Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி குட்வின் சந்தி ‘ஸ்ட்ரீட் புட்’ வர்த்தகர்களுடன் நகர முதல்வர் விசேட கலந்துரையாடல். வீதி ஒழுங்குபடுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்!


காத்தான்குடி குட்வின் சந்தி ‘ஸ்ட்ரீட் புட்’ வர்த்தகர்களுடன் நகர முதல்வர் விசேட கலந்துரையாடல். வீதி ஒழுங்குபடுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்!

காத்தான்குடி குட்வின் சந்தியில் இயங்கிவரும் ஸ்ட்ரீட் புட் கடை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நகரசபை சபா மண்டபத்தில் நேற்று (17.08.2026) இடம்பெற்றது.


நகர முதல்வர் SHM. அஸ்பர் JP, UM அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.

*பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் வியாபார நிலையங்களை முறைப்படுத்தல்.

*பாதுகாப்பு உத்தியோகத்தர்களை (Private security service) நியமித்து வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்துவதுடன்,  போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துதல்.


* உணவுகளைத் தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மிக உயர்ந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்தல்.

* அன்றாடம் சேரும் திண்ம மற்றும் திரவக் கழிவுகளைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முறையாக அகற்றுதல்.

*  கடை உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தொழில்சார் சவால்கள் மற்றும் களப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடி மற்றும் சாத்தியமான தீர்வுகள் வழங்கப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், வருமானப் பரிசோதகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் குட்வின் சந்தி ஸ்ட்ரீட் புட் வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காத்தான்குடி குட்வின் சந்தி ‘ஸ்ட்ரீட் புட்’ வர்த்தகர்களுடன் நகர முதல்வர் விசேட கலந்துரையாடல். வீதி ஒழுங்குபடுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம்! Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.