Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு 68வயது பெண் படுகாயம் -


(B.M.பயாஸ்
ஊடகவியலாளர்)

காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய் ஷரீப் வீதியில் வசிக்கும் 68 வயதான  பெண் ஒருவர் வீட்டில் தனியாக வீட்டில் இருந்தபோது 23.08.2026 இன்று மாலை 17.15 மணியளவில் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.



இப்பெண் தனது வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய கடை ஒன்றை நடாத்தி வருகின்றார். பொருட்கள் வாங்குவதற்காக இக் கடைக்கு வந்த இரண்டு சிறுவர்கள்  இந்தப் பெண் காயமடைந்திருப்பதை க்கண்டு அப்பகுதியில் உள்ள பெரியவர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவரை மட்டக்களப்பு வைத்தியாசலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இத் தாக்குதலை நடத்தியவர் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு 68வயது பெண் படுகாயம் - Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 23, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.