සිංහල පරිවර්තනය සමඟ)சந்தர்ப்பவாத வியாபாரமாக உருமாறிய முஸ்லிம்களின் கனவான் அரசியல்.
(அஹமட் இர்ஷாட்)
සිංහල පරිවර්තනය සමඟ)சந்தர்ப்பவாத வியாபாரமாக உருமாறிய முஸ்லிம்களின் கனவான் அரசியல்.
சேர்.ராசிக் பரீட், டி.பி.ஜாயா, பாக்கீர் மார்க்கார், டொக்டர் பதியுதீன் மஹ்மூட், ஏ.சி.எஸ்.ஹமீத் போன்றவர்களிடம் அடகு வைக்கும் "வியாபார அரசியல்" இருக்கவில்லை.
நாட்டின் பிரதான தேசியக் கட்சிகளுடன் இணைந்து நின்று, தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களைப் பயணிக்கச் செய்த முஸ்லிம் அரசியல் தலைவர்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.
அரசியல் தலைவர்கள் மீதான பொதுமக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் நம்பிக்கையில் சமீபகாலமாக தளர்வு ஏற்பட்டுள்ளதாக சமூக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு வரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் கரையோர பொழுது போக்குகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும், அது தொடர்பான விமர்சனங்களும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முநூல்களில் பதிவேற்றப்படும் கிழக்கிற்கு வரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சமகால கரையோர ஆடல் பாடல் காட்சிகள் மேலும் அதனை உறுதிப்படுத்துகிறது.
சமகாலத்தில் முஸ்லிம் அரசியலில் இருக்கின்ற நேர்மையான நபர்களில் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஒருவர் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டி உள்ளார்.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் சேர் ராசிக் பரீட், டி. பி. ஜாயா, டொக்டர் பதியுதீன் மஹ்மூட், ஏ. சி. எஸ். ஹமீத், பாக்கீர் மார்க்கார் போன்ற தலைவர்கள் இன நல்லுறவு, கல்வி மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை முதன்மையாகக் கொண்டு ஆளுமையுடன் செயலாற்றினர்; அவர்கள் குறுகிய சுயநல அரசியலைத் தாண்டி தேசத்திற்குப் பெருமையும் சேர்த்தனர்.
இவர்களை போன்றவர்கள் சுயநலமற்ற, தூரநோக்குடைய மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்திய அரசியலை மேற்கொண்டவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும். இவர்கள் சமூகம் மற்றும் தேசம் ஆகிய இரண்டையும் சமமாகப் பாவித்து, இனங்களுக்கு இடையில் பாலமாகச் செயற்பட்டனர்.
டி. பி. ஜாயா (T. B. Jayah) முஸ்லிம் சமூகத்தின் கல்விப் பின் தங்கிய நிலையை மாற்ற பாடுபட்டார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியை ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக முழுமையாக நின்று உழைத்தவர். "முஸ்லிம்களின் உரிமைகளை விட நாட்டின் சுதந்திரமே முக்கியம்" என அரச சபையில் முழங்கி, தேசிய ஒற்றுமைக்கு வழிகாட்டிய வரலாறுகளை விட்டுச்சென்றுள்ளார்.
டொக்டர். பதுர்தீன் மஹ்மூத் (Dr. Badr-ud-din Mahmud) இலங்கையின் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், முஸ்லிம் கிராமங்கள் தோறும் அரச பாடசாலைகளை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியர்களை நியமித்து முஸ்லிம் சமூகத்தினுடைய கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அத்தோடு இன மத மொழி வேறுபாடுகளுக்கு பாடசாலைக் கல்வியை தேசியம் பூராக நிலை நாட்டியவர் என்ற பெயரையும் கொண்டுள்ளார்.
சேர். ராசிக் பரீத் (Sir Razik Fareed) முஸ்லிம் பெண்களின் கல்விக்காகப் போராடியவர். கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியை (Muslim Ladies' College) நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார். தன்னை ஒரு "இலங்கையர்" என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொண்ட ஒருவராவார்.
சிங்கள, தமிழ் தலைவர்களுடன் சுமுகமான உறவைப் பேணி, இன நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமான ஒருவராக இன்றும் பேசப்படுகின்றார்.
ஏ. சி. எஸ். ஹமீட் (A. C. S. Hameed) இலங்கையின் நீண்டகால வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியவர். சர்வதேச அரங்கில் இலங்கைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் கீர்த்தியைப் பெற்றுத் தந்தார். இனப்பிரச்சினைக்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார் என்ற பார்வையும் உள்ளது.
அதே போன்று எம். ஏ. பாக்கீர் மார்க்கார் (M. A. Bakeer Markar) நாடாளுமன்ற சபாநாயகராகவும், ஆளுநராகவும் நேர்மையுடன் பணியாற்றினார். அனைத்து இன மக்களாலும் மதிக்கப்பட்ட ஒரு சிறந்த ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார்.
அவரைப்போலவே சிறந்த அரசியல்வாதியாகவும் நடுநிலை சிந்தனையாளராகவும் இருந்துள்ளார். அவருடைய புதல்வர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் சமகால முஸ்லிம் அரசியலில் இருக்கின்றார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டி இருக்கின்றமை முக்கிய விடயமாகும்.
இவ்வாறான முஸ்லிம் தலைவர்கள் எல்லாம்,வாக்குகளைப் பெறுவதற்காக இனவாதத்தையோ அல்லது உணர்ச்சிவசப்படும் கோஷங்களையோ பயன்படுத்தவில்லை.
சுயலாபங்களுக்காக கட்சி தாவும் அல்லது அமைச்சுப் பதவிகளுக்காக கொள்கைகளை அடகு வைக்கும் "வியாபார அரசியல்" இவர்களிடம் இருக்கவில்லை. நாட்டின் பிரதான தேசியக் கட்சிகளுடன் இணைந்து நின்று, தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களைப் பயணிக்கச் செய்த முஸ்லிம் அரசியல் தலைவர்களாக வாழ்ந்து காட்டினார்கள்.
ஆனால், 1985 ஆம் ஆண்டிற்குப் பின்னரான இலங்கை முஸ்லிம் அரசியல், சுயலாப அரசியலை நோக்கி பயணிக்கின்றது என்ற கருத்தாடல் சமகால அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரவலாக விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் அவதானிப்பாகும்.
அந்த வகையில், 1980களின் நடுப்பகுதி (குறிப்பாக 1985 ஆம் ஆண்டுக்குப் பின்) இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். அதுவரைக்கும் தலை நகரை மையமாக கொண்டிருந்த பாரம்பரிய மற்றும் கொழும்பு வர்க்கரீதியான அரசியல் அணுகுமுறையில் இருந்து விலகி எம்.எச்.எம். அஷ்ரப் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தனித்துவமான அரசியல் இயக்கம் வலுப்பெற்றது. அது இலங்கைத் தேசிய அரசியலில் ஒரு சமூகம் சார்ந்த பேரம் பேசும் சக்தியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டது.
ஆட்சியமைக்க பெரும்பான்மை பலமில்லாத பிரதான கட்சிகளுடன் இணைந்து, அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் கட்சிகள் மாறின. இது சமூக நலனைத் தாண்டி, தனிப்பட்ட பதவிகளுக்கான பேரமாக மாறியதாக பல கோணங்களில் இருந்தும் வெளிப்படும் கடுமையான விமர்சனங்களும் உள்ளன.
கொள்கை ரீதியான இணக்கப்பாடுகளை தாண்டி, தற்காலிக அரசியல் இலாபங்கள் மற்றும் அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கங்களுக்கு ஆதரவளிக்கும் போக்குககள்முதன்மை பெறத்தொடங்கின.
அத்தோடு, தலைமைத்துவ போட்டி காரணமாக, உட்கட்சி முரண்பாடுகளால் முஸ்லிம் கட்சிகள் பல துண்டுகளாக பிரிந்தன. இது சமூகத்தின் பேரம் பேசும் சக்தியைக் குறைத்து, தலைவர்களின் குறுகிய கால அரசியல் நலனுக்கே வழி வகுத்ததோடு, சுயலாபத்தைப் பாதுகாக்கும் அரசியலாக மாறியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தனித்துவ அரசியல் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட சில நகர்வுகள், ஏனைய சமூகங்களுடன் இருந்த நல்லுறவை பாதித்ததோடு, பேரினவாத சக்திகளின் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தன. சாதாரண மக்களின் தேவைகளை விட, அரசியல் பிரமுகர்களின் பொருளாதார மற்றும் அதிகார பலமே முதன்மைப் படுத்தப்படுவதாக தற்போதுள்ள முஸ்லிம் சமூகமும், இளைஞர் சமூதாயமும் உணர்ந்து கொள்ளும் படியாகவும் மாறியுள்ளது.
அந்த வகையில்,1985 இற்குப் பிந்தைய முஸ்லிம் அரசியலானது ஒரு தனிச் சமூகமாக முஸ்லிம்களை ஓரளவு அடையாளப்படுத்தியிருந்தாலும், அது காலப்போக்கில் சமூக நலனை விடுத்து "சுயலாப மற்றும் அமைச்சுப் பதவி" அரசியலாகவே சுருங்கிவிட்டது என்ற விமர்சனங்கள் வலுவான உண்மைகளைக் கொண்டுள்ளது. அவைகள் நிகழ்கால அரசியல் கலாச்சாரத்தில் நிரூபிக்கப்பட்டும் வருகின்றன.
முஸ்லிம்களின் அரசியல் என்பது சமூக நலனுக்காக இல்லாமல், தனிப்பட்ட இலாபத்திற்காக மாற்றப்பட்டுள்ளது. தலைவர்கள் தமது சொந்த இலாபத்திற்காகவும், பதவிக்காகவும் இன, மத அடையாளங்களை விற்பனை செய்யும் முகவர்களாக மாற்றமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தமது உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் இழந்து நிற்கிறது.
முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள், சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட, அமைச்சுப் பதவிகள் மற்றும் சலுகைகளுக்காக தங்களது அரசியல் பலத்தைப் பயன்படுத்தும் ஒரு வியாபாரக் கலாச்சாரத்தினை உருவாக்கினார்கள் என்ற உண்மையை தற்போதைய இளைஞர் சமூகம் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
யுத்தத்திற்குப் பின்னரான சூழல், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இன நல்லிணக்க சவால்களின் போது சாதாரண முஸ்லிம் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய தலைமைகள், தங்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மற்றும் அதிகாரப் பாதுகாப்பிலேயே கவனம் செலுத்தினர்.
சாதாரண அடித்தட்டு மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல், பாரம்பரிய குடும்ப அல்லது செல்வந்த மேல்தட்டு வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் முஸ்லிம் கட்சிகள் முடங்கிக் கிடக்கின்றன. அரசியல் தலைவர்கள் மீதான ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. முநூல்களில் பதிவேற்றப்படும் கிழக்கிற்கு வரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சமகால கரையோர ஆடல் பாடல் காட்சிகள் அதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அண்மையில் உருவாக்கப்பட்ட சிறுபான்மை கட்சிகளின் கூட்டணிகள் "இன நல்லுறவு" என்று கூறினாலும், உள்ளூர் மட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் வாக்கு போட்டி மற்றும் ஆதிக்கப் போராட்டம் காரணமாக, சமூங்களின் உணர்வு பூர்வமான பிரச்சினைகளில் அவர்களால் ஒருமித்த, துணிச்சலான முடிவை எடுக்க முடிவதில்லை.
அதற்கு மிகச் சரியான உதாரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை சம்பந்தமான தற்போதைய பிரச்சினை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழல் குறித்து சிறுபான்மை கூட்டணியினால் தீர்க்கமான முடிவை நோக்கி நகர முடியவில்லை. அல்லது பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்றவொரு நாட்டில் பரஸ்பர சகிப்புத்தன்மையின் அவசியத்தை வழியுறுத்தி இவர்களால் தற்காலிக தீர்வினை கூட கொடுக்க முடியாத கார்ட்போட் கூட்டணிகவே உள்ளார்கள்.
இருந்தும், அரசாங்கம் இன நல்லுரவையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு விரைவாக செயற்பட்டனூடாக குறித்த கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற கனிஷ்ட சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடை தொடர்பான விவகாரம் தற்பொழுது முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பணியாளர்கள் தமது கலாசார ஆடை நடை முறைகளைப் பேணி கடமைக்குத் திரும்பியுள்ளார்கள்.
அரசியல் தரப்புகள் சுயலாபங்களை விடுத்து, வைத்தியசாலை என்பது அனைத்து சமூக மக்களுக்குமான ஒரு பொதுச் சேவை தளம் என்பதையும் கருத்தில் கொள்வதுடன், பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையிலும், சட்ட ரீதியாகவும் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்பதே நடுநிலையான மக்களின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த வகையில், சுமார் நன்கு தசாப்தங்களாக கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்தும் கடந்தகால அனுபவங்களிலிருந்தும் இன்னமும் படிப்பினை பெறாத இலங்கையர்களாகவே நாம் தொடர்ந்தும் வாழ்வோமானால் நம்மைவிடத் துரதிஷ்டமானவர்கள் வேறு யாரும் இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.
தற்பொழுது தேசிய அரசியலில் இன நல்லுறவை பலப்படுத்தவும், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணவும், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, NPP அரசானது நாட்டின் ஒருமைப்பாடு, சமாதானம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நாட்டினை நகர்த்தி வருகின்றது. இனம், மதம் அல்லது மொழி அடிப்படையிலான பிரிவினைகளைக் கடந்து, அனைத்து பிரஜைகளுக்கும் சமமான உரிமைகளை உறுதி செய்வதாக அரசாங்கம் நம்பிக்கை தரும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொண்ட அரசியல் ரீதியான புறக்கணிப்புகளுக்கு மாற்றாக, தமக்கான நியாயமான அரசியல் உரிமைகள் மற்றும் நம்பிக்கையான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது NPP அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
அஹமட் இர்ஷாட்.
14-08-2026
මුස්ලිම් ප්රභූ දේශපාලනය අවස්ථාවාදී ව්යාපාරයක් බවට පරිවර්තනය විය.
Sir. Razik Fareed, TP Jaya, Bakir Markar, Dr. Badiuddin Mahmood, ACS Hameed ආදීන්ට උකස් කිරීමට "ව්යාපාරික දේශපාලනයක්" නැත. රටේ ප්රධාන ජාතික පක්ෂ සමග එකට හිටගෙන මුස්ලිම් ජනතාව ජාතික ප්රවාහයේ ගමන් කරවූ මුස්ලිම් දේශපාලන නායකයන් ලෙස කටයුතු කළා.
සමාජ නිරීක්ෂකයින් පෙන්වා දෙන්නේ දේශපාලන නායකයින් කෙරෙහි මහජනතාවගේ සහ මුස්ලිම් ප්රජාවගේ විශ්වාසය මෑතදී ලිහිල් වී ඇති බවයි. විශේෂයෙන්ම නැඟෙනහිර පළාතට පැමිණෙන මුස්ලිම් දේශපාලන නායකයන්ගේ වෙරළ විනෝදයට අදාළ වීඩියෝ දර්ශන සමාජ මාධ්ය ඔස්සේ පැතිර යන අතර ඒ සම්බන්ධ විවේචන ද එය වඩාත් තහවුරු කරයි.
ඉමිතියාස් බාකීර් මාකාර් සමකාලීන මුස්ලිම් දේශපාලනයේ අවංක පුද්ගලයන්ගෙන් කෙනෙකු ලෙස ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රශංසා කර තිබේ.
++++++++++++++++++
ශ්රී ලාංකේය මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන ඉතිහාසයේ, ශ්රීමත් රසික් පරේඩ්, ඩී.බී. ජයා, ආචාර්ය බදියුද්දීන් මහමුද්, ඒ.සී.එස්. හමීඩ්, බකීර් මාකාර් වැනි නායකයින් සමඟ ක්රියා කළ අතර පෞරුෂයකින් ක්රියා කළ අතර වාර්ගික සංහිඳියාව, අධ්යාපනික සංවර්ධනය සහ ජාතික සමගියට ප්රමුඛත්වය දුන්හ. පටු ආත්මාර්ථකාමී දේශපාලනයෙන් ඔබ්බට ගොස් ජාතියට අභිමානයක් ගෙන දුන්හ.
ඔවුන් වැනි අය පරාර්ථකාමී, දූරදර්ශී, ජාතික සමගිය ඇති කරන දේශපාලනයක් කළ බව ඉතිහාසගත සත්යයකි. ඔවුන් ප්රජාව සහ ජාතිය යන දෙකටම එකසේ සැලකූ අතර ජාතීන් අතර පාලමක් ලෙස ක්රියා කළහ.
DP.Jaya ජයා මුස්ලිම් ප්රජාවගේ අධ්යාපනික පසුගාමීත්වය වෙනස් කිරීමට උත්සාහ කළේය. කොළඹ සහිරා විද්යාලය විශිෂ්ට අධ්යාපන ආයතනයක් බවට පත්කිරීමේ ගෞරවය ඔහුට හිමිවේ. බ්රිතාන්යයන්ගෙන් ශ්රී ලංකාව නිදහස ලබා ගැනීම සඳහා ඔහු සම්පූර්ණයෙන්ම නැගී සිටිමින් ක්රියා කළේය. "මුස්ලිම්වරුන්ගේ අයිතීන්ට වඩා රටේ නිදහස වැදගත්" රාජ සභාවේදී ජාතික සමගියට මග පෙන්වූ ඉතිහාසය ඉතිරි කළේය.
Dr Badr-ud-din Mahmud- ශ්රී ලංකාවේ අධ්යාපන අමාත්යවරයා ලෙස කටයුතු කරන සමයේ සෑම මුස්ලිම් ගමකම පොදු පාසල් ඇති කර මුස්ලිම් ගුරුවරුන් දස දහස් ගණනක් පත් කර මුස්ලිම් ප්රජාවගේ අධ්යාපනයේ නවෝදයක් ඇති කළේය. වාර්ගික, ආගමික හා භාෂාමය වෙනස්කම් සඳහා රටපුරා පාසලක් ලෙස පාසල් අධ්යාපනය ස්ථාපිත කළ පුද්ගලයාගේ නම ද ඔහු සතුව ඇත.
Sir.Razik Fareed- එකතු කරන්න. ශ්රීමත් රාසික් ෆරීඩ් මුස්ලිම් කාන්තාවන්ගේ අධ්යාපනය වෙනුවෙන් සටන් කළේය. ඔහු කොළඹ මුස්ලිම් කාන්තා විද්යාලය පිහිටුවීමට මූලික විය. තමන් "ශ්රී ලංකිකයෙකු" ලෙස හඳුනා ගැනීම ගැන ඔහු ආඩම්බර වේ. සිංහල හා දෙමළ නායකයන් සමඟ සුහද සබඳතාවක් පවත්වාගෙන ගිය ඔහු ජනවාර්ගික සහජීවනය සඳහා අඩිතාලම දැමූ වැදගත් පුද්ගලයකු ලෙස අදටත් කතාබහට ලක්වේ.
A. C. S. Hameed ශ්රී ලංකාවේ දීර්ඝතම විදේශ කටයුතු අමාත්යවරයා විය. ඔහු ශ්රී ලංකාවට සහ මුස්ලිම් ප්රජාවට ජාත්යන්තරය තුළ ඉමහත් කීර්තියක් ගෙන දුන්නේය. ජනවාර්ගික ගැටලුව සඳහා වූ සාම සාකච්ඡාවලදී ඔහු වැදගත් කාර්යභාරයක් ඉටු කළ බවට මතයක් ද තිබේ.
එසේම එම්.ඒ.එම්.ඒ.බකීර් මාකර් පාර්ලිමේන්තුවේ කථානායකවරයා ලෙසත් ආණ්ඩුකාරවරයා ලෙසත් අවංකව කටයුතු කළේය. ඔහු සෑම ජාතියකම මිනිසුන්ගේ ගෞරවයට පාත්ර වූ විශිෂ්ට ප්රජාතන්ත්රවාදියෙකි. ඔහු මෙන්ම ශ්රේෂ්ඨ දේශපාලකයෙක් මෙන්ම මධ්යස්ථ චින්තකයෙක්ද විය. වැදගත්ම කාරණය වන්නේ අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා තම පුත් ඉමිතියාස් බාකීර් මාකර් සමකාලීන මුස්ලිම් දේශපාලනඥයකු ලෙස වර්ණනා කර තිබීමයි.
එවැනි සියලුම මුස්ලිම් නායකයින් ඡන්දය ලබා ගැනීම සඳහා කුලවාදය හෝ හැඟීම්බර සටන් පාඨ භාවිතා කරන්නේ නැත. පුද්ගලික වාසි තකා පක්ෂ පනින හෝ ඇමතිකම් සඳහා ප්රතිපත්ති උකස් කරන "ව්යාපාරික දේශපාලනය" ඔවුන්ට නැත. රටේ ප්රධාන ජාතික පක්ෂ සමග එකට හිටගෙන මුස්ලිම් ජනතාව ජාතික ප්රවාහයේ ගමන් කරවූ මුස්ලිම් දේශපාලන නායකයන් ලෙස කටයුතු කළා.
එහෙත් 1985 න් පසු ශ්රී ලාංකීය මුස්ලිම් දේශපාලනය ස්ව-ලාභී දේශපාලනය කරා ගමන් කරමින් සිටින බව සමකාලීන දේශපාලන විශ්ලේෂකයින් සහ මහජනතාව අතර පුළුල් ලෙස සාකච්ඡා කෙරෙන වැදගත් දේශපාලන නිරීක්ෂණයකි.
ඒ අර්ථයෙන් 1980 දශකයේ මැද භාගය (විශේෂයෙන් 1985 න් පසු) ශ්රී ලංකා මුස්ලිම්වරුන්ගේ දේශපාලන ඉතිහාසයේ වැදගත් සන්ධිස්ථානයක් විය. එම්.එච්.එම්. එතෙක් අගනුවර කේන්ද්ර කරගත් කොළඹ සාම්ප්රදායික සහ පන්ති පදනම් වූ දේශපාලන ප්රවේශයෙන් අෂාර්ෆ් ඉවත් විය. අෂ්රෆ්ගේ නායකත්වය යටතේ ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ (SLMC) අද්විතීය දේශපාලන ව්යාපාරය ශක්තිමත් විය. එය ශ්රී ලංකා ජාතික දේශපාලනයේ ප්රජාව පදනම් කරගත් කේවල් කිරීමේ බලයක් ද සනිටුහන් කළේය.
ආණ්ඩු පිහිටුවීමට බහුතර බලයක් නොමැති ප්රධාන ධාරාවේ පක්ෂ සමග මුස්ලිම් පක්ෂ ආණ්ඩු වල තීරණාත්මක බලවේගය බවට පත් විය. එය සමාජ සුබසාධනයෙන් ඔබ්බට ගොස් පෞද්ගලික තනතුරු සඳහා කේවල් කිරීමක් බවට පත්ව ඇති බවට බොහෝ පැතිවලින් දැඩි විවේචන එල්ල වෙමින් තිබේ.
ප්රතිපත්තිමය සහනවලින් ඔබ්බට ගොස් තාවකාලික දේශපාලන වාසි සහ ඇමැති ධුර සඳහා ආණ්ඩු අනුග්රහය දැක්වීම ප්රධාන තැනක් ගනියි. ඒ වගේම නායකත්ව තරගය නිසා අභ්යන්තර ගැටුම් නිසා මුස්ලිම් පක්ෂ කොටස් රැසකට බෙදී ගියා. මෙමගින් ප්රජාවගේ කේවල් කිරීමේ හැකියාව හීන වී නායකයින්ගේ කෙටි කාලීන දේශපාලන අවශ්යතාවලට මග පෑදෙමින් ආත්මාර්ථකාමී දේශපාලනයක් බවට පත් වූ බව විශ්ලේෂකයෝ පෙන්වා දෙති.
එසේම පුද්ගලවාදී දේශපාලනයේ නාමයෙන් ගෙන ගිය ඇතැම් ක්රියාමාර්ග අනෙකුත් ජන කොටස් සමඟ ඇති සුහදතාවයට බලපෑ අතර ස්වෝත්තමවාදී බලවේගවල විවේචනවලට ද හේතු විය. සාමාන්ය ජනතාවගේ අවශ්යතාවලට වඩා දේශපාලන චරිතවල ආර්ථිකය සහ බලය ප්රමුඛත්වයට පත්වන බව වත්මන් මුස්ලිම් ප්රජාවට සහ තරුණ ප්රජාවට අවබෝධ වී ඇත.
මුස්ලිම්වරුන්ගේ දේශපාලනය සමාජ සුබසාධනයට වඩා පුද්ගලික වාසි තකා වෙනස් කර ඇත. නායකයන් තම ලාභය සහ තනතුර සඳහා වාර්ගික හා ආගමික අනන්යතා අලෙවි කරන නියෝජිතයන් බවට පත් විය. එහි ප්රතිඵලයක් ලෙස සමස්ත මුස්ලිම් ප්රජාවටම ඔවුන්ගේ අයිතිවාසිකම් සහ දේශපාලන අපේක්ෂාවන් අහිමි වී ඇත.
මුස්ලිම් ජනතාවගේ ඡන්දය ලබාගෙන පාර්ලිමේන්තුවට යන නියෝජිතයන් සමාජ ප්රශ්න විසඳනවාට වඩා ඇමැතිකම් සහ වරප්රසාද වෙනුවෙන් දේශපාලන බලය යොදවන ව්යාපාරික සංස්කෘතියක් නිර්මාණය කර තිබෙන බව අද තරුණ ප්රජාවට වැටහෙන්න පටන් අරන්.
පශ්චාත් යුද වාතාවරණය, ආර්ථික අර්බුද සහ වාර්ගික සංහිඳියාවට එල්ල වූ අභියෝග හමුවේ සාමාන්ය මුස්ලිම් ජනතාවගේ හඬ විය යුතු නායකයන් තම පෞද්ගලික වත්කම් හා බලය රැක ගැනීම කෙරෙහි අවධානය යොමු කළහ.
සාමාන්ය බිම් මට්ටමේ ජනතාවගේ අවශ්යතා තේරුම් නොගෙන, සම්ප්රදායික පවුල්වල හෝ ධනවත් ප්රභූන්ගේ පාලනය යටතේ මුස්ලිම් පක්ෂ අඩපණ වී ඇත. දේශපාලන නායකයන් කෙරෙහි සමස්ත මුස්ලිම් ප්රජාවගේම විශ්වාසය දිනෙන් දින අඩුවෙමින් පවතී. නැගෙනහිරට එන මුස්ලිම් දේශපාලන නායකයන්ගේ සමකාලීන වෙරළබඩ නැටුම් දර්ශන ෆේස්බුක් හි උඩුගත කර තිබීම එය තවදුරටත් තහවුරු කරයි.
මෑතකදී ගොඩනැගුණු සුළු පක්ෂ සන්ධාන "වාර්ගික සංහිඳියාව" යැයි පැවසුවද, ප්රාදේශීය මට්ටමේ බලය සඳහා ඇති එදිරිවාදිකම් සහ අරගලය හේතුවෙන් වාර්ගික සංවේදී කරුණු සම්බන්ධයෙන් ඒකමතික හා නිර්භීත තීරණයක් ගැනීමට ඔවුන්ට නොහැකි වී තිබේ.
එයට කදිම නිදසුනක් ලෙස කල්මුණේ උතුර සම්පත් රෝහලේ දැනට පවතින මුස්ලිම් කාන්තා කාර්ය මණ්ඩල නිල ඇඳුම් ප්රශ්නය සහ ඒ පිටුපස ඇති දේශපාලන වටපිටාව සම්බන්ධයෙන් තීරණාත්මක තීරණයකට යාමට සුළු ජාතික සන්ධානයට නොහැකි වී තිබේ. නැතිනම් ශ්රී ලංකාව වැනි බහු වාර්ගික රටක අන්යෝන්ය ඉවසීමේ අවශ්යතාවය පෙන්වා තාවකාලික විසඳුමක් ලබා දීමටවත් නොහැකි කාඩ්බෝඩ් හවුලකි.
කෙසේ වෙතත් සෞඛ්ය අමාත්යාංශයේ කඩිනම් ක්රියාමාර්ගය හේතුවෙන් රජය වාර්ගික සහජීවනය සහ රටේ ඒකීයභාවය සැලකිල්ලට ගෙන එම කල්මුණේ උතුර සම්පත් රෝහලේ නව පත්වීම් ලැබූ කනිෂ්ඨ සෞඛ්ය සේවා සහකාර නිලධාරීන්ගේ නිල ඇඳුම පිළිබඳ ගැටළුව මේ වන විට අවසන් වී ඇති අතර සේවකයින් සංස්කෘතික ඇඳුම් පැළඳුම් සංග්රහය ද රැක ගනිමින් රාජකාරියට පැමිණ තිබේ.
මධ්යස්ථ ජනතාවගේ ප්රධාන අපේක්ෂාව දේශපාලන පක්ෂ තම ආත්මාර්ථකාමී අවශ්යතා පසෙකලා රෝහල සමාජයේ සියලුම මිනිසුන්ගේ මහජන සේවා වේදිකාවක් ලෙස සලකා කාන්තා සේවිකාවන් මුහුණ දෙන ගැටලුවලට මානුෂිකව සහ නීත්යානුකූලව සුමට විසඳුමක් ලබා දීමයි.
ඒ අර්ථයෙන් දශක ගණනාවක් පුරා උගත් පාඩම් සහ අතීත අත්දැකීම්වලින් තවමත් ඉගෙන නොගත් ශ්රී ලාංකිකයන් ලෙස අප තවදුරටත් ජීවත් වුවහොත් අපට තරම් අවාසනාවන්තයකු තවත් නොමැති බව සත්යයයි.
මේ වන විට ජාතික දේශපාලනය තුළ ජනවාර්ගික සහජීවනය ශක්තිමත් කිරීමට, රටේ ඒකීයභාවය ආරක්ෂා කිරීමට, සුළු ජාතීන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීමට අනුරකුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ රජය ගෙන යන ක්රියාමාර්ග මුස්ලිම් ප්රජාව තුළ නව බලාපොරොත්තුවක් ඇති කර තිබේ.
එබැවින් ජාතික සමගිය, සාමය සහ සියල්ලන් ඇතුළත් දේශපාලන සංස්කෘතියක් කරා එන්පීපී රජය රට ගෙන යමින් සිටී. ජාතිය, ආගම හෝ භාෂාව පදනම් කරගත් බෙදීම් ඉක්මවා සියලු පුරවැසියන්ට සමාන අයිතිවාසිකම් සහතික කරන බවට රජය පොරොන්දු වී තිබේ.
පසුගිය කාලයේ සුළු ජාතික ප්රජාවන් මුහුණ දුන් දේශපාලන ආන්තිකකරණයට විකල්පයක් ලෙස ඔවුන්ට සාධාරණ දේශපාලන අයිතිවාසිකම් සහ විශ්වසනීය නියෝජනයක් ලැබෙනු ඇතැයි අපේක්ෂාවන් මතු වී තිබේ.
NPP ආණ්ඩුවේ මූලික අරමුණ රට දෙකඩ කරන බලවේගවලට තිත තබා බහුජන රටක් වන ශ්රී ලංකාවේ ඒකීයභාවය ශක්තිමත් කිරීමයි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
14-08-2026.
සිංහල පරිවර්තනය සමඟ)சந்தர்ப்பவாத வியாபாரமாக உருமாறிய முஸ்லிம்களின் கனவான் அரசியல்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 14, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 14, 2026
Rating:




கருத்துகள் இல்லை: