தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டம்
"தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் 16 கிராமங்களின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்
"தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் திட்டத்தின் கீழ், மாத்தறை மாவட்ட சமூகத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் அனுசரணையில், மாத்தறை மாவட்ட செயலகத்தின் காமினி ஜயசேகர அரங்கில் (02) அன்று நடைபெற்றது.
இந்த சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராமங்கள் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 322 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தில் 16 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 04, 2026
Rating:

கருத்துகள் இல்லை: