Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹட்டன் டிக்கோயா நகரில் கொடூரம்: வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை

 


ஹட்டன் டிக்கோயா நகரில் கொடூரம்: வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை


ஹட்டன், டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வசித்து வந்த 82 வயதுடைய வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதியினர், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களது பிள்ளைகள் கொழும்பில் இருந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் நீண்டநேரமாகப் பதிலளிக்காததால், பிள்ளைகள் அது குறித்து அக்கம் பக்கத்திலுள்ள அண்டை வீட்டாருக்குத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து கடையைத் திறந்து பார்த்தபோதே தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யட்டுக் கிடந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன், உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


யாரோ ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் திட்டமிட்ட அடிப்படையில் கடைக்குள் புகுந்து இவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் தடையவியல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவினரின் உதவியுடன் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தீவிரமாக மேற்கொண்டு வரப்படுகின்றன.


(2026/05/21. #பர்ஹானா_பதுறுதீன்)

கே ஆர் டிவி நெட்வொர்க்

KR TV லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


හැටන් දික්ඔය නගරයේදී අඹුසැමි යුවළක් තියුණු ආයුධවලින් කපා කොටා කුරිරු ලෙස ඝාතනය කෙරේ: සැකකරුවන් සෙවීම සඳහා හැටන් පොලිසියෙන් දැඩි පරීක්ෂණ


හැටන්, දික්ඔය නගරයේ පිහිටි වසා දමා තිබූ වෙළෙඳසැලක් තුළ පදිංචිව සිටි 82 හැවිරිදි වියේ පසුවූ වයෝවෘද්ධ අඹුසැමි යුවළක් තියුණු ආයුධවලින් කපා කොටා ඉතා කුරිරු ලෙස ඝාතනය කර ඇති බව හැටන් පොලිසිය පවසයි. මෙලෙස ඝාතනයට ලක්ව ඇත්තේ එස්. කාළිමුත්තු සත්තිවේල් (වයස අවුරුදු 82) සහ ඔහුගේ බිරිඳ වන සගුන්තලාදේවි (වයස අවුරුදු 82) යන අයයි.


ඝාතනයට ලක්වූ අඹුසැමි යුවළගේ දරුවන් කොළඹ ප්‍රදේශයේ පදිංචිව සිටින අතර, දීර්ඝ කාලයක් මෙම වෙළෙඳසැලේ ව්‍යාපාර කටයුතු කර ඇති මෙම යුවළ, මෑතකදී ව්‍යාපාර කටයුතු නවතා එහි තනිවම ජීවත් වී ඇති බව පොලිස් මූලික පරීක්ෂණවලදී අනාවරණය වී ඇත. දරුවන් විසින් කොළඹ සිට මොවුන්ට දුරකථන ඇමතුම් ලබා දී ඇති නමුත්, ඊට ප්‍රතිචාර නොදැක්වීම හේතුවෙන් දරුවන් ඒ පිළිබඳව අසල්වාසීන්ට දැනුම් දී තිබේ. ඒ අනුව අසල්වාසීන් පැමිණ වෙළෙඳසැල විවෘත කර බැලීමේදී මෙම ඝාතනය අනාවරණය වී ඇති අතර වහාම හැටන් පොලිසියට ඒ පිළිබඳව දැනුම් දී ඇත.


කිසියම් පුද්ගලයෙකු හෝ පිරිසක් වෙළෙඳසැල තුළට ඇතුළු වී මොවුන්ව ඝාතනය කර පළා යන්නට ඇති බවට පොලිසිය සැකකරයි. සිද්ධිය සම්බන්ධයෙන් ඇඟිලි සලකුණු සහ විද්‍යාත්මක සාක්ෂි ඔස්සේ සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීම සඳහා හැටන් පොලිස් ස්ථානාධිපතිවරයාගේ මෙහෙයවීමෙන් විශේෂ පොලිස් කණ්ඩායම් කිහිපයක් යොදවා වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


(2026/05/21. #අන්කර් පර්හානා බදුර්දීන්)

කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

KR TV ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Elderly Couple Brutally Murdered with Sharp Weapons Inside a Business Location in Hatton Dickoya


An elderly couple aged 82 has been brutally hacked to death with sharp weapons inside a commercial facility where they resided in the Dickoya town area of Hatton, law enforcement authorities reported. The victims have been identified as S. Kalimuthu Sathivel (82) and his wife, Sakunthaladevi (82).


Preliminary police investigations revealed that the couple's children reside in Colombo. The elderly duo, who had managed a business at the location for a long term, had recently ceased commercial operations and lived exclusively inside the premises. The tragedy unraveled when the children attempted to contact them via telephone from Colombo, and receiving no response, alerted the immediate neighbors. Upon forcibly entering and inspecting the shop, neighbors discovered the couple slumped in a pool of blood and promptly notified the Hatton Police.


Police suspect that an unidentified assailant or a group breached the building, committed the double homicide, and fled the scene undetected. Under the direct supervision of the Hatton Officer-in-Charge (OIC), specialized police deployment teams alongside forensic units have been mobilized to track, identify, and apprehend the perpetrators involved.


(2026/05/21. #Reporter Farhana Badurdeen)

KR TV Network

KR TV Lankan Voice

Local News

ஹட்டன் டிக்கோயா நகரில் கொடூரம்: வர்த்தக நிலையத்தினுள் வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை Reviewed by KR TV LANKAN VOICE on மே 21, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.