மட்டக்களப்பு மாவட்ட அபிவிருதி குழுக் கூட்டம் இன்று; மாவட்ட அபிவிருதி குழு கூட்டத்தில் பிரபு MP முன்வைத்த பிரச்சினைகளுக்கு அங்கீகாரம் .
கந்தசாமி பிரபு MP மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு மக்களின் நீண்டகால தீர்வில்லா பிரச்சனைகளின் தீர்வுக்கான முயற்சியில் -குடிநீர் , சுகாதாரம், இலவச படகு சேவை, உட்கட்டமைப்பு மேம்பாடு, வெள்ள அச்சுறுத்தல், யானை மனித மோதல், மேய்ச்சல்தரை விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்றைய மாவட்ட அபிவிருதி குழு கூட்டத்தில் அங்கீகாரம் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சனைகள் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டும் கடந்த கால அரசுகளால் அது ஒரு நிரந்தர தீர்வு காண வழிகோலாக அமையாமல் கால இழுத்தடிப்புகளையே ஏற்படுத்தி வந்தது, இந்த நிலையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களது தலைமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் பிரயத்தனங்களுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இன்று (31.07.2026) வெள்ளிக்கிழமை
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ சுனில் ஹந்துநெத்தி அவர்களின் தலைமையிலும், அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவசியமான பொருத்தமான.
முன்னெடுப்புக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்குப் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் வகையில், மட்டக்களப்பு வாவியை (Lagoon) முறைப்படி நிர்வகிப்பது மற்றும் தூர்வாருவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன,
மட்டக்களப்பு மாநகரப் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகள் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு வாவியின் ஆழம் பெருமளவில் குறைந்து காணப்படுவதே முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு அபாயத்தைக் குறைக்கவும், வாவியின் நீர் தேக்கும் திறனை அதிகரிக்கவும், வாவியை எவ்வாறு பயனுள்ள முறையில் மேலாண்மை செய்யலாம் என்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வை (Feasibility Study) உடனடியாக மேற்கொள்ளுமாறு தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி முகவர் நிறுவனத்திற்கு (NARA) உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களையும் போக்குவரத்து பாதைகளையும் பாதுகாப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் - மண்டூர் மற்றும் பழுகாமம் - கக்கடிகலை படகுச் சேவைகளை இலவசமாக வழங்குமாறு கோருதல்.பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி தொழிலாளர்கள் தமது போக்குவரத்துத் தேவைகளுக்காக குருமண்வெளி - மண்டூர் மற்றும் பளுகாமம் - கக்கடிகலை ஆகிய இரு பிரதான பாதைகளில் இயங்கும் மாகாண சபைக்குட்பட்ட படகுச் (Ferry) சேவைகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக, அன்றாடம் பயணங்களை மேற்கொள்ளும் எமது பகுதி மக்கள் இதற்கான கட்டணத்தைச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, உயர்கல்விக்காகச் செல்லும் மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது கூடுதல் நிதி சுமையாக அமைந்துள்ளமையால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் / மாகாண சபையினால் நிர்வகிக்கப்படும் இந்த இரண்டு படகுச் சேவைகளையும் முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது ,
கித்துல் மற்றும் அதன் அருகாமையிலுள்ள மீனவர் சங்கங்களுக்கு இடையிலான மீன்பிடிப் பிரச்சினைக்கு சுமுகமான முடிவு எட்டப்படும் வரை, மீனவர்கள் அருகாமையிலுள்ள இறங்குதுறையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஊடாக மாவட்டத்தில் உள்ள படகுத்துறைகளை (Landing sites) எல்லை நிர்ணயம் செய்வதற்கான அனுமதி பெறல்.
ஹேலீஸ் ஃபென்டன்ஸ் நிறுவனத்தால் (Hayleys Fentons Limited) மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கோரப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டம் (Solar panel project).
வாழைச்சேனை காகித ஆலையின் (Paper Mill) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நீர் வழங்கல் சபை பொறுப்பேற்றல்.
கோறளைப்பற்று வடக்கு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை) இற்கு குடிநீர் விநியோக ஆதாரமாக கட்டுமுறிவுக் குளத்தைப் பயன்படுத்துவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்திடமிருந்து அனுமதி பெறுதல்.
கோறளைப்பற்று / கோறளைப்பற்று வடக்கு (தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை): குடிநீர் விநியோகத்திற்காக வாகனேரிக் குளத்தைப் பயன்படுத்துவதற்கும், மாதொரு ஓயா நதியிலிருந்து மேலதிக நீரைப் பெறுவதற்கும் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையிடம் அனுமதி பெறுதல்.
அத்துடன் போரதீவுப்பற்று பகுதிக்கு ஹிமுத்துரு வாவியிலிருந்து (Himuthuru Wewa) மேலதிக நீரைத் திருப்புவதற்காக அம்பாறை நீர்ப்பாசன திணைக்களத்திடமிருந்து அனுமதி பெறுதல்.
ஆரம்பப் பள்ளி அபிவிருத்தித் திட்டத்திற்காகத் (Primary school Development project) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கான ஒப்புதல் பெறல்.
ஜனாதிபதியின் தலைமையிலான கடந்த விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன:
மயிலத்தமடு மற்றும் மாதவனை 3,000 ஏக்கர் நிலப்பரப்பை மேய்ச்சல் நிலமாகப் பிரகடனம் செய்து வர்த்தமானியில் வெளியிடுதல்.
நீர்ப்பாசனம் மற்றும் பாலம் அமைத்தல்: முந்தனை ஆறு நதி அபிவிருத்தித் திட்டம், கிரான் - பொண்டுகல்சேனை பாலம், மண்டூர் - குறுமண்வெளி மற்றும் பட்டி இருப்புப் பாலங்கள், அத்துடன் அம்பிலாந்துறை-குறுக்களமடம் திகிலிவெட்டை-சந்திவெளி, நரிப்புல்தோட்டம்-பங்குடாவெளி ஆகிய பாலங்களை அமைத்தல்
மனித-யானை மோதல்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
மட்டக்களப்பு வாவியைப் பாதுகாத்தல் (நாரா நிறுவனம்) மற்றும் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி.
மட்டக்களப்பு சிறைச்சாலையை இடமாற்றம் செய்தல், போதனா வைத்தியசாலையை விரிவாக்கம் செய்தல், குடிநீர் விநியோகத்தை அதிகரித்தல், மற்றும் நெல் கொள்முதல் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல்.
போரதீவுப்பற்று பகுதிக்கு இந்திய அதிகாரிகளால் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட பெயிலி பாலம் (Bailey Bridge) பெறுவதில் ஏற்படும் தாமதம்.
களுதாவளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லைச் சேமிக்க களுதாவளை பொருளாதார மையப்த்தைப் பயன்படுத்த கோரிக்கை.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கியை ஆயுர்வேத வைத்தியசாலைக்குக் கையளித்தல், மகளிர் மற்றும் மகப்பேறியல் பிரிவை அமைத்தல், மற்றும் இரத்த சுத்திகரிப்புப் பிரிவை (Dialysis Unit) விரைவாக இயங்கச் செய்தல்.
மாவட்ட சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் (RDD) ஒப்பந்தப் பணிகளுக்கான பொருத்தமான விலை மாற்றங்கள் (Price Adjustment) குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருதி குழுக் கூட்டம் இன்று; மாவட்ட அபிவிருதி குழு கூட்டத்தில் பிரபு MP முன்வைத்த பிரச்சினைகளுக்கு அங்கீகாரம் .
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 31, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 31, 2026
Rating:

கருத்துகள் இல்லை: