිරිසක් මෙම ස්ථානයේ වළදමා ඇති බවට පවතින සැකය මත මෙම විමර්ශන ක්‍රියාත්මක වේ. මෙම අවස්ථාවට පැහැරගෙන ගොස් ඝාතනයට ලක්වූවන්ගේ ඥාතීන් සිය ගණනක් සහ ප්‍රදේශයේ ප්‍රමුඛ පෙළේ ආයතන ප්‍රධානීන් මෙන්ම ප්‍රභූවරුන් ද සහභාගී වී සිටියහ.

පොලිස් ආරක්ෂාව මධ්‍යයේ සිදු කෙරෙන මෙම කැණීම් සඳහා පොලිස් විද්‍යාත්මක අපරාධ විමර්ශන ඒකකයේ (Forensic) නිලධාරීන්, පුරාවිද්‍යා දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන් සහ කැණීම් ක්ෂේත්‍රය පිළිබඳ විශ්වවිද්‍යාල කථිකාචාර්යවරුන් ඇතුළු අදාළ සියලුම පාර්ශවයන් එක්ව සිටිති. රජය විසින් මේ සඳහා අවශ්‍ය පහසුකම් සලසා දී ඇති අතර අදාළ ප්‍රාදේශීය සභාව ද ඉතා සහයෝගයෙන් මෙම කටයුතුවලට සහාය දක්වයි.

මාධ්‍යවේදීන්, නීතිඥයින් සහ සිය ගණනක් වන සිවිල් වැසියන් ඉදිරිපිට මෙම කටයුතු විනිවිදභාවයකින් යුතුව සිදු කෙරේ. මෙහිදී වසර 30කට පෙර සිදුවූ සමූහ ඝාතනය පිළිබඳ තීරණාත්මක සාක්ෂි අනාවරණය වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

KR TV Network
දේශීය පුවත්

Excavation Begins at Suspected Mass Grave in Kurukkalmadam, Batticaloa, Where Hundreds are Believed to be Buried

Official excavation work has commenced today at a suspected mass grave site in Kurukkalmadam, under the Kaluwanchikudy police division in Batticaloa, following a court order. The Kaluwanchikudy Magistrate visited the site in person to officially inaugurate the excavation process.

The excavation work, which began at 8:00 AM today, continued until 6:00 PM before being concluded for the day. Responsible officials have stated that the work will resume tomorrow morning at 8:00 AM.

The investigation focuses on a 1990 incident where hundreds of people were allegedly abducted and killed while traveling from Kalmunai to Kattankudy after completing the Hajj pilgrimage on July 12th. Relatives of the hundreds of victims, along with heads of key local organizations and community leaders, were present to witness the proceedings.

Conducted under heavy police security, the excavation involves forensic experts, officials from the Department of Archaeology, and university lecturers specializing in archaeological excavations. The government has facilitated the necessary arrangements, and the local Pradeshiya Sabha is providing significant cooperation and assistance for this operation.

The process is being carried out transparently in the presence of hundreds of civilians, lawyers, and journalists. It is hoped that this excavation will provide crucial evidence regarding the mass killing that occurred decades ago.

KR TV Network
Local News
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் நூற்றுக்கணக்கானோர் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 30, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.