அதிக விலைக்கு நீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்; பண்டாரவளை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
அதிக விலைக்கு நீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம்; பண்டாரவளை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) முன்னெடுக்கப்பட்ட திடீர் முற்றுகையின் போது, குறித்த உணவகத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு நீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நீதவான் இந்த பாரிய அபராதத் தீர்ப்பினை வழங்கினார்.
நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
වැඩි මිලට ජල බෝතල් අලෙවි කළ අවන්හලකට රුපියල් ලක්ෂ 10 ක දඩයක්; බණ්ඩාරවෙල අධිකරණයෙන් දැඩි තීන්දුවක්
පානීය ජල බෝතලයක් එහි උපරිම සිල්ලර මිලට (MRP) වඩා වැඩි මිලකට අලෙවි කිරීමේ වරදට හපුතලේ ප්රදේශයේ ප්රසිද්ධ අවන්හලකට රුපියල් ලක්ෂ 10 ක දඩයක් නියම කර ඇත.
බදුල්ල දිස්ත්රික් පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය විසින් සිදුකළ වැටලීමකදී මෙම අවන්හල නීතිවිරෝධී ලෙස වැඩි මිලට ජල බෝතල් අලෙවි කරන බව තහවුරු විය. මේ සම්බන්ධයෙන් බණ්ඩාරවෙල මහේස්ත්රාත් අධිකරණයේ පැවති නඩු විභාගයේදී, පසුගිය අප්රේල් 24 වනදා මහේස්ත්රාත්වරයා විසින් මෙම දඩය නියම කරන ලදී.
පාරිභෝගික අයිතීන් සුරැකීම වෙනුවෙන් මෙවැනි වැටලීම් ඉදිරියටත් දැඩිව ක්රියාත්මක කරන බව බලධාරීන් අවධාරණය කර සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Restaurant Fined Rs. 1 Million for Selling Water Bottles Above MRP in Haputale
A prominent restaurant in Haputale has been fined Rs. 1 million for selling drinking water bottles above the Maximum Retail Price (MRP).
The Badulla District Consumer Affairs Authority (CAA) conducted a sudden raid and confirmed the illegal sale. Following legal proceedings at the Bandarawela Magistrate's Court, the verdict was delivered on April 24, imposing the heavy fine.
Authorities have warned that strict measures will continue to protect consumer rights against vendors who violate pricing regulations.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
25/04/2026. #பர்ஹானா_பதுறுதீன்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: