ஆஸ்திரேலியாவில் கழிவறை குழிக்குள் விழுந்து 3 மணிநேரம் தவித்த பெண்; மீட்புப் பணியாளரால் உயிர் தப்பினார்
ஆஸ்திரேலியாவில் கழிவறை குழிக்குள் விழுந்து 3 மணிநேரம் தவித்த பெண்; மீட்புப் பணியாளரால் உயிர் தப்பினார்
ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கழிவறை திடீரென இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் சுமார் மூன்று மணி நேரம் கழிவுப் பொருட்களுக்குள் சிக்கித் தவித்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டார்வின் பகுதியிலிருந்து கான்பெர்ராவிற்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஹென்பரி விண்கல் பாதுகாப்பு மண்டலத்தில் (Henbury Meteorites Conservation Zone) உள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்த முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. கழிவறைத் தளம் இடிந்து விழுந்ததில் அந்தப் பெண் இடுப்பு வரை கழிவுகளுக்குள் மூழ்கி சிக்கிக்கொண்டார்.
சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த வழியாகச் சென்ற ஒரு தொழில்நுட்பப் பணியாளரின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். கயிற்றைப் பயன்படுத்தி காரின் உதவியுடன் சுமார் 45 நிமிடப் போராட்டத்தின் பின்னரே அந்தப் பெண் குழியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குப் பெரிய அளவிலான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வடக்கு மாகாணத்தின் பணியிட பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான NT WorkSafe விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாகாணங்களிலும் கடந்த காலங்களில் இது போன்ற விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கන් வொய்ஸ்
சர்வதேச செய்தி
ඕස්ට්රේලියාවේ වැසිකිළි වළකට වැටී පැය 3ක් සිරවී සිටි කාන්තාවක් බේරා ගනී
ඕස්ට්රේලියාවේ උතුරු ප්රදේශයේ දුරස්ථ ප්රදේශයක පිහිටි වැසිකිළියක් හදිසියේ කඩා වැටීමෙන් කාන්තාවක් පැය තුනක පමණ කාලයක් අපද්රව්ය පිරුණු වළක සිරවී සිටීමේ පුවතක් වාර්තා වේ.
සිය සැමියා සහ දරුවන් දෙදෙනා සමඟ ඩාවින් සිට කැන්බරා බලා මෝටර් රථයකින් ගමන් කරමින් සිටියදී, හෙන්බරි උල්කාපාත සංරක්ෂණ කලාපයේ (Henbury Meteorites Conservation Zone) පිහිටි පොදු වැසිකිළියක් භාවිතා කිරීමට යාමේදී මෙම අනතුර සිදුව ඇත. වැසිකිළියේ පොළොව කඩා වැටීමෙන් ඇය උකුළ දක්වා අපද්රව්ය තුළ ගිලී සිරවී තිබේ.
පැය තුනක පමණ කාලයක් වළ තුළ සිරවී සිටි ඇයව, එම මාර්ගයේ ගමන් කළ කාර්මික ශිල්පියෙකුගේ සහාය ඇතිව බේරාගෙන ඇත. ලණුවක් ආධාරයෙන් මෝටර් රථයක් භාවිතා කරමින් විනාඩි 45ක පමණ මෙහෙයුමකින් පසුව ඇයව වළෙන් ගොඩට ගෙන තිබේ. අනතුරුව රෝහල් ගත කළ ඇයට බරපතල තුවාල සිදුව නොමැති බව වාර්තා වේ.
මෙම සිදුවීම සම්බන්ධයෙන් උතුරු ප්රදේශයේ සේවා ස්ථාන ආරක්ෂණ නියාමන ආයතනය (NT WorkSafe) පරීක්ෂණ ආරම්භ කර ඇත. මීට පෙරද ඕස්ට්රේලියාවේ ක්වීන්ස්ලන්තය සහ වික්ටෝරියා ප්රාන්තවල මෙවැනි අනතුරු වාර්තා වී තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Woman Rescued After Being Trapped in Australian Outback Toilet Pit for Three Hours
A woman traveling through the Australian outback was trapped waist-deep in a pit latrine for approximately three hours after the structure collapsed beneath her. The incident occurred at the Henbury Meteorites Conservation Zone, about 145km southwest of Alice Springs in the Northern Territory.
The woman was on a road trip with her husband and two children, traveling from Darwin to Canberra, when she stopped to use the facility. She remained stuck in the sewage until a passing local tradesman noticed the family's distress.
The tradesman used a rope and his vehicle to carefully lift the woman out of the pit in a rescue operation that lasted over 45 minutes. Following the rescue, she was taken to a hospital but reportedly did not suffer any serious injuries.
NT WorkSafe has launched an investigation into the collapse of the facility, which is managed by the local conservation agency. Similar accidents involving pit toilets have been reported in Queensland and Victoria in recent years, highlighting ongoing safety concerns with basic latrine structures in remote areas.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: