Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆடைச் சுதந்திரம்! திணிப்புகளுக்கு அப்பால் தனிமனித உரிமையும், அரச விதிகளும்.

සිංහල පරිවර්තනය සමඟ)ஆடைச் சுதந்திரம்! திணிப்புகளுக்கு அப்பால் தனிமனித உரிமையும், அரச விதிகளும்.
ඇඳුම් ඇඳීමේ නිදහස!  පුද්ගල අයිතිවාසිකම් සහ රාජ්‍ය නීති පැනවීමෙන් ඔබ්බට.

தேசிய மக்கள் சக்தியின்(NPP) அரசாங்கத்தின் புதிய அரசியல் கலாச்சார முயற்சிகளுக்கு மத்தியில், இந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி சிறுபான்மை சமூகத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளமை தெளிவாகின்றது.

அரசின் விதிமுறைகளுக்கு உட்படு, ஒரு ஊழியர் மத ஆடையை அணிவதையோ அல்லது பொதுவான ஆடையை அணிவதையோ தீர்மானிக்கும் உரிமை முழுக்க முழுக்க தனி நபருக்கே உரித்தானது.


மதச் சுதந்திரமா? தனிநபர் விருப்பமா? அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் ஒரு தெளிவான பார்வை. தேசிய நல்லிணக்கமும் ஆடைச் சுதந்திரமும் என்ற பார்வையில், உணர்ச்சி அரசியலைக் கடந்து சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உரிமைகள் என்பது இரு வழிப்பாதை போன்றது. திணிப்புகள் எங்குமே சுதந்திரத்தை அச்சுறுத்துவதாகவே அமையும். அத்தோடு, "உரிமை என்பது தேர்வு செய்வதற்கான சுதந்திரமே தவிர, கட்டாயப்படுத்துவதற்கான கருவியும் அல்ல."

ஒரு ஜனநாயக நாட்டில், அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மத மற்றும் கலாச்சார அடையாளங்களைப் பேணும் வகையில் ஆடை அணிவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது.


தனி நபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். கட்டுப்பாடுகள் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினரையோ அல்லது பிரிவினரையோ அரச சேவையிலிருந்து ஒதுக்கிவிடவும் முடியாது.

அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் மத மற்றும் கலாச்சார சுதந்திரம் எந்தளவு அவசியமோ, அதேபோல் தனிநபர் விருப்பத்திற்கு மாறாகச் சமூகமோ அல்லது மதத் தலைவர்களோ குறிப்பிட்ட ஆடைகளை அணியச் திணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை சகல இலங்கையர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

ஊழியர்கள் தமக்குரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தாம் விரும்பும் ஆடைகளை அணியும் சுதந்திரம் இருக்க வேண்டும். மதம் அல்லது கலாச்சாரத்தின் பெயரால் ஒருவரை குறிப்பிட்ட ஆடைகளை அணியும்படி வற்புறுத்துவது அடிப்படை உரிமையைப் பாதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றது.

நிறுவனங்களின் ஒழுக்கக் கோவைகள் மற்றும் சுற்றுநிருபங்கள் எவ்வித பக்கச்சார்பும் இன்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பொதுவான சட்ட விதி முறையாக உள்ளது.

மேலும், ஒரு ஊழியர் அரசாங்க விதிகளுக்கு இணங்க ஆடை அணியும் போது, அதை விடுத்து குறிப்பிட்ட கலாச்சார ஆடையைத்தான் அணிய வேண்டும் என சமூகமோ அல்லது மதத் தலைவர்களோ வற்புறுத்துவது விவாதத்திற்கு உட்படும் விடயமாக மாறிவிடும். ஆனால், பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு ஊழியர் அணியும் ஆடையை தீர்மானிப்பது அவரது தனி நபர் சுதந்திரம் சார்ந்த விடயமாகவே பார்க்கப்பட வேண்டும்.

அந்த வகையில், கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்காக வாதிடுவது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவு ஒரு தனிநபர் தனது விருப்பப்படி (அரச விதிகளுக்கு உட்பட்டு) ஆடை அணிவதையும் சமூகம் மதிக்க வேண்டும். உரிமைகள் என்பது இரு வழிப்பாதை போன்றது. திணிப்புகள் எங்குமே சுதந்திரத்தை அச்சுறுத்துவதாகவே அமையும்.

அத்தொடு, "உரிமை என்பது தேர்வு செய்வதற்கான சுதந்திரமே தவிர, கட்டாயப்படுத்துவதற்கான கருவியும் அல்ல."

அதனடிப்படையில், ​அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு, ஒரு ஊழியர் மத ஆடையை அணிவதையோ அல்லது பொதுவான ஆடையை அணிவதையோ தீர்மானிக்கும் உரிமை முழுக்க முழுக்க அந்தத் தனி நபருக்கே உரித்தானது. உரிமைகளைக் கோரும் சமூகம், அதே உரிமையைத் தங்களது சொந்த மக்களுக்கு வழங்கும் பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பலருடைய வாதத்தின் மையக்கருத்தாக உள்ளது.

ஆனால், திரை மறைவிலும், பொது வெளியிலும் தற்போது வைத்தியசாலையின் சீருடை விடயமானது இலங்கையின் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. சீருடை விவகாரம் குறித்த செய்திகள் உடனடியாக கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத அடையாளங்களோடு தொடர்பு படுத்தப்பட்டு, பொது மக்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் மீது அச்சத்தில் இருக்கும் ஊழல்வாதிகள், எதிர்த்தரப்பினர் பாரம்பரிய அமைப்புகள் போன்றவைகளை பயன்படுத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்க எதிர்க்கட்சிகள் இந்த விவாதத்தை ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. அரசாங்கம் "பாரம்பரியங்களை சீர்குலைக்கிறது" என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் இவர்களைப் போன்றவர்கள் இறங்கியுளள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் புதிய அரசியல் கலாச்சார முயற்சிகளுக்கு மத்தியில், இந்த விடயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி சிறுபான்மை சமூகத்தை திசை திருப்பும் முயற்றியில் இறங்கியுள்ளமை தெளிவாகின்றது. அத்தோடு, இது தனிமனித உரிமை மற்றும் மத சுதந்திரம் சார்ந்த ஒரு முக்கிய பிரச்சினை என மற்றொரு தரப்பினரால் சுட்டிக்காட்டவும் முயற்சிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் தற்போதைய அறிவுறுத்தல்களின் படி, சுகாதாரத் துறையினரின் சீருடைகளில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவே இறுதி முடிவுகளை எடுக்கும். தற்போதைய நிலையில் அரச ஊழியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, நிறுவனங்களின் ஒழுங்கு விதிகளையும் சம நிலைப்படுத்துவதற்கான முயற்சிகளே அரச தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, சிறுபான்மை சமூகம், கற்றறிந்த புத்தி ஜீவிகளும், சமூக வலைத்தளங்களை கையாளும் இளைஞர் சமூகமும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளைப் உணர்ச்சிவசப்படாமல், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணியை ஆராய்ந்து நடுநிலைத்தன்மையுடன் பயனிக்க வேண்டும். குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உருவாக்கப்படும் இன, மத ரீதியான உணர்ச்சித் தூண்டுதல்களுக்குள் சிக்காமல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

எனவே, வைத்தியசாலை ஊழியர்களின் ஆடை விவகாரமாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும்  ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, ஒரு தூய்மையான அரசியல் கலாச்சாரத்தின் ஊடாக நாட்டுக்கும், மக்களுக்கும் மிகச் சரியான நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் என்பதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை.

அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக
18-08-2026.

ஆடைச் சுதந்திரம்! திணிப்புகளுக்கு அப்பால் தனிமனித உரிமையும், அரச விதிகளும்.
ඇඳුම් ඇඳීමේ නිදහස!  පුද්ගල අයිතිවාසිකම් සහ රාජ්‍ය නීති පැනවීමෙන් ඔබ්බට.

ජාතික ජන බලය (NPP) ආණ්ඩුවේ නව දේශපාලන සංස්කෘතික මුලපිරීම් මධ්‍යයේ විපක්ෂය මෙම ප්‍රශ්නය දේශපාලනීකරණය කර සුළු ජාතික ප්‍රජාවගේ අවධානය වෙනතකට යොමු කිරීමට උත්සාහ කර ඇති බව පැහැදිලිය.

රජයේ රෙගුලාසිවලට යටත්ව, ආගමික ඇඳුමක් අඳිනවාද නැතිනම් පොදු ඇඳුමක් අඳිනවාද යන්න තීරණය කිරීමට සේවකයකුට ඇති අයිතිය සම්පූර්ණයෙන්ම පුද්ගලයා සතුය.

ආගමේ නිදහසද? පුද්ගලික මනාපය? සිවිල් සේවකයන්ගේ ඇඳුම් පැළඳුම් ප්‍රශ්නය ගැන පැහැදිලි අදහසක්. ජාතික සංහිඳියාව සහ ඇඳුම් ඇඳීමේ නිදහස අනුව හැඟීම්බර දේශපාලනයෙන් ඔබ්බට සිතීම යුගයේ අවශ්‍යතාවයකි.

අයිතීන් දෙපාර්ශ්වයක් බඳුය. පැනවීම සෑම තැනකම නිදහසට තර්ජනය කරයි. එසේම, "අයිතිය යනු තේරීමේ නිදහස මිස බලකිරීමේ මෙවලමක් නොවේ."
++++++++++++++++

ප්‍රජාතන්ත්‍රවාදී රටක රාජ්‍ය ආයතනවල සේවය කරන සේවකයන්ට තම ආගමික හා සංස්කෘතික අනන්‍යතාව ආරක්ෂා වන පරිදි ඇඳුම් ඇඳීමේ අයිතිය ලබාදිය යුතු බවට කරන ඉල්ලීම සම්පූර්ණයෙන්ම සාධාරණය.

පුද්ගලයාගේ මූලික අයිතිවාසිකම් සහ ආගමික නිදහස ආරක්ෂා කිරීම රාජ්‍යයේ වගකීමකි. සීමා කිරීම් නාමයෙන් ඇතැම් ප්‍රජාවන් හෝ කොටස් රාජ්‍ය සේවයෙන් බැහැර කළ නොහැක.

සිවිල් සේවකයන්ගේ ඇඳුම් පැළඳුම් සම්බන්ධයෙන් ආගමික හා සංස්කෘතික නිදහස කොතරම් වැදගත්ද යන්නත්, පුද්ගල මනාපයන් වෙනුවට නිශ්චිත ඇඳුම් ඇඳීමට සේවකයන්ට බල කිරීම සමාජයට හෝ ආගමික නායකයන්ට පිළිගත නොහැකි බවත් සියලු ශ්‍රී ලාංකිකයන් තේරුම් ගත යුතුය.

සේවකයින්ට ඔවුන්ගේම නීතිමය අවශ්‍යතාවලට යටත්ව තමන්ට අවශ්‍ය ඇඳුම් ඇඳීමට නිදහස තිබිය යුතුය. ආගමේ හෝ සංස්කෘතියේ නාමයෙන් යම් යම් ඇඳුම් ඇඳීමට යමෙකුට බල කිරීම මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය කිරීමක් ලෙස සැලකේ.

ආයතනික චර්යාධර්ම සංග්‍රහ සහ චක්‍රලේඛ පක්ෂග්‍රාහීවකින් තොරව ආරක්ෂා කළ යුතු බව නීතියේ පොදු රීතියකි.

එසේම සේවකයකු රජයේ රෙගුලාසිවලට අනුකූලව අඳින පළඳින විට ඒ වෙනුවට කිසියම් සංස්කෘතික ඇඳුමක් ඇඳීමට සමාජය හෝ ආගමික නායකයන් බල කරන්නේද යන්න විවාදයට තුඩුදෙන කරුණක් බවට පත්වේ. කෙසේ වෙතත්, බහු-සමාජ රටක, සේවකයෙකු සඳහා ඇඳුම් පැළඳුම් කේතය තෝරා ගැනීම නීතිමය යෝජනා ක්‍රමවල රාමුව තුළ පුද්ගලික නිදහස පිළිබඳ කාරණයක් ලෙස සැලකිය යුතුය.

ඒ අර්ථයෙන් ගත් කල, සංස්කෘතික හා ආගමික අයිතිවාසිකම් වෙනුවෙන් පෙනී සිටීම සාධාරණ වන තරමටම (රජයේ රෙගුලාසිවලට යටත්ව) තමන් කැමති පරිදි ඇඳුම් ඇඳීමේ හැකියාවට සමාජය ගරු කළ යුතුය. අයිතීන් දෙපාර්ශ්වයක් බඳුය. පැනවීම සෑම තැනකම නිදහසට තර්ජනය කරයි.

එසේම, "අයිතිය යනු තේරීමේ නිදහස මිස බලකිරීමේ මෙවලමක් නොවේ."

ඒ අනුව රජයේ රෙගුලාසිවලට යටත්ව සේවකයකු ආගමික ඇඳුමක් හෝ සාමාන්‍ය ඇඳුමක් අඳින්නේද යන්න තීරණය කිරීම සම්පූර්ණයෙන්ම පුද්ගලයා සතුය. බොහෝ දෙනාගේ තර්කයේ හරය වන්නේ අයිතීන් ඉල්ලා සිටින සමාජයකට එම අයිතිවාසිකම් තම මිනිසුන්ට ලබාදීමට ද පරිණතභාවයක් තිබිය යුතු බවයි.

නමුත් මේ වන විට තිරය පිටුපස සහ ප්‍රසිද්ධියේ රෝහල් නිල ඇඳුම් ප්‍රශ්නය ශ්‍රී ලංකාවේ දේශපාලන හා සමාජ මට්ටම්වල විවාදයට තුඩු දෙන මාතෘකාවක් බවට පත්ව ඇත. නිල ඇඳුම් ප්‍රශ්නය පිළිබඳ ප්‍රවෘත්ති වහාම සංස්කෘතික, සම්ප්‍රදායික සහ ආගමික සංකේත සමඟ සම්බන්ධ වන අතර මහජනයා අතර චිත්තවේගීය කැළඹීම් ඇති කිරීමට යොදා ගනී.

දූෂිත ආණ්ඩු භීතිය, විපක්ෂයේ සාම්ප්‍රදායික සංවිධාන ආදිය යොදා ගනිමින් ජනතාව තම පැත්තට පොළඹවා ගැනීමට මේ විවාදය මහඟු අවස්ථාවක් ලෙස විපක්ෂයේ පක්ෂ යොදා ගන්නවා. මේ වගේ අය හදන්නේ ආණ්ඩුව “සම්ප්‍රදායන් කඩාකප්පල් කරනවා” කියලා ප්‍රතිරූපයක් ගොඩනගා ගන්නයි.

ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ (NPP) ආණ්ඩුවේ නව දේශපාලන සංස්කෘතික මුලපිරීම් මධ්‍යයේ, විරුද්ධ පක්ෂ සුළුතර ප්‍රජාව වෙනතකට යොමු කිරීම සඳහා ප්‍රශ්නය දේශපාලනීකරණය කර ඇති බව පැහැදිලිය. ඊට අමතරව තවත් පාර්ශ්වයක් පෙන්වා දීමට උත්සාහ කරන්නේ මෙය පුද්ගල අයිතිවාසිකම් හා ආගමික නිදහස සම්බන්ධ වැදගත් කරුණක් බවයි.

සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ වත්මන් උපදෙස් අනුව සෞඛ්‍ය දෙපාර්තමේන්තුවේ නිල ඇඳුමේ වෙනස්කම් සිදුකිරීම සම්බන්ධයෙන් සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ ජනරාල්වරයාගේ ප්‍රධානත්වයෙන් යුත් කමිටුවක් මගින් අවසන් තීරණ ගනු ඇත. මේ වන විට රාජ්‍ය සේවකයන්ගේ මූලික අයිතිවාසිකම් ආරක්ෂා කරමින් ආයතනවල විනය නීති සමාන කිරීමට රජය උත්සාහ ගනිමින් සිටී.

එබැවින් සමාජ ජාල වෙබ් අඩවි හසුරුවන සුළුතර ප්‍රජාව, උගත් බුද්ධිමතුන්, තරුණ ප්‍රජාව සමාජ ජාල වෙබ් අඩවිවල පැතිරෙන පණිවිඩ හැඟීම්බරව මධ්‍යස්ථභාවයෙන් තොරව භාවිත කළ යුත්තේ ඒවායේ සත්‍යතාව සහ පසුබිම පරීක්ෂා කර බැලීමෙනි. පටු දේශපාලන වාසි තකා නිර්මාණය කරන ලද වාර්ගික හා ආගමික හැඟීම්වලට හසු නොවී රටේ සමස්ත සංවර්ධනය හා සමාජ සංහිඳියාව පෙරදැරි කරගෙන කටයුතු කිරීම යුගයේ අවශ්‍යතාවයයි.

එබැවින් රෝහල් කාර්ය මණ්ඩලයේ ඇඳුම් පැළඳුම් ප්‍රශ්නය හෝ වෙනත් ප්‍රශ්නය හෝ වේවා ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව පිරිසිදු දේශපාලන සංස්කෘතියක් තුළින් රටටත් ජනතාවටත් නිවැරැදි දේ කරනු ඇතැයි කිසිවකුට සැක කළ යුතු නැත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
සඟරාවට දිනකරන්
18-08-2026.
ஆடைச் சுதந்திரம்! திணிப்புகளுக்கு அப்பால் தனிமனித உரிமையும், அரச விதிகளும். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.