வாழைச்சேனை அஸ்பாக் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாண்டு நிகழ்வினை தழுவிய புதிய சீருடை அங்குராப்பணம்.
அஸ்பாக் விளையாட்டு கழகத்தின் மூன்றாண்டு நிகழ்வினை தழுவிய புதிய சீருடை அங்குராப்பணம்.
வாழைச்சேனை புதிதாக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தூர நோக்கோடும் சகோதரர் இர்பானினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அஸ்பாக் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாண்டு பூர்த்தியினை முன்னிட்டு புதிய உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான விளையாட்டு ஜேர்சி அறிமுகம் கழகத்தின் காரியாலைய கட்டடத்தில் 23-08-2026 ஞாயிற்று கிழமை இடம் பெற்றது.
விளையாட்டினை மட்டும் கருத்தில் கொள்ளாது இளைஞர்களின் ஒழுக்கம், எதிர்கால தொழில் தகமை மற்றும் இன்னபிற சமூக செயற்பாடுகளில் இளைஞர்களை சரியான முறையில் பயிற்றுவித்து வரும் சாகோதரர் இர்பான் பிரதேசத்தில் விளையாட்டுக்கழகளை வழி நடாத்துபவர்களில் சகலருக்கும் முன் மாதிரியான ஒருவராக இருப்பது அவதானிக்கதக்க விடயமாகும்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் லத்தீப் ஹாபிஸ், பிரதேச NPPயின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஐ.பாரூக், பிரஜா சக்தி தவிசாளர்களான முபாஸ், அஹமட் இர்ஷாட், வட்டாரக் குழுத்தலைவர் ஹனீபா ஆசிரியர், அல்.அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் லியாப்தீன் ஆகியோர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதோடு, விளையாட்டு கழக உறுப்பினர்களும் பிரசன்னமாயி இருந்தார்கள்.
வாழைச்சேனை அஸ்பாக் விளையாட்டுக் கழகத்தின் மூன்றாண்டு நிகழ்வினை தழுவிய புதிய சீருடை அங்குராப்பணம்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 24, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 24, 2026
Rating:













கருத்துகள் இல்லை: