සිංහල පරිවර්තනය සමග)அதிகாரத் துஸ்பிரயோகமும், சட்டவிரோத சொத்து குவிப்பும். மக்கள் பிரதி நிதிகளின் கடந்த கால முறைகேடு.
සිංහල පරිවර්තනය සමග)அதிகாரத் துஸ்பிரயோகமும், சட்டவிரோத சொத்து குவிப்பும். மக்கள் பிரதி நிதிகளின் கடந்த கால முறைகேடு.
බලය අනිසි ලෙස භාවිතා කිරීම සහ නීති විරෝධී ලෙස ධනය රැස් කිරීම. පසුගිය රජයේ මුදල් අවභාවිතය
ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நின்ற உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராகத் தராதரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையை இன்றைய அரசினால் முன்னெடுகின்றது.
2015 ஆட்சி மாற்றத்துக்காகவும், தேர்தல் செலவுக்காகவும் கட்சியின் தலைவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் சத்தியம் செய்து தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை இன்னும் விசாரிக்கப்படாமலே இருக்கின்றது.
ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு குறுகிய காலத்தில் ஏராளமான சொத்துக்கள் சேருவதற்கு அரசியல் அதிகார துஸ்பிரயோகம், ஒப்பந்தங்களில் செல்வாக்கு செலுத்துதல், ஊழல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் பணமம் சேர்த்தல் போன்றவைகள் முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. அரசாங்கத்தின் திட்டங்களை கையாளுவதிலும், ஒப்பந்தங்களை வழங்குவதிலும் எம்.பிக்கள் செலுத்தும் செல்வாக்கும், தலையீடுகளும் குறுக்கு வழியில் பணம் சம்பிதிக்க வாய்ப்பாக அமைகின்றது.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலில் மேலாதிக்க வர்க்கத்தினரின் ஆதிக்கம் இருந்தது. பாரம்பரிய மேல்தட்டு மற்றும் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கொள்கை ரீதியான விவாதங்களும் பாராளுமன்ற மரபுசார் ஒழுக்கமும் பேணப்பட்டன. தனிப்பட்ட சுயலாபங்களை விட வர்க்க ரீதியான பார்வை மேலோங்கி இருந்தது என்பதே உண்மை.
1977க்குப் பின்னர் ஏற்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்த இன முரண்பாடுகள் மற்றும் தேர்தல் முறை மாற்றங்கள் ஆகியவை அரசியல் பண்பாட்டில் ஆழமான வீழ்ச்சியை ஏற்படுத்தின. இதனால் சாதி, மதம், மொழி மற்றும் பிராந்திய வாதங்களை முன்னிறுத்தும் அரசியல் கலாச்சாரம் வலுப்பெற்றது.
1977-க்குப் பிந்தைய திறந்த பொருளாதாரச் சூழல் அரசியலில் பணத்தின் வகிபாகத்தை அரசியல் தரகர்கள் மத்தியில் அதிகரித்தது. 1983 இனக் கலவரத்திற்கு பின்னர் இனவாத அரசியல் தீவிரமடைந்ததோடு அடிமட்ட நடுத்தர வர்க்க அரசியல்வாதிகள் பிரவேசித்ததால், அவர்கள் குறுகிய இன, மத உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளைப் பெறும் தந்திரத்தை கையாளத் தொடங்கினர். அதனால் வளங்கள் சுரண்டப்படு ஊழல் அதிகரித்து நிறுவனமயமாதல் (institucionalization) எனும் அரசியல் கலாச்சாரம் உருவாகத் தொடங்கியது.
அதனால், கொள்கை மற்றும் பாரம்பரியப் பெருமைகளைக் கொண்ட "கனவான் அரசியலானது ", 1980களுக்குப் பின் "பணபலம் மற்றும் இனவாதத்தை" மூலதனமாகக் கொண்ட வியாபார அரசியலாக மாறியதே இலங்கையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சரிவுக்கு மிக முக்கிய காரணமாகும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கை போன்ற வளரும் நாடுகளில் சாதாரண நடுத்தர வர்க்கத்திலிருந்து வரும் அரசியல்வாதிகள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் கோடீஸ்வரர்களாக மாறுவதற்கும், ஏலவே பணம்படைத்த அரசியல் தலைவர்கள் பண முதலைகளாக உருவெடுப்பதற்கும் பின்னால் உள்ள முக்கிய காரணங்களான அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் பலவீனமான சட்டக் கட்டமைப்புகள் பிரதானமாக பங்களிப்புச் செய்கின்றன.
இலங்கையின் அரசியல் அமைப்பில் அமைச்சர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் கடந்த காலங்களில் அவ்வாறான அதிகாரங்களை முறைகேடாக சொத்துக்களை குவித்துக்கொள்வதற்கு சாதகமாக அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமது பதவியைப் பயன்படுத்தி அரச நிலங்கள் மற்றும் சலுகைகளைத் தனக்கோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களுக்கோ சாதகமாக மாற்றுதல். கள்ளக்கடத்தல், சட்டவிரோத மணல் அகழ்வு, மதுபான சாலைகளுக்கு அனுமதிபத்திரங்களை பெறுதல் போன்ற விடயங்களுக்கு அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு பணத்தினை ஈட்டிக்கொள்ளும் புதிய அரசியல் கலாச்சாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டது.
அபாயகரமான போதைப்பொருள் உற்பத்தி, போதைப்பொருள் கடத்தல் விடயங்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முறையான கள ஆய்வு செய்யப்படாத திட்டங்களுக்கு பாரிய வெளிநாட்டு கடன் அதிக வட்டித்தொகைக்கு பெறப்பட்டு அவற்றில் பாரிய தொகைகள் இலஞ்சமாக அரசியல்வாதிகள் கைமாற்றிக்கொண்டனர்
தனது பெயரில் இல்லாமல் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பெயரில் (Proxy) நிறுவனங்களைத் தொடங்கி, அரச ஒப்பந்தங்களை அவர்களே மறை முகமாக பெற்றுக்கொள்ளல். அரசின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் (புதிய நெடுஞ்சாலைகள், நகர விரிவாக்கம்) பற்றி முன்கூட்டியே அறிந்து, அந்தப் பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கிப் பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரம் சாதாரணமாக இடம் பெற்றது.
பெரும் வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை தனியார் நிறுவன கொந்துராத்து காரர்களுக்கு வழங்கும் போது, அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை இரகசிய (Commission) இலஞ்சமாக வழங்கப்பட்டது. மேலும், தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களின் பெயரில் போலியான நிறுவனங்களை (Shell Companies) ஆரம்பித்து, அரசு டெண்டர்களை தமக்கே பெற்றுக்கொண்டார்கள்.
இதற்கெல்லாம் முக்கிய காரணமாக கடந்தகால அரசாங்க காலங்களில் இலங்கையில் அரசியல்வாதிகள் தங்களின் சொத்து விபரங்களை (Declaration of Assets and Liabilities) பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்துவதில் வெளிப்படை தன்மை மறைக்கப்பட்டிருந்தது. அதனால் சொத்துக்களை மறைப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது.
மேலும், பெரும் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பில்லியன் கணக்கில் நிதியளிப்பவர்களாக இருந்தார்கள். அதற்குப் பிரதிபலனாக, அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் வரி விலக்குகள், இறக்குமதி ஏகபோக உரிமைகள் (Monopoly) போன்ற சலுகைகளைப் பெற்று, அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை அரசியல்வாதிகளுடன் பகிர்ந்து கொள்ளும் எழுதப்படாத அரசியல் சாசன கலாச்சாரமே கடந்த காலத்தில் இருந்தது.
இவைகளை கண்டுபிடிப்பதற்கான பல்வேறுபட்ட சட்ட ஏற்பாடுகளுடன், ஒவ்வொரு வருடமும் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவை முறையாக நடை முறைப்படுத்தப்படவோ அல்லது விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படடவோ இல்லை. ஆட்சியில் இருந்த கட்சிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதே அவ்வாறனவர்களின் விளையாட்டாக இருந்து வந்தது.
பல நேரங்களில், மக்கள் பிரதிநிதிகளின் ஊழல்களை விட அவர்களின் சாதி, மதம் அல்லது கட்சிப் பின்னணிக்கே வாக்காளர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றவர்களாக இருந்தார்கள். இதனால் தவறு செய்யும் அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தப்பித்துக் கொள்வதற்கான வழிகள் அதிகமாகவே இருந்தது.
அத்தோடு, ஊழலை விசாரிக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) போன்ற அமைப்புகள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டதாகவே இயங்கின. இதனால் உயர்மட்ட அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் முடக்கத்தில் இருந்தன. தற்பொழுது ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி சகலதும் சுயாதீனமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற வளரும் நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்கும், அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தரகர்கள் மூலம் பெருமளவிலான நிதிப் பரிமாற்றங்கள் நடப்பதாகப் பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும் உளவுத்துறை அறிக்கைகளும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள்.
தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சித் தலைவர்களை விலைக்கு வாங்க வெளிநாட்டு முகவர்களால் இரகசியமாகப் பேரம்பேசப்படுவதும், அதற்காக பெரும் தொகைப்பணம் கைமாறப்படுவதும் சாதாரணமாக இருந்தது. நாட்டின் பாதுகாப்பைக் குலைத்து, ஆட்சியைப் பலவீனப்படுத்த இத்தகைய குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதினால் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக்களை மேலும் அதிகமாக குவித்துக் கொண்டார்கள்.
இதற்கெல்லாம் சிறந்த உதாரணமாக, 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்தி, மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான தேர்தல் செலவுகளுக்காகவும், அரசியல் ரீதியான ஆதரவு மாற்றத்திற்காகவும் பிரதான முஸ்லிம் கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிதியிலிருந்து அதன் தலைவர் தனக்கு ஒரு கோடி ரூபாய் (ரூபா 10,000,000) வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் சத்தியம் செய்து தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
குறித்த தொலைக்காட்சியில் ஊடகவியலாளர் முஸாரப் தலைமையில் இடம் பெற்ற "அதிர்வு" நேர்காணலில் குறித்த பசீர் சேகு தாவூத்தின் வாக்குமூலம், இலங்கையின் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக அன்று பார்க்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் எவ்வித விசாரணைகன் ஏதுமின்றி மூடி மறைக்கப்பட்டதுடன், இற்றை வரைக்கும் அக்காணொளியானது இலஞ்ச ஊழல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத ஒன்றாக சமூக வலைத்தளமான யூ.டியூப்பில் எல்லோரும் பார்க்கும் படியாகவே உள்ளது.
எனவே, கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்த அரசியல்வாதிகள், அதற்குத் துணை நின்ற சிறிய மற்றும் பெரிய மட்டத்திலான அரச அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடை முறைப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே மக்கள் தற்போதைய NPP அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் பிரதான நம்பிக்கையாகும்.
அதற்காக ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்ககள் சக்தி அரசாங்கமானது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC), நீதித்துறை மற்றும்பொலிஸ் ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடுமின்றியும், சுயாதீனமாகவும் செயற்படுவதை உறுதி செய்ய புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோதமான முறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் (Unexplained Wealth) ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் முறையிடப்படும் போது, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது (CIABOC) விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கிறது.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது விபரங்களை மறைத்தாலோ சட்டப்படி அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அல்லது மந்தகதியில் இருந்த பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிறப்புப் பிரிவுகள் மீண்டும் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளன.
மேலும், வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இலங்கைக்குச் சொந்தமான பொதுப் பணத்தையும் சொத்துக்களையும் கண்டறிந்து மீட்பதற்காக, உலக வங்கி (World Bank) மற்றும் ஐநா சபையின் STARI (Stolen Asset Recovery Initiative) போன்ற சர்வதேச அமைப்புகளுடன் அரசாங்கம் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டில் முறைகேடாக அரசியல் அதிகாரத்தினூடாக அரசியல்வாதிகளின் பெயரிலும் அவர்களின்பினாமிகளின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ள அரசகாணிகளுக்கான ஒப்பங்கள் மற்றும் தேவைக்கு அதிகமாக குத்தகை என்ற பெயரில் கையாளப்பட்டுள்ள பெறுமதியான அரச நிலங்கள் என்பவைகள் திரும்ப பெறப்படுவதோடு, களவாடப்பட்ட சொத்துக்கள் எல்லாம் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்ற மக்களின் ஒருமித்த கோசம் மேலெழுந்துள்ளது.
அதனடிப்படையில், முறைகேடாகச் சேர்த்த சொத்துக்களை முழுமையாக அரசாங்கத்தின் வசமாக்குவதற்கு (Asset Recovery) தேவையான புதிய சட்ட மூலங்கள் மற்றும் திருத்தங்களை பாராளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி, ஊழலுக்குத் துணைபோகும் உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் நடைபெற்ற அமைச்சுகள் மட்டத்திலான கொள்வனவுகள் மற்றும் முறைகேடான ஒப்பந்தங்கள் சம்பந்தமாக மீண்டும் கடுமையான தோண்டப்பட்டு உண்மைகளை கண்டறிவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன.
ஆகவே, நாட்டு மக்களின் எதிர்பார்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டும் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பன விரைவாகவும் தடையின்றியும் அவர்களது கடமைகளைச் செய்கின்றன என்பதில் நாட்டு மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றார்கள் என்பதே உண்மை.
அஹமட் இர்ஷாட்.
தினகரன் வாரமஞ்சரி
23-08-2026.
அதிகாரத் துஸ்பிரயோகமும், சட்டவிரோத சொத்து குவிப்பும். மக்கள் பிரதி நிதிகளின் கடந்த கால முறைகேடு.
බලය අනිසි ලෙස භාවිතා කිරීම සහ නීති විරෝධී ලෙස ධනය රැස් කිරීම. පසුගිය රජයේ මුදල් අවභාවිතය.
දූෂිත දේශපාලනඥයන්ට සහ ඔවුන්ට සහය දුන් රජයේ ඉහළ නිලධාරීන්ට එරෙහිව දැඩි නීතිමය ක්රියාමාර්ග ගැනීමට වත්මන් රජය යාන්ත්රණයක් හඳුන්වා දී ඇත.
හිටපු අමාත්ය බෂීර් සේගු-දාවුද් 2015 පාලන වෙනසට සහ මැතිවරණ වියදම් සඳහා පක්ෂ නායකයා රුපියල් කෝටියක මුදලක් ලබාදුන් බවට රූපවාහිනී වැඩසටහනකදී ප්රසිද්ධියේ ප්රකාශ කළ බවට දිවුරුම් දීම සම්බන්ධයෙන් තවමත් විමර්ශනයක් නැහැ.
+++++++++++++++++
දේශපාලන බලය අයුතු ලෙස භාවිතා කිරීම, කොන්ත්රාත්තුවලට බලපෑම් කිරීම, දූෂණය සහ නීතිවිරෝධී ක්රියාකාරකම් හරහා මුදල් විශුද්ධිකරණය කිරීම සාමාන්ය මන්ත්රීවරයෙකුට කෙටි කාලයක් තුළ විශාල ධනයක් රැස් කිරීමට ප්රධාන හේතුව ලෙස සැලකේ. පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්ගේ බලපෑම් සහ රජයේ වැඩසටහන් හැසිරවීමට සහ කොන්ත්රාත් ලබාදීමට මැදිහත්වීම දේශසීමා හරහා මුදල් ඉපැයීමේ අවස්ථාවකි.
නිදහසින් පසු ශ්රී ලංකා දේශපාලනය ආධිපත්යය දැරුවේ පාලක පන්තිය විසිනි. සාම්ප්රදායික ඉහළ පන්තිය සහ ඉංග්රීසි උගත්තු නියෝජනය විය. ප්රතිපත්තිමය වාද විවාද සහ සම්ප්රදායික පාර්ලිමේන්තු විනය පවත්වාගෙන ගියා. කාරනය නම් පන්ති දැක්ම පුද්ගලික අවශ්යතා අභිබවා පැවති බවයි.
1977 න් පසු විවෘත ආර්ථික ප්රතිපත්තිය සමඟ ඒකාබද්ධ වූ වාර්ගික ආතතීන් සහ මැතිවරණ ක්රමයේ වෙනස්කම් දේශපාලන සංස්කෘතියේ ගැඹුරු පරිහානියට හේතු විය. මෙමගින් කුල, ආගම, භාෂා, ප්රාදේශීයවාදය යන දේශපාලන සංස්කෘතිය ශක්තිමත් විය.
1977 න් පසු විවෘත ආර්ථික පරිසරය දේශපාලන තැරැව්කරුවන් අතර දේශපාලනයේ මුදල් භූමිකාව වැඩි කළේය. 1983 වාර්ගික කෝලාහලයෙන් පසු වාර්ගික දේශපාලනය තීව්ර වීමත් බිම් මට්ටමේ මධ්යම පාන්තික දේශපාලනඥයින්ගේ ආගමනයත් සමඟ පටු වාර්ගික හා ආගමික හැඟීම් අවුස්සමින් ඡන්දය ලබා ගැනීමේ උපක්රම අනුගමනය කළහ. එබැවින් සම්පත් සූරාකෑම හා දූෂණය වැඩි වී ආයතනිකකරණයේ දේශපාලන සංස්කෘතිය මතුවීමට පටන් ගත්තේය.
එබැවින් ප්රතිපත්ති සහ සාම්ප්රදායික අභිමානයෙන් යුතු "කැනේඩියානු දේශපාලනය" 1980 දශකයෙන් පසු "මුදල් බලය සහ ජාතිවාදය" මත ප්රාග්ධන කරගත් ව්යාපාරික දේශපාලනය බවට පත් වූ ශ්රී ලංකාවේ වත්මන් දේශපාලන හා ආර්ථික කඩාවැටීමට ප්රධානතම හේතුව ලෙස හඳුනා ගැනේ.
ඒ ආකාරයට සාමාන්ය මධ්යම පාන්තික දේශපාලනඥයන් ඉතා කෙටි කාලයකින් මෙගා කෝටිපතියන් වී වෙන්දේසියෙන් මුදල් ගෙවන දේශපාලන නායකයන් මුදල් කිඹුලන් ලෙස බිහිවන ලංකාව වැනි දියුණු වෙමින් පවතින රටවල බලය අයුතු ලෙස භාවිතා කිරීම, දූෂණය සහ දුර්වල නීති රාමු ප්රධාන වශයෙන් දායක වේ.
ශ්රී ලංකාවේ දේශපාලන ක්රමය තුළ ඇමතිවරුන්ට සහ මහජන නියෝජිතයන්ට ඕනෑවට වඩා බලයක් ලබාදී ඇත. ඕනෑම ව්යාපෘතියක් සඳහා මුදල් වෙන් කිරීමට ඔවුන්ට බලය ඇත. අතීතයේ මෙවැනි බලතල දේශපාලඥයන් විසින් නීති විරෝධී ලෙස ධනය රැස්කර ගැනීමට යොදා ගන්නා ලදී.
තම තනතුර යොදා ගනිමින් රජයේ ඉඩම් සහ සහන තමාට හෝ තමාට හිතවත් අයට පක්ෂව පැවරීම. නීතිවිරෝධී ලෙස වැලි ගොඩදැමීම, ජාවාරම් කිරීම, මත්පැන් පාරවල් සඳහා බලපත්ර ලබා ගැනීම සඳහා දේශපාලන බලපෑම් යොදා ගනිමින් මුදල් ඉපැයූ නව දේශපාලන සංස්කෘතියකට ජනතාව යොමු කර ඇත.
භයානක මත්ද්රව්ය නිෂ්පාදනයට සහ මත්ද්රව්ය ජාවාරමට දේශපාලන රැකවරණය ලබා දුන්නා. නිසි ක්ෂේත්ර අධ්යයනයකින් තොරව ව්යාපෘති සඳහා ඉහළ පොලී අනුපාත යටතේ දැවැන්ත විදේශ ණය ලබාගෙන අල්ලස් වශයෙන් දේශපාලකයන් සමඟ අතිවිශාල මුදල් හුවමාරු විය.
තමන්ගේ නමින් නොව ඥාතීන්ගේ හෝ මිතුරන්ගේ නමින් (Proxy) සමාගම් ආරම්භ කර හොර රහසේ රජයේ කොන්ත් රාත් ලබා ගැනීම. රජයේ ඉදිරි සංවර්ධන සැලසුම් (අලුත් අධිවේගී මාර්ග, නාගරික ව්යාප්තිය) ගැන කල්තියා දැනගෙන අඩු මිලට ඉඩම් මිලදී ගෙන වැඩි මිලට විකිණීමේ ව්යාපාරය සාමාන්ය දෙයක් විය.
ප්රධාන මාර්ග, පාලම්, ගොඩනැගිලි ඇතුළු යටිතල පහසුකම් ව්යාපෘතිවල කොන්ත්රාත් පෞද්ගලික අංශයේ කොන්ත්රාත්කරුවන්ට ලබා දෙද්දී දේශපාලනඥයන්ට විශාල රහස් කොමිස් ගෙවන ලදී. එමෙන්ම තම පවුලේ සාමාජිකයන්ගේ හෝ හිතවතුන්ගේ නමින් ව්යාජ සමාගම් (ෂෙල් සමාගම්) ආරම්භ කර තමන්ට රජයේ ටෙන්ඩර් ලබා ගත්හ.
මේ සියල්ලටම ප්රධාන හේතුව ලංකාවේ පසුගිය රජය සමයේ දේශපාලකයින් තම වත්කම් (වත්කම් බැරකම් ප්රකාශය) ප්රසිද්ධියේ හෙළිදරව් කිරීමේ විනිවිදභාවය සැඟවී තිබීමයි. එබැවින් ඔවුන්ට වත්කම් සැඟවීමට පහසුය.
ඒ වගේම මහා ව්යාපාරිකයන් දේශපාලනඥයන්ගේ මැතිවරණ ව්යාපාරයට බිලියන ගණන් මුදල් යොදවා තිබුණා. මේ නිසා බදු නිදහස් කිරීම්, ආනයන ඒකාධිකාරී අයිතීන් (Monopoly) වැනි සහන ලබාගෙන බලයට පත් වූ පසු එහි ලාභය දේශපාලකයන් සමඟ බෙදා ගන්නා අලිඛිත ව්යවස්ථාමය සංස්කෘතියක් අතීතයේ පැවතුණි.
වසරක් පාසා වත්කම් වාර්තා ඉදිරිපත් කළ යුතු බවට නීතියක් තිබුණද, ඒවා සොයා ගැනීමට විවිධ නීතිමය විධිවිධාන සමඟින්, පසුගිය කාලය තුළ ඒවා නිසියාකාරව ක්රියාත්මක කිරීම හෝ විමර්ශනය කර දඬුවම් පැමිණවීම සිදු නොවීය. පාලක පක්ෂවල බලපෑම යොදාගෙන දූෂණ මර්දන ඒකකයේ පරීක්ෂණ මගහැරීම ඔවුන්ගේ සෙල්ලම විය.
බොහෝ අවස්ථාවලදී ඡන්දදායකයින් මහජන නියෝජිතයින්ගේ දූෂණයට වඩා ඔවුන්ගේ කුලය, ආගම හෝ පක්ෂ පසුබිමට වැදගත්කමක් ලබා දුන්නේය. වැරදි කරන දේශපාලකයන්ට නැවත නැවතත් පැන යාමට බොහෝ මාර්ග මෙයින් ඉතිරි විය.
මීට අමතරව, දූෂණ විමර්ශනය කරන දූෂණ විරෝධී කොමිසම (CIABOC) වැනි ආයතන බොහෝ විට දේශපාලන බලපෑම් යටතේ ක්රියාත්මක වේ. එහි ප්රතිඵලයක් ලෙස ඉහළ පෙළේ දේශපාලනඥයන්ට එරෙහි පරීක්ෂණ නතර විය. මේ වන විට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව සියල්ල ස්වාධීන කර ඇත.
ශ්රී ලංකාව වැනි සංවර්ධනය වෙමින් පවතින රටවල විවිධ දේශපාලන විශ්ලේෂකයින් සහ බුද්ධි අංශ වාර්තා නිරන්තරයෙන් පෙන්වා දී ඇත්තේ පාලන තන්ත්ර වෙනස් කිරීම, දේශපාලනය අස්ථාවර කිරීම සහ ආණ්ඩු පෙරළීම සඳහා දේශීය හා විදේශීය තැරැව්කරුවන් හරහා මහා පරිමාණ මූල්ය හුවමාරු කිරීම් සිදු වන බවයි.
මැතිවරණ ව්යාපාර සහ පක්ෂ නායකයන් මිල දී ගැනීම සඳහා විදේශීය නියෝජිතයන් විදේශීය නියෝජිතයන් සමඟ රහසිගතව සාකච්ඡා කිරීම සාමාන්ය දෙයක් වූ අතර ඒ සඳහා විශාල මුදල් හුවමාරු විය. මෙවැනි කණ්ඩායම් රටේ ආරක්ෂාව කඩාකප්පල් කිරීමට සහ පාලනය දුර්වල කිරීමට මුදල් යොදවන නිසා දේශපාලනඥයන් තම ධනය තවත් රැස්කරගෙන ඇත.
2015 ජනාධිපතිවරණයේදී මහින්ද රාජපක්ෂ පාලනය පෙරළා මෛත්රීපාල සිරිසේන බලයට ගෙන ඒම සඳහා ප්රධාන මුස්ලිම් පක්ෂයට මැතිවරණ වියදම් සඳහා ලබා දුන් බව කියන මුදලින් රුපියල් කෝටියක් (රුපියල් 10,000,000) තම නායකයා තමන්ට ලබා දුන් බව හිටපු අමාත්ය බසීර් සේගුදාවුඩ් රූපවාහිනී වැඩසටහනකදී ප්රසිද්ධියේ පිළිගත්තේය.
මාධ්යවේදී මුෂාරෆ්ගේ නායකත්වයෙන් යුත් ඉහත කී රූපවාහිනියේ සිදු වූ "අතිර්වු" සම්මුඛ සාකච්ඡාවේදී පසීර් සේඛු දාවුද්ගේ පාපොච්චාරණය ශ්රී ලංකා දේශපාලන ඉතිහාසයේ බලවත් කම්පන ඇති කළ වැදගත් සිදුවීමක් ලෙස සැලකේ. නමුත් කාලයාගේ ඇවෑමෙන් කිසිදු පරීක්ෂණයකින් තොරව එය යට ගැසූ අතර මේ වන තෙක් එම වීඩියෝව අල්ලස් වංචාව සම්බන්ධයෙන් විමර්ශනයට නොගත් අතර එය යූ ටියුබ් හි සැමට නැරඹීමට ඉතිරිව ඇත.
එබැවින් දේශපාලන බලය අවභාවිත කර නීතිවිරෝධී ලෙස ධනය රැස්කළ දේශපාලකයන්ට සහ පසුගිය කාලයේ ඊට අනුබල දුන් රාජ්ය නිලධාරීන්ට එරෙහිව නීතිය අකුරටම ක්රියාත්මක කර දඬුවම් දිය යුතු බව වත්මන් එජාප ආණ්ඩුවේ ජනතාවගේ ප්රධාන බලාපොරොත්තුවයි.
ඒ සඳහා අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC), අධිකරණය, පොලිස් කොමිෂන් සභාව වැනි රාජ්ය ආයතන ස්වාධීනව සහ දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොරව ක්රියාත්මක වන බවට සහතික වීම සඳහා ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය විසින් නව නිලධාරීන් පත් කර පරීක්ෂණ කඩිනම් කර ඇත.
මන්ත්රීවරුන්ට පැහැදිලි කළ නොහැකි වත්කම් පිළිබඳ චෝදනා එල්ල වූ විට අල්ලස් හෝ දූෂණ විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) ස්වාධීන පරීක්ෂණ පවත්වයි.
ඒ අනුව සෑම වසරකම ජූනි 30 වැනිදාට පෙර පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් තම දේපළ තොරතුරු ඉදිරිපත් කළ යුතුය. සාවද්ය තොරතුරු සැපයීම හෝ එවැනි තොරතුරු වසන් කිරීම නීතියට අනුව දඩයක් සහ සිරදඬුවම් ලැබිය හැකිය.
පසුගිය කාලයේ ඇණහිට තිබූ හෝ අක්රියව පැවති දැවැන්ත මූල්ය වංචා පිළිබඳ විමර්ශන සහ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ (CID) විශේෂ ඒකක යළි සිය කටයුතු ආරම්භ කර තිබේ.
තවද, ශ්රී ලංකාවේ මහජන මුදල් සහ විදේශයන්හි සඟවා ඇතැයි සැලකෙන වත්කම් හඳුනාගෙන ආපසු අයකර ගැනීම සඳහා රජය ලෝක බැංකුව සහ එක්සත් ජාතීන්ගේ STARI (Stolen Asset Recovery Initiative) වැනි ජාත්යන්තර සංවිධාන සමඟ නිල සාකච්ඡා පවත්වයි.
දේශපාලඥයින්ගේ සහ ඔවුන්ගේ නියෝජිතයින්ගේ නමින් මෙරට පවතින අනවසර දේශපාලන බලය හරහා ලබාදී ඇති රජයේ ඉඩම් සහ අධික ලෙස බදු දීමේ නාමයෙන් ගණුදෙණු කර ඇති රජයේ වටිනා ඉඩම් නැවත ලබාගෙන රාජසන්තක කර ඇති දේපළ සියල්ල ජනසතු කළ යුතු බවට ජනතාවගේ එකගතාවක් මතුව තිබේ.
ඒ මත වත්කම් අයකර ගැනීම සඳහා නව නීතිමය මූලාශ්ර සහ සංශෝධන පාර්ලිමේන්තුව හරහා ගෙන ඒමට කටයුතු කරමින් සිටිනවා.
එපමණක් නොව දූෂණයට සම්බන්ධ දේශපාලනඥයන්ට පමණක් නොව රජයේ ඉහළ නිලධාරීන්ට එරෙහිවද නීතිමය ක්රියාමාර්ග ගැනීමේ යාන්ත්රණයක් නිර්මාණය වී ඇති අතර පසුගිය ඇමැති මට්ටමේ මිලදී ගැනීම් නීති විරෝධී කොන්ත්රාත්තු සම්බන්ධයෙන් ගැඹුරට හාරා කරුණු සෙවීමට ප්රතිපාදන ද සකස් වෙමින් පවතී.
එබැවින් ජනතා අපේක්ෂාවන් ඉටුකිරීම සඳහා ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජනබල රජය ලබාදුන් පොරොන්දුව පරිදි අධිකරණ හා විමර්ශන ආයතන සහ අල්ලස් හෝ දූෂණ කොමිසම තම රාජකාරිය කඩිනමින් සහ බාධාවකින් තොරව ඉටුකරන බවට රටේ ජනතාවට නොසැලෙන විශ්වාසයක් ඇති බව සැබෑය.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් වරමංජරි
23-08-2026.
සිංහල පරිවර්තනය සමග)அதிகாரத் துஸ்பிரயோகமும், சட்டவிரோத சொத்து குவிப்பும். மக்கள் பிரதி நிதிகளின் கடந்த கால முறைகேடு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 23, 2026
Rating:


கருத்துகள் இல்லை: