கட்டுமுறிவு - வாகரைப் பகுதி மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நடவடிக்கை!
மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கட்டுமுறிவு மற்றும் அதனைச் சார்ந்த வாகரைப் பிரதேச மக்களுக்குச் சுத்தமான குடிநீரை தடையின்றி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் நோக்கில் சிறப்பு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இப்பகுதி மக்கள் பல காலமாக எதிர்கொண்டு வரும் தீவிர குடிநீர்த் தட்டுப்பாட்டிற்குத் நிரந்தரமான தீர்வை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுடன் அவர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குடிநீர் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்துக் கேட்டறிந்த அவர், அப்பகுதி மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை விரைவுபடுத்தி, மக்களுக்கு உடனடியாகச் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் இதன்போது அறிவுறுத்தினார்.
கட்டுமுறிவு - வாகரைப் பகுதி மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நடவடிக்கை!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 18, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 18, 2026
Rating:

கருத்துகள் இல்லை: