Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

“Clean Sri Lanka” உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு


“Clean Sri Lanka” ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அந்த செயலணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் மையமாகக் கொண்டு, முன்னெடுக்கப்படும் கழிவு முகாமைத்துவ புதிய வேலைத்திட்டம் குறித்து உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துவதும், அதற்காக திட்ட முகாமைத்துவப் பிரிவு ஒன்றை ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்தாபிப்பது குறித்தும் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.





“Clean Sri Lanka” உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.