Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக முஸ்லிம் மஜ்லிஸினால் கௌரவம்



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்கள் கௌரவிப்பு

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (24) ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து துறைமுக அதிகார சபையின் பள்ளிவாசலில் நடைபெற்றது. முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அதன் தலைவர் இல்ஹாம் மசூர் மௌலானா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது புனித மக்கா பயணமாகும் ஒன்பது ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு ஹஜ் வழிகாட்டி நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஊழியர்களைக் கௌரவிக்கும் நற்பணியை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அன்றைய தினம் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கத்தை மருதமுனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஊடகப் பிரிவு ஆலோசகருமான அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா (நழீமி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் முஸ்லிம் மஜ்லிஸ் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பல ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

ஆன்மீகச் செய்தி


හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන ශ්‍රී ලංකා වරාය අධිකාරියේ සේවකයන් ඇගයීමේ උත්සවයක් පැවැත්වේ

මෙවර ශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන ශ්‍රී ලංකා වරාය අධිකාරියේ සේවකයන් ඇගයීමේ විශේෂ උත්සවයක් පසුගිය සිකුරාදා (24) ජුම්මා යාඥාවෙන් අනතුරුව වරාය අධිකාරි පල්ලි පරිශ්‍රයේදී පැවැත්විණි. වරාය අධිකාරියේ මුස්ලිම් මජ්ලිස් සංවිධානය විසින් සංවිධානය කරන ලද මෙම උත්සවය එහි සභාපති ඉල්හාම් මසූර් මවුලානා මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිදු විය. මෙහිදී හජ් වන්දනාව සඳහා මෙක්කාව බලා පිටත්ව යන සේවකයන් නව දෙනෙකු ඇගයීමට ලක් වූ අතර ඔවුන්ට හජ් මාර්ගෝපදේශ පොත් ද ප්‍රදානය කරන ලදී.

වරාය අධිකාරියේ මුස්ලිම් මජ්ලිස් පරිපාලනය විසින් සෑම වසරකම හජ් වන්දනාවට යන සේවකයන් ඇගයීමේ මෙම සත්ක්‍රියාව සිදු කරනු ලබයි. එදින දේශනය මරුදමුනෙයි ජම්ඉයියතුල් උලමා සංවිධානයේ සභාපති අෂ්ෂෙයික් අන්සාර් පලීල් මවුලානා (නලීමි) විසින් පවත්වන ලදී. මෙම අවස්ථාවට මුස්ලිම් මජ්ලිස් විධායක සභාවේ සාමාජිකයන් සහ වරාය අධිකාරියේ සේවකයන් රැසක් සහභාගී වූහ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ආගමික පුවත්


Sri Lanka Ports Authority honors employees embarking on Holy Hajj Pilgrimage

A special ceremony to honor Sri Lanka Ports Authority (SLPA) employees embarking on the Holy Hajj pilgrimage this year was held last Friday (24) following Jummah prayers at the SLPA Mosque. Organized by the Muslim Majlis of the Ports Authority, the event was presided over by its President, Ilham Masoor Maulana. During the ceremony, nine employees traveling to Mecca were honored and presented with Hajj guidance handbooks.

The Muslim Majlis administration of the SLPA traditionally honors its employees heading for Hajj every year. On that day, the Khutbah sermon was delivered by Ash-Sheikh Ansar Faleel Maulana (Naleemi), President of the Maruthamunai Jamiyyathul Ulama and Advisor to the Media Division of the All Ceylon Jamiyyathul Ulama. The event was attended by executive members of the Muslim Majlis and numerous port employees.

KR TV Network

KR TV Lankan Voice

Spiritual News



இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் துறைமுக ஊழியர்களுக்கு துறைமுக முஸ்லிம் மஜ்லிஸினால் கௌரவம் Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.