சர்வதேச மனித உரிமை மற்றும் சமாதான மாநாடு: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு; உயர் விருது வழங்கி கௌரவிப்பு
சர்வதேச மனித உரிமை மற்றும் சமாதான மாநாடு: பிரதம அதிதியாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு; உயர் விருது வழங்கி கௌரவிப்பு
மனிதநேயம், சமாதானம், நீதி, சமத்துவம் மற்றும் உலக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice of Humanity - International Human Rights & Peace Summit 2026” எனும் சர்வதேச மனித உரிமை மற்றும் சமாதான மாநாடு இன்று கொழும்பு BMICH இல் அமைந்துள்ள தாமரைத் தடாக (Lotus Hall) மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உலகளாவிய ரீதியில் அமைதி, மனிதநேயம், மனித உரிமைகள் மற்றும் உலக நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச மட்டத்தில் செயல்படும் International Human Rights Peace Organization (IHR-PO) மற்றும் மகா லங்கேஷ்வரா அறக்கட்டளை (Maha Lankeshwara Foundation) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த மாநாட்டில் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் மதிப்பிற்குரிய தேரருமான இந்திரகாரய தர்மரத்ன தேரர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் திலானி களபதிகே, பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிராந்தியப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், உலக நாடுகள் பலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய இராஜதந்திரிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சர்வதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளான முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக சேவை, மனிதநேயப் பணிகள், சிறந்த தலைமைத்துவம் மற்றும் தேசிய சமாதான முன்னேற்றத்திற்கான உன்னத பங்களிப்புகளைப் பாராட்டி, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு “ஸ்ரீலங்கா அபிமானி கீர்த்தி ஸ்ரீ விஸ்வ பாணி” எனும் மிக உயரிய கௌரவ பட்டம் மற்றும் விசேட சர்வதேச விருது வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
சர்வதேசச் செய்தி
ජාත්යන්තර මානව හිමිකම් සහ සාම සමුළුව කොළඹදී පැවැත්වෙයි: ප්රධාන අමුත්තා ලෙස ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා මහතා සහභාගී වෙයි
මානුෂීයභාවය, සාමය, යුක්තිය, සමානාත්මතාවය සහ ගෝලීය සමගිය ශක්තිමත් කිරීමේ උදාර අරමුණින් සංවිධානය කරන ලද “Voice of Humanity - International Human Rights & Peace Summit 2026” ජාත්යන්තර මානව හිමිකම් සහ සාම සමුළුව අද දින කොළඹ BMICH හි පිහිටි නෙළුම් ශාලාවේදී (Lotus Hall) ඉතා උත්කර්ෂවත් අන්දමින් පවත්වා ඇත.
මෙම අවස්ථාව සඳහා ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ නියෝජ්ය නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා (M.L.A.M. Hizbullah) මහතා ප්රධාන අමුත්තා ලෙස සහභාගී වෙමින් විශේෂ දේශනයක් පවත්වන ලදී. ගෝලීය වශයෙන් සාමය, මානුෂීයභාවය, මානව හිමිකම් සහ ජාතීන් අතර සහයෝගීතාව ප්රවර්ධනය කිරීම සඳහා ක්රියා කරන International Human Rights Peace Organization (IHR-PO) සහ මහා ලංකේෂ්වර පදනම (Maha Lankeshwara Foundation) එක්ව මෙම ජාත්යන්තර සමුළුව සංවිධානය කර තිබුණි.
මෙම සමුළුව සඳහා කැලණිය විශ්වවිද්යාලයේ ජ්යෙෂ්ඨ මහාචාර්ය පූජ්ය ඉන්ද්රගාරය ධර්මරත්න හිමි, කොළඹ විශ්වවිද්යාලයේ ජ්යෙෂ්ඨ මහාචාර්ය තිලානි කළපතිගේ මහත්මිය, මානව හිමිකම් සංවිධානවල නියෝජිතයන්, මහාචාර්යවරුන්, විදේශීය රාජ්යතාන්ත්රිකයන් සහ ජාත්යන්තර සංවිධානවල නියෝජිතයන් ඇතුළු සම්භාවනීය අමුත්තන් රැසක් සහභාගී වූහ. මෙහිදී ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා මහතා සිදු කරන ලද සමාජ සේවා, මානුෂීය මෙහෙවර සහ සාමය වෙනුවෙන් දැක්වූ දායකත්වය අගය කරමින් ඔහු වෙත “ශ්රී ලංකා අභිමානී කීර්ති ශ්රී විශ්ව පාණි” යන උත්තරීතර ගෞරව නාමය ද පිරිනමන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
විදේශීය පුවත්
International Human Rights and Peace Summit Convened at Colombo BMICH; Dr. M.L.A.M. Hizbullah Participates as Chief Guest and Conferred With Prestigious National Title
To structurally reinforce humanism, global peace, justice, equality, and international harmony, the highly anticipated “Voice of Humanity - International Human Rights & Peace Summit 2026” was successfully convened today at the Lotus Hall within the BMICH complex in Colombo.
Dr. M.L.A.M. Hizbullah, Member of Parliament and Deputy Leader of the Sri Lanka Muslim Congress, graced the high-level international assembly as the Chief Guest and delivered the keynote address. The convention was jointly operationalized and managed by the International Human Rights Peace Organization (IHR-PO) and the Maha Lankeshwara Foundation—two prominent sovereign entities working collaboratively to optimize humanitarian baseline rights, conflict resolution frameworks, and cross-border synchronization between global nations.
The apex summit gathered prominent academic and civil dignitaries, including Venerable Indragaraya Dharmaratne Thero, Senior Professor at the University of Kelaniya; Professor Tilani Kalapathige, Senior Professor at the University of Colombo; regional directors of international human rights organizations; globally tracked professors; foreign diplomats representing multiple sovereign states; and structural peace activists. Consequent to his sustained interventions in civil welfare, grassroots humanitarian deployments, institutional leadership, and national peace reconciliation models, Member of Parliament Dr. M.L.A.M. Hizbullah was officially decorated and honored with the prestigious national title “Sri Lanka Abhimani Keerthi Sri Viswa Paani.”
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 24, 2026
Rating:









கருத்துகள் இல்லை: