ஓட்டமாவடி ஷாஹிறா வித்தியாலயத்தில் இடம் பெற்றசிறுவர் சந்தை நிகழ்வு...
மட்டக்களப்பு மத்தி - ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் அமைந்திருக்கும் ஓட்டமாவடி B/2 ஷாகிறா வித்தியாலயத்தின் தரம் மூன்று மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.ஜாபீர் கரீம் தலைமையில் 18-08-2026 செவ்வாய்கிழமை பாடசாலை வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
120 மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கடைகளை அமைத்து மாணவர்களின் ஒன்றிணைந்த கலைத்திட்டத்தில் கணிதம் மற்றும் வியாபார விழுமியத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்கள், மற்றவர்களோடு உரையாடுகின்ற மொழித்திறன், கிரகித்தல் திறன், வியாபாரத்தில் இருக்கும் நேர்மை, உண்மை, விசுவாசம் போன்றவைகள் கணிப்பீடு செய்வதற்கான செயற்பாட்டு ரீதியான திட்டமாகவே இவ்விடயம் பார்க்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் செயலாளர் ஏ.தாஹிர் கலந்து சிறப்பித்ததோடு, கோறளைப்பற்று மேற்கிற்கான பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாரிக், மத்திக்கான பிரதிக் கல்விப்பணிப்பாளர்ரதிருமதி சாமிணி, பிரஜாசக்தி தவிசாளர் அஹமட் இர்ஷாட், சிரேஸ்ட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், நெளபல் மற்றுறேற் ஷியாம், பாடசாலைகளின் அதிபர்கள், நன்கொடையாளர்கள், மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து சிறப்பித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஓட்டமாவடி ஷாஹிறா வித்தியாலயத்தில் இடம் பெற்றசிறுவர் சந்தை நிகழ்வு...
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: