Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நியூசிலாந்து உயர் அதிகாரி சந்திப்பு


 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நியூசிலாந்து உயர் அதிகாரி சந்திப்பு: பாதுகாப்பான புலம்பெயர்வு குறித்து கலந்துரையாடல்


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மற்றும் நியூசிலாந்து நாட்டுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் (Sonia Douglas) ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (27) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கான தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் சொனியா டக்லஸ், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.


இக்கலந்துரையாடலின் போது, முறைசாரா புலம்பெயர்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வித் தகைமைக்கு ஏற்றவாறு இலங்கை அரசாங்கம் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என நியூசிலாந்து அதிகாரி சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத் மற்றும் ICMPD நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


නවසීලන්ත උසස් නිලධාරිනියක් මඩකලපුව දිස්ත්‍රික් ලේකම්වරයා හමුවෙයි


මඩකලපුව දිස්ත්‍රික් ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතා සහ නවසීලන්තයේ මෙරට නිල නොවන සංක්‍රමණ සබඳතා නිලධාරිනී සෝනියා ඩග්ලස් (Sonia Douglas) මහත්මිය අතර විශේෂ සාකච්ඡාවක් අද (27) මඩකලපුව නව දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. ශ්‍රී ලංකාව, ඉන්දියාව සහ බංග්ලාදේශය ඇතුළු රටවල් කිහිපයක සබඳතා නිලධාරිනිය ලෙස කටයුතු කරන ඇය මඩකලපුව දිස්ත්‍රික්කයේ සංචාරයක නිරත වූ පළමු අවස්ථාව මෙයයි.


නිසි ක්‍රමවේදයකින් තොරව විදේශගත වීමෙන් සිදුවන බලපෑම් සහ ආරක්ෂිත සංක්‍රමණය පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීම සම්බන්ධයෙන් මෙහිදී අවධානය යොමු විය. විශේෂයෙන් විදේශගත වන ශ්‍රමිකයන්ට ඔවුන්ගේ අධ්‍යාපන සුදුසුකම්වලට සරිලන පරිදි රජය විසින් සහතික පත්‍ර නිකුත් කළ යුතු බව සෝනියා ඩග්ලස් මහත්මිය මෙහිදී පෙන්වා දුන්නාය. මෙම අවස්ථාවට සහකාර දිස්ත්‍රික් ලේකම් ජී. ප්‍රණවන් මහතා ඇතුළු නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


New Zealand High Official visits Batticaloa: Discussions on Safe Migration held


A discussion was held today (27) at the new Batticaloa District Secretariat between the District Secretary J.S. Arulraj and Sonia Douglas, the Informal Migration Liaison Officer for New Zealand. Covering countries including Sri Lanka, India, and Bangladesh, this was Ms. Douglas's first official visit to the Batticaloa district.


The talks focused on the risks of irregular migration and the importance of raising awareness regarding safe migration practices. During the meeting, Ms. Douglas emphasized that the Sri Lankan government should provide certification for migrant workers that accurately reflects their educational qualifications and skills. Assistant District Secretary G. Pranavane, District Foreign Employment Officer K. Ramanaprasad, and representatives from ICMPD were also present at the session.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நியூசிலாந்து உயர் அதிகாரி சந்திப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.