Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு. பிரதம அதிதியாக கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரண்டு முக்கிய வீதிகள் கடந்த (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டன.


நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த வாழைச்சேனை 05ஆம் வட்டாரம், 206D கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட சேகு இப்றாகீம் வீதி, 131 மீற்றர் நீளத்தில் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வீதி இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


இதேவேளை, மாவடிச்சேனை 208A கிராம சேவகர் பிரிவில் 114 மீற்றர் நீளத்தில் 4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அல் அக்ஸா மஸ்ஜித் வீதியும் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


மேலும், கோறளைப்பற்று மத்தி க்ளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம், தே.ம.சக்தியின் பிரதேச நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ்.ஐ. பாறூக், பிரஜா சக்தி தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நீண்டகாலமாக நிலவிய போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வாகவும், பிரதேச மக்களின் அன்றாடப் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையிலும் இவ்வீதிகள் சிறந்த முறையில் செப்பனிட்டு (கொங்கிறீட் இடப்பட்டு) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு. பிரதம அதிதியாக கந்தசாமி பிரபு கலந்து கொண்டார். Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.