கல்வி மறுசீரமைப்பின் கீழ் திருத்தப்பட்ட தேசிய பாடவிதான சட்டகத்தை அமுல்படுத்தல்
கல்வி மறுசீரமைப்பின் கீழ் திருத்தப்பட்ட தேசிய பாடவிதான சட்டத்தை அமுல்படுத்துதலை கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின் கீழ் 2019 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் மூலம் தாயாரிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய தேசிய பாடவிதான சட்டம் மற்றும் அதனைச் செயற்படுத்தும் முறைக்கு 2023.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும், 2024 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரைக்கும் புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவதற்கு 1,6 மற்றும் 10 ஆம் தரங்களுக்குரிய பாடத்தொகுதிகளை தேசிய கல்வி நிறுவகம் தயாரித்து முடித்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, புதிய அரசின் கொள்கைகளின் பொருத்தப்பாட்டை உறுதிப்படுத்தி புதிய தேசிய பாடவிதான சட்டம் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு மாத்திரம் 2026 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 10 ஆம் தரம் தொடக்கம் தொழிற்கல்விப் பாடங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச பொருத்தப்பாடுகளை நியாயப்படுத்தி ஏற்புடைய தரப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொதுக்கல்வியில் நிலைமாற்றத்தை மேற்கொள்வதற்குத் தேவையான கருத்தாக்கப் பத்திரம் 2025.10.22 அன்று கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற உபகுழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னர், 2026.01.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, பொதுக்கல்விக்காக விரிவான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் முதலாவது கட்டததின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பை 2027 வரைக்கும் பிற்போடுவதற்கும், 2026 ஆம் ஆண்டில் 01 ஆம் தரத்திற்கான புதிய பாடவிதான மறுசீரமைப்பை மாத்திரம் அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், கல்வி, தொழிற்கல்வி அமைச்சரால் கீழ்க்குறிப்பிடப்படும் படிமுறைகள் உயர்கல்வி மற்றும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது :
இலங்கையின் பொதுக் கல்வியில் நிலைமாற்றத்தை' மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரத்தை தேசிய கல்வி ஆணைக்குழு மீளாய்வு செய்து கொள்கை ரீதியான விதந்துரைகளுடன் கூடிய புதிய கருத்தாக்கப் பத்திரத்தை மீண்டும் தயாரித்தல்
அவ்வாறு மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரம் 2026.03.23 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய செயற்பாட்டுக் குழுவால் மற்றும் பாடவிதான மறுசீரமைப்பு, மனித வள அபிவிருத்தி, கல்வி நிர்வாக மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு மற்றும் பொதுமக்களைத் தெளிவுபடுத்தல் மற்றும் மேம்பாடு போன்ற கல்வி மறுசீரமைப்புக்களுக்குரிய பிரதான 05 விடயங்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள உபகுழுவால் மீளாய்வு செய்யப்பட்டு மேலும் கண்காணிப்பு மற்றும் விதந்துரைகளைப் பெற்றுக் கொள்ளல்
குறித்த கண்காணிப்பு மற்றும் விதந்துரைகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் தேசிய கல்வி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய பாடவிதான சட்டகத்தை மேலும் திருத்தி தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பாடவிதான சட்டகத்திற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தாபன சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
தேசிய கல்வி நிறுவகத்தின் தாபன சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பாடவிதான சட்டகத்திற்குப் புதிய கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய செயற்பாட்டுக் குழுவின் உடன்பாட்டை 2026.08.13 அன்று பெற்றுக் கொண்டமை
2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பை மேலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில், 2027 ஆம் ஆண்டுக்குரிய 01 ஆம் தரம் மற்றும் 02 ஆம் தரத்தின் தவணைகள் 03 இற்கும் உரிய செயற்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டியை அச்சிட்டு தயார் செய்தல்
06 ஆம் தரத்திற்கான I, II மற்றும் III தவணைகளுக்கான பாடத்தொகுதி மற்றும் 03 தவணைகளுக்கான ஆசிரியர் வழிகாட்டியைத் தயார் செய்தல்.
ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை அனைத்துப் பாடங்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தால் பிரதான பயிற்றுவிப்பாளர்கள் தற்போது பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், மாகாண ரீதியாக ஆசிரியர் பயிற்சிகளுக்குரிய அனைத்துத் திட்டங்களையும் தயாரித்தல்
புரடசாலைகளில் நிலவுகின்ற வளங்களை முகாமைத்துவப்படுத்தி நடைமுறை ரீதியாக அமுல்படுத்தக் கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ள பாடசாலையை மையமாகக் கொண்ட மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு தொடர்பான கொள்கை வழிகாட்டி, மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு உபகுழுவால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய செயற்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல்
அதற்கமைய, தேசிய கல்வி ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரம், புதிய கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய செயற்பாட்டுக் குழுவால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள தேசிய பாடவிதான சட்டகம் மற்றும் பாடசாலைமைய மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு வழிகாட்டியின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 01 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கும், 02 ஆம் தரம் மற்றும் 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பித்து தொடர்ந்து அமுல்படுத்துவதற்கும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: