Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மூன்றாவது முறையாக T20 கிண்ணம் வென்ற இந்தியா


டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது. நியுசிலாந்து அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.சஞ்சு சாம்சன் 89 ஓட்டங்களையும், இஷான் கிஷான் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

சஞ்சு சாம்சனின் இந்த 89 ஓட்டங்கள் என்பது ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஒட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. ரிம் சீபெர்ட் 52 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் சான்டர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்களையும், அக்ஸர் பட்டேல் 3 விக்கெட்களையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும் தெரிவாகினர்.

இதேவேளை உலகக் கிண்ணத்தை அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வென்ற ஓரே அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக T20 கிண்ணம் வென்ற இந்தியா Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.