සිංහල පරිවර්තනය සමග)புரட்சியாளர்களின் அழியாத தடங்கள்! சே குவேரா முதல் தேசிய மக்கள் சக்தி வரை.
மார்க்சியப் புரட்சியாளர் சே குவேராவின் புரட்சிகர வாழ்வு, பொலிவியாவில் அவரது தியாகம் மற்றும் அவர் எழுப்பிய சமூக நீதிக்கான கேள்விகள் இன்றும் விவாதிக்கும் பொறுப்புக் கூறவேண்டிய பாடமாக உள்ளது.
கியூபப் புரட்சிக்குப் பின் இலங்கை வந்த சேகுவேரா, ஹொரணையில் நட்ட மகோகனி மரக்கன்று அவரது நினைவாக இன்றும் கம்பீரமாக நிற்பதை நினைவு கூர்கிறது.
சேகுவேராவின் சிந்தனைகளைப் போலவே தோழர் ரோஹண விஜேவீரவால் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கையில் நேர்மையான, சமத்துவமிக்க நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தை நிலையான கொள்கையுடன் தொடர்கின்றது.
1967ம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி பொலிவியா நாட்டின் மலைப்பகுதியில் அமைந்திருந்த யுரோ பள்ளத்தாக்கு (Yuro Ravine) பகுதியில் தங்கியிருந்த மார்க்சியப் புரட்சியாளர் எர்னெஸ்டோ சே குவேராவையும் அவரது கிளர்சியாளர்களையும் பொலிவிய இராணுவத்தின் ரேஞ்சர் படையினர் சுற்றி வளைத்தனர்.
அமெரிக்காவின் சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்ட இராணுவப் பயிற்சி மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில், சே குவேராவைப் பிடிப்பதற்கான வேட்டை தீவிரமடைந்திருந்த நிலையில், சுமார் 180 பொலிவிய இராணுவ வீரர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சே குவேராவின் காலில் குண்டு பாய்ந்தது. அவரது ஆயுதமும் செயலிழந்தது. இறுதியில், அவர் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிபட்டார்.
“சுடாதீர்கள்! நான் சேகுவேரா. இறந்தவனை விட உயிருடன் இருக்கும் நான் உங்களுக்குப் பயனுள்ளவன்.” என அந்த நேரத்தில் அவர் கூறியதாகப் பதிவாகியுள்ள வார்த்தைகள் இன்றும் வரலாற்றில் ஒலிக்கின்றன.
அத்தோடு அந்த வார்த்தைகள் ஒரு போராளியின் உயிர் காக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், தனது அடையாளத்தை மறைக்காமல் எதிரியின் முன்னால் நின்ற ஒருவரின் துணிச்சலாகவும் நினைவு கூரப்படுகின்றன.
சே குவாராவை அருகிலிருந்த லா ஹிகுவேரா (La Higuera) கிராமத்தின் பழைய பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.
இராணுவ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், தனது தோழர்களைப் பற்றிய தகவல்களை வழங்க அவர் மறுத்தார். அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாரா? மரணம் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்தாரா? இதற்கான அவரது உள்ளார்ந்த எண்ணங்களைத் துல்லியமாக யாராலும் கூற முடியாத வரலாறாக பதியப்பட்டுள்ளது.
1967 அக்டோபர் 9ஆம் திகதி, பொலிவிய இராணுவத் தலைமையகத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில், இராணுவச் சார்ஜன்ட் மரியோ டெரான் அவரைச் சுட்டுக் கொன்றார்.
39 வயதில் சே குவேராவின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஆனால், அவரது மரணம் ஒரு நீண்ட அரசியல் விவாதத்தின் தொடக்கமாக மாறியது என்பது வரலாற்றுப் பதிவுகள் உறுதிப்படுத்தும் உண்மையாகும்.
யார் இந்தச் சே குவேரா?
1928ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் பிறந்த
எர்னெஸ்டோ சேகுவேரா மருத்துவம் பயின்றவர். இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வழியாக அவர் மேற்கொண்ட பயணங்கள், வறுமை, தொழிலாளர் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வு, அதிகாரத்தின் அநீதி ஆகியவற்றைப் பற்றிய அவரது அரசியல் சிந்தனைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.
மருத்துவ அறிவைப் பெற்ற ஒருவராகத் தனது வாழ்க்கையை அமைதியான தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டும் செலவிடாமல், சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
கியூபப் புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.
1959ஆம் ஆண்டு புரட்சியானது வெற்றி பெற்ற பின்னர், கியூபாவில் அரசுப் பொறுப்புகளையும் வகித்தார். பின்னர் ஆப்பிரிக்காவின் காங்கோவிலும் பொலிவியாவிலும் புரட்சிகரப் போராட்டங்களை முன்னெடுக்க முயன்றார்.
ஆனால், கியூபாவில் கிடைத்த வெற்றி பொலிவியாவில் மீண்டும் நிகழவில்லை. உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிலான ஆதரவைப் பெற முடியாமை, இராணுவத்தின் நடவடிக்கைகள், உளவுத்துறையின் உதவி, அவரது குழுவின் தனிமைப்படுத்தப்பட்ட நிலை ஆகியவை அவரது இறுதிப் போராட்டமானது தோல்வியில் முடிவதற்கு காரணமாக அமைந்தது.
ஒரு மனிதனின் இலட்சியம் உயர்ந்ததாக இருப்பதால் மட்டும், அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வழி முறையும் சரியானதாகிவிடும் என்பதல்ல.
சேகுவேராவின் வாழ்க்கையை மதிப்பிடும் போது, அவர் எதிர்த்த சமூக அநீதிகளையும், அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தால் ஏற்பட்ட மனித இழப்புகளையும் ஒரே நேரத்தில் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது.
மரணம் முடித்தது உடலின் இயக்கத்தை மட்டுமே!
சே குவேரா கொல்லப்பட்ட பின்னர், அவரது உடல் உலக ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. அவரது மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக அவரது கைகள் துண்டிக்கப்பட்டன.
பின்னர், 1997ஆம் ஆண்டு அவரது எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு கியூபாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அவரது மரணத்தால் புரட்சிகர இயக்கம் பொலிவியாவில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், அவரது உருவமும் பெயரும் உலகளாவிய அரசியல் அடையாளங்களாக மாறின. இவைதான் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான உண்மைத் தத்துவமாகவும் இருக்கிறது.
ஏன்? ஏனெனில், சே குவேராவின் வாழ்க்கை ஒரு மனிதனின் தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வியைத் தாண்டி, உலகம் முழுவதும் ஏங்கித்தவித்த நிலைமைக்கான ஒரு கேள்வியை எழுப்பியது.
“சமூகத்தில் சிலர் அளவுக்கு அதிகமான அதிகாரத்தையும் செல்வத்தையும் அனுபவிக்கும்போது, பெரும்பான்மையான மக்கள் ஏன் வறுமையிலும் வாய்ப்பின்மையாலும் வாழ வேண்டும்?”
இந்தக் கேள்வியானது இன்றும் கூட பொருத்தமான கேள்வியாகவே இருந்து வருகின்றது.
உலகின் பல பகுதிகளில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நெருக்கடி, ஊழல், அரசியல் சலுகைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
தகுதியிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று உணரும் இளைஞர்கள், அரசியல் அதிகாரம் யாருக்காகச் செயல்படுகிறது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அத்தகைய சூழலில், சே குவேராவின் வாழ்க்கை வரலாறு வெறும் பழைய புரட்சியின் கதை அல்ல. அது இன்றைய தலை முறையினரும் விவாதிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு குறித்த பாடமாக உள்ளது.
இன்றைய இளைஞர்கள் சே குவேராவின் படத்தைச் சட்டையில் அணிவது, அவரது உருவத்தைச் சமூக ஊடகங்களில் பகிர்வது, அவரது பெயரை முழக்கமாக எழுப்புவது மட்டும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொண்டதாக அமைந்து விடாது.
அவர் எதிர்த்த வறுமையை உங்கள் சமூகத்தில் காண்கிறீர்களா? ஊழலை எதிர்க்கிறீர்களா? உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறீர்களா? அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பொறுப்புக்கூறலைக் கோருகிறீர்களா? இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களைச் சமமாக நடத்துகிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் சமூக மாற்றத்திற்கான உண்மையான அர்த்தம் இருக்கிறது.
ஆனால், அநீதிக்கு எதிரான கோபம் மட்டும் போதாது. அந்தக் கோபம் அறிவாகவும், அந்த அறிவு ஒழுங்கமைந்த மக்கள் பங்கேற்பாகவும், அந்தப் பங்கேற்பு நிலையான சமூக மாற்றமாகவும் மாற வேண்டும்.
ஆயுதமேந்துவதை மட்டும் புரட்சி என்று கருதுவது, ஒரு சமூகம் தவிர்க்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இறுதியாக முகம்கொடுக்கும் தருணமாகும்.
அது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் மட்டுமே சார்ந்தது என்ற வரலாற்று உண்மையை உணர்த்துகிறது.
ஜனநாயக வழிமுறைகள் மூலம் மக்களை விழிப்புணர்வூட்டுதல், சமூகத்தில் ஊழலை வெளிப்படுத்துதல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், கல்வி வாய்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்துதல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துதல்,நாட்டின் பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல். போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகளே உண்மையான சமூக மாற்றத்தை நிலைநாட்டக் கூடியவையாக உள்ளது.
ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கு அதிகாரத்தைப் பெறுவது மட்டும் போதாது. அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது.
சமத்துவத்திற்காகப் போராடுபவர்கள், தாங்களே அதிகாரத்தில் அமரும்போது சமத்துவத்தை மறந்துவிட்டால், அவர்கள் எதிர்த்த அநீதியின் இன்னொரு வடிவமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.
1967 அக்டோபர் 9ஆம் திகதி, பொலிவியாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்த பழைய பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிக் குண்டுகள் ஒரு மனிதனின் உயிரைப் பறித்தன. அந்தக் குண்டுகள் சே குவேராவின் உடலைச் சாய்த்தன. ஆனால், சமூக அநீதி ஏன் தொடர்கிறது என்ற கேள்விக்கு அவை பதிலளிக்கவில்லை.
வறுமை இன்னும் ஏன் இருக்கிறது? ஊழல் ஏன் மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது? அரசியல் அதிகாரம் ஏன் சிலரின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது? உழைக்கும் மக்களின் உழைப்புக்கு ஏன் உரிய மதிப்பு கிடைப்பதில்லை? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் வரை, சே குவேராவின் வாழ்க்கை வரலாறு பல தலைமுறைகளால் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்.
ஆனால், அவரை நினைவுகூர்வது என்பது அவரது ஒவ்வொரு முடிவையும் பிரயோசனமின்றி போற்றுவது அல்ல. அவரது துணிச்சலைப் புரிந்துகொள்வதுடன், அவரது தோல்விகளிலிருந்தும் அவர் தேர்ந்தெடுத்த வழிமுறைகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொள்வதே வரலாற்றைச் சரியாக அணுகும் முறையாகவும் ஞாபகப்படுத்துவதின் அடிப்படை நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
ஒரு புரட்சியாளரின் உண்மையான மரபு அவரது முகப்படத்தில் மட்டும் இல்லை. அவர் எழுப்பிய கேள்விகளை அடுத்த தலைமுறை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதில்தான் இருக்கிறது.
இளைஞர்களே, வரலாற்றைப் படியுங்கள். கடந்த காலங்களில் அதிகாரம் எவ்வாறு கையாளப்பட்டது என கேள்வி கேளுங்கள்.
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுங்கள். அதற்காக மனித உயிரையும், சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், மதிக்கும் வழியில் சமூக மாற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் அமைப்புடன் கைகோர்த்து பயணியுங்கள்.
ஏனெனில், ஒரு மனிதனைக் கொல்ல முடியும். ஒரு இயக்கத்தைத் தோற்கடிக்கவும் முடியும். ஆனால், ஒரு சமூகத்தில் நீடிக்கும் அநீதிக்கான தீர்வைத் தேடும் மனிதர்களின் கேள்விகளைத் துப்பாக்கிகளால் நிரந்தரமாக மௌனமாக்கி விட முடியாது.
இந்த நிலையில்தான், கியூபா புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, கியூபாவின் வர்த்தக அமைச்சராகவும் சர்வதேசப் பிரதிநிதியாகவும் இருந்த சேகுவேரா, இலங்கைக்கும் (சிலோன்) விஜயம் செய்து ரப்பர் பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் சர்க்கரை (சீனி) வர்த்தகம் குறித்து ஆராய்ந்தார்.
1959 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹொரண, மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள 'யஹலக கெலே' ரப்பர் தோட்டத்தில், உலகப் புரட்சியாளர் சேகுவேராவின் கரங்களால் நினைவுச் சின்னமாக 'மகோகனி' மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டது.
அறுபது ஆண்டுகளைக் கடந்தும் அந்த மரக்கன்று, இன்று பிரம்மாண்டமான மரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது.
அந்த வகையில், சே குவாராவின் புரட்சிகரச் சிந்தனைகளைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகக் குரல் கொடுத்த தோழர் ரோஹன விஜேவீர, 1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மருத்துவப் படிப்பிற்காக சோவியத் ஒன்றியத்தின் மொஸ்கோ லுமும்பா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
அங்கு பயின்றபோது, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பள்ளியில் மார்க்சிச-லெனினிச கொள்கைகளை ஆழமாகக் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததுடன், அது அவரது இடதுசாரிச் சிந்தனையை முழுமையான அரசியல் கோட்பாடாகவும் மாற்றியது.
பின்னர், முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு அகப்பட்டுத் தவித்த ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களின் விடிவுக்காய் ரோஹன விஜேவீரவினால் உருவாக்கப்பட்டதே மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஆகும்.
பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்த்தியாகங்களாலும், எதிர்கொண்ட கடுமையான இன்னல்களாலும் விதைக்கப்பட்ட அக்கட்சியின் உயரிய அரசியல் கொள்கையானது, இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரம் எனும் ஒரு புதிய பரிமாணத்தை தேசிய மக்கள் சக்தி மூலமாக எட்டியுள்ளது.
இலங்கை எனும் எமது அழகிய நாட்டை ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, அரசியல் தலையீடுகளற்ற சுயாதீனமான சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டி, சகல இன மக்களும் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் வாழக்கூடிய ஒரு வளமான ஒருங்கிணைந்த இலங்கைத் தேசத்தை கட்டியெழுப்பும் புனிதமான இலக்கை நோக்கி மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
கியூபாவின் புரட்சி வரலாற்றில் சேகுவேரா தியாகத்தின் குறியீடாய் என்றும் உலக மக்களின் உள்ளங்களில் நிலைத்திருப்பது போல, இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் றோஹண விஜேவீரவும் தனது உயிரை நீத்தபோதிலும், சமூக நீதிக்கான ஏக்கம் உள்ளவரை மக்களின் நெஞ்சங்களில் நீங்காத் துடிப்பாய் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.
வரலாற்றில் புரட்சியும் அதிகாரமும் பேசப்படும் போதெல்லாம், இந்த இரு தலைவர்களின் பெயர்களும் சமத்துவத்துக்கான போராட்டத்தின் அழியாத அடையாளங்களாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அஹமட் இர்ஷாட்.
08-10-2026.
විප්ලවවාදීන්ගේ අමරණීය පා සටහන්! චේගුවේරාගෙන් - ජාතික ජන බලයට. புரட்சியாளர்களின் அழியாத தடங்கள்! சே குவேரா முதல் தேசிய மக்கள் சக்தி வரை.
මාක්ස්වාදී විප්ලවවාදී චේගුවේරාගේ විප්ලවීය ජීවිතය, බොලිවියාවේදී ඔහුගේ දිවි පිදීම සහ ඔහු මතුකළ සමාජ සාධාරණත්වය පිළිබඳ ප්රශ්න අදටත් විවාදයට ලක්වන වගවීමේ විෂයක් ලෙස පවතී.
කියුබානු විප්ලවයෙන් පසු චේගුවේරා ශ්රී ලංකාවට පැමිණි අතර හොරණ ප්රදේශයේ රෝපණය කළ මහෝගනී පැළය අදටත් ඔහුගේ මතකයේ ගාම්භීර ලෙස පවතින බව සිහිපත් කිරීම වටී.
+++++++++++++++++++
1967 ඔක්තෝම්බර් 8 වෙනිදා, මාක්ස්වාදී විප්ලවවාදී අර්නස්ටෝ චේ ගුවේරා සහ ඔහුගේ කැරලිකරුවන් බොලිවියාවේ කඳුකරයේ පිහිටි යුරෝ රවීන්හි රැඳී සිටි බොලිවියානු හමුදා රේන්ජර්ස් විසින් වට කරන ලදී.
පිටුබලය ලබන හමුදා පුහුණුව සහ බුද්ධි මෙහෙයුම් පසුබිමට එරෙහිව චේගුවේරා දඩයම් කිරීම තීව්ර වන විට බොලිවියානු හමුදා භටයින් 180 ක් පමණ ප්රදේශය වට කළ බව ඓතිහාසික වාර්තා පෙන්වා දෙයි.
වෙඩි හුවමාරුවේදී චේගුවේරාගේ කකුලට වෙඩි වැදුණා. ඔහුගේ අවියත් ක්රියා විරහිත විය. අවසානයේදී, ඔහු පණපිටින්, තුවාල ලබා අල්ලා ගන්නා ලදී.
"වෙඩි තියන්න එපා! මම චේගුවේරා. මම මැරෙනවාට වඩා ජීවත් වෙලා ඔයාට ප්රයෝජනවත් වෙනවා." ඔහු එදා සටහන් කළ වදන් තවමත් ඉතිහාසයේ දෝංකාර දෙනවා. ඒ වගේම ඒ වදන් මතකයේ රැඳෙන්නේ සටන්කරුවෙකුගේ ජීවිතාරක්ෂක ප්රයත්නයක් ලෙස පමණක් නොව, තම අනන්යතාවය සඟවා නොගෙන සතුරා ඉදිරියේ සිටි කෙනෙකුගේ නිර්භීතකම ලෙසයි.
චේගුවේරා ළඟපාත ලා හිගුවෙරා ගම්මානයේ පැරණි පාසල් නිවසකට ගෙන ගොස් සිරගත කරන ලදී. හමුදා නිලධාරීන් ඔහුගෙන් ප්රශ්න කළහ. එහෙත් ඔහු තම සගයන් පිළිබඳ තොරතුරු ලබාදීම ප්රතික්ෂේප කළේය. ඊළඟ දවසේ සිදුවන්නට යන්නේ කුමක්දැයි ඔහු දැන සිටියාද? මරණය තමා ළඟ බව ඔහුට දැනෙනවාද? මේ සඳහා ඔහුගේ අභ්යන්තර සිතුවිලි කිසිවකුට නිවැරදිව කිව නොහැකි ඉතිහාසයක සටහන් වේ.
1967 ඔක්තෝම්බර් 9 වන දින බොලිවියානු හමුදා මූලස්ථානයේ නියෝග මත හමුදා සැරයන් මාරියෝ ටෙරාන් විසින් ඔහුට වෙඩි තබා ඝාතනය කරන ලදී. චේගුවේරාගේ ජීවිතය අවසන් වූයේ වයස අවුරුදු 39 දීය.නමුත් ඔහුගේ මරණය දීර්ඝ දේශපාලන සංවාදයක ආරම්භය බවට පත් වූ බව ඉතිහාස වාර්තා සනාථ කරන සත්යයකි.
කවුද මේ චේගුවේරා?
***************
1928 දී ආර්ජන්ටිනාවේ උපත
අර්නස්ටෝ චේගුවේරා වෛද්ය විද්යාව හැදෑරුවා. ලතින් ඇමරිකානු රටවල් හරහා ඔහුගේ සංචාර දරිද්රතාවය, ශ්රම සූරාකෑම, සමාජ අසමානතාවය සහ බලයේ අසාධාරණය පිළිබඳ ඔහුගේ දේශපාලන සිතුවිලි කෙරෙහි ප්රබල බලපෑමක් ඇති කළේය.
වෛද්ය විශාරදයකු ලෙස ඔහු තම ජීවිතය නිහඬ පෞද්ගලික දියුණුව සඳහා වැය කරනවාට වඩා සමාජ වෙනසේ විප්ලවීය මාවත තෝරා ගත්තේය.
ඔහු ෆිදෙල් කැස්ත්රෝ සමඟ කියුබානු විප්ලවයේ ප්රධාන භූමිකාවක් ඉටු කළේය. 1959 විප්ලවයේ ජයග්රහණයෙන් පසු ඔහු කියුබාවේ රජයේ තනතුරු ද දැරීය. පසුව අප්රිකාවේ කොංගෝවේ සහ බොලිවියාවේ විප්ලවීය අරගල කරන්න උත්සාහ කළා.
එහෙත් කියුබාවේ සාර්ථකත්වය බොලිවියාවේදී නැවත සිදු නොවීය. ප්රදේශයේ ජනතාවගෙන් අපේක්ෂිත මට්ටමේ සහයෝගය ලබා ගැනීමට නොහැකි වීම, හමුදාවේ ක්රියා කලාපය, බුද්ධි අංශවල සහය සහ ඔහුගේ කණ්ඩායම හුදකලා වීම ඔහුගේ අවසන් අරගලය අසාර්ථක වීමට හේතු විය.
මිනිසෙකුගේ පරමාදර්ශ උසස් වූ පමණින් ඔහු තෝරා ගන්නා සෑම මාර්ගයක්ම නිවැරදි වනු ඇතැයි අදහස් නොවේ.
චේගුවේරාගේ ජීවිතය ඇගැයීමේදී ඔහු විරුද්ධ වූ සමාජ අසාධාරණයන් සහ ඔහු නායකත්වය දුන් සන්නද්ධ අරගලය නිසා සිදුවූ මිනිස් පාඩු පිළිබඳව එකවර විමසා බැලීම අවශ්ය වේ.
මරණය අවසන් වන්නේ ශරීරයේ චලනය පමණි!
චේගුවේරා මරා දැමීමෙන් පසු ඔහුගේ දේහය ලෝක මාධ්යවල අවධානයට ලක්විය. ඔහුගේ මරණය සහතික කිරීම සඳහා ඔහුගේ දෑත් කපා දමන ලදී. පසුව, 1997 දී ඔහුගේ දේහය හඳුනාගෙන කියුබාවට ගෙන යන ලදී.
ඔහුගේ මරණය බොලිවියාවේ විප්ලවවාදී ව්යාපාරයට විශාල පසුබෑමක් ඇති කළේය. නමුත් ඔහුගේ රූපය සහ නම විශ්වීය දේශපාලන සංකේත බවට පත් විය. තේරුම් ගත යුතු සත්යයේ වැදගත් මූලධර්ම මේවාය.
ඇයි? මක්නිසාද යත් චේගුවේරාගේ ජීවිතය එක් මිනිසෙකුගේ පුද්ගල සාර්ථකත්වය හෝ අසාර්ථකත්වය ඉක්මවා ගොස් ලෝකය අපේක්ෂා කළ තත්වය පිළිබඳ ප්රශ්නය මතු කළ බැවිනි.
"සමාජයේ සුළු පිරිසක් අතිවිශාල බලයක් සහ ධනයක් භුක්ති විඳින විට බහුතරයක් දුප්පත්කමින් හා අවස්ථා හිඟයෙන් ජීවත් විය යුත්තේ ඇයි?"
මෙම ප්රශ්නය අදටත් අදාළ වේ. ලෝකයේ බොහෝ රටවල තරුනයෝ විරැකියාව, ආර්ථික අර්බුදය, දූෂණය, දේශපාලන වරප්රසාද සහ සමාජ අසමානතාවයට මුහුන දෙති. කුසලතා තිබියදීත් අවස්ථා අහිමි වී යයි හැඟෙන තරුණයෝ දේශපාලන බලය ක්රියාත්මක වන්නේ කාටදැයි ප්රශ්න කරති.
මෙම ප්රශ්නය අදටත් අදාළ වේ. ලෝකයේ බොහෝ රටවල තරුනයෝ විරැකියාව, ආර්ථික අර්බුදය, දූෂණය, දේශපාලන වරප්රසාද සහ සමාජ අසමානතාවයට මුහුන දෙති. කුසලතා තිබියදීත් අවස්ථා අහිමි වී යයි හැඟෙන තරුණයෝ දේශපාලන බලය ක්රියාත්මක වන්නේ කාටදැයි ප්රශ්න කරති.
එවන් සන්දර්භයක් තුළ චේගුවේරාගේ චරිතාපදානය යනු කිසියම් පැරණි විප්ලවයක කථාවක් පමණක් නොවේ. එය වත්මන් පරපුර ද සාකච්ඡා කළ යුතු සමාජ වගකීම පිළිබඳ පාඩමකි.
අද තරුණ තරුණියන් චේගුවේරාගේ පින්තූරය කමිසයේ ඇඳගෙන, ඔහුගේ රුව සමාජ මාධ්යවල හුවමාරු කරගනිමින්, ඔහුගේ නම කියමින් ඔහුගේ සිතැඟි තේරුම් ගන්නේ නැත.
ඔබේ ප්රජාව තුළ ඔහු විරුද්ධව කතා කළ දුප්පත්කම ඔබ දකිනවාද? ඔබ දූෂණයට විරුද්ධද? වැඩකරන ජනතාවගේ අයිතීන් සුරැකීමද? ඔබ බලයේ සිටින අයගෙන් වගවීම ඉල්ලා සිටිනවාද? ඔබ වාර්ගික, ආගමික සහ භාෂාමය වෙනස්කම්වලින් තොරව මිනිසුන්ට සමානව සලකනවාද?
සමාජ විපර්යාසයේ සැබෑ අරුත ඇත්තේ මෙම ප්රශ්නවලට පිළිතුරු තුළ ය.
නමුත් අයුක්තියට එරෙහි කෝපය පමණක් ප්රමාණවත් නොවේ. එම කෝපය දැනුම බවටත්, එම දැනුම සංවිධානාත්මක මහජන සහභාගීත්වය බවට පත් විය, එම සහභාගීත්වය තිරසාර සමාජ වෙනසක් බවට පත් විය යුතුය.
සන්නද්ධ විප්ලවයක් ගැන පමණක් සිතීම සමාජයක් අවසානයේ එහි නොවැළැක්විය හැකි දුෂ්කරතාවයට මුහුණ දෙන මොහොතයි. එය ඉතිහාසයේ යම් කාල පරිච්ඡේදයකට පමණක් අයත් වන බව සත්යයට යොමු කරයි.
ප්රජාතන්ත්රවාදී ක්රමය ජනතාව විසින් දැනුවත් කිරීම, සමාජ දූෂණ හෙළිදරව් කිරීම, කම්කරු අයිතිවාසිකම් සුරැකීම, සැමට අධ්යාපනය පිළිබඳ පුළුල් කිරීම, නීතිය ඉදිරියේ සියලු දෙනාම සිටින බව තහවුරු කිරීම, රටේ පොදු දේපළ පිළිබඳ තොරතුරු තහවුරු කිරීම. එවැනි නිර්මාණාත්මක ක්රමවේද බාහිර සමාජ වෙනසක් ඇති කිරීමට හැකි විය.
යහපත් සමාජයක් බිහි කිරීමට බලය ලබා ගැනීම පමණක් ප්රමාණවත් නොවේ. එහි වැදගත්කම පවතින අප බලය භාවිතා කරන ආකාරය.
සමානාත්මතාවය වෙනුවෙන් සටන් කරන අය බලයට පත් වූ විට සමානාත්මතාවය අමතක කළහොත්, ඔවුන් විරෝධතා සඳහා අසාධාරණයක් බවට පත්වීමේ අවදානමක් ඇත.
1967 ඔක්තෝබර් 9 වැනිදා බොලිවියාවේ කුඩා ගම්මානයක පැරණි පාසල් නිවසක වෙඩි තැබීමකින් මිනිසකුගේ ජීවිතය අහිමි විය. උණ්ඩ චේගුවේරාගේ සිරුර සමතලා කළේය. එහෙත් සමාජ අසාධාරණය පවතින්නේ මන්ද යන ප්රශ්නයට ඔවුන් පිළිතුරු නොදේ.
දිළිඳුකම තවමත් පවතින්නේ ඇයි? දූෂණය මිනිසුන්ගේ අනාගතයට බලපාන්නේ ඇයි? දේශපාලන බලය සුළු පිරිසකගේ උවමනාවට පාවිච්චි කරන්නේ ඇයි? වැඩකරන ජනතාවගේ ශ්රමයට නිසි වටිනාකමක් නොලැබෙන්නේ ඇයි? මේ ප්රශ්නවලට පිළිතුරු ලැබෙන තුරු චේගුවේරාගේ චරිතාපදානය පරම්පරා ගණනාවකින් නැවත නැවතත් කියවනු ඇත.
නමුත් ඔහුව සිහිපත් කිරීම යනු ඔහුගේ සෑම තීරණයක්ම නිෂ්ඵල ලෙස වර්ණනා කිරීම නොවේ. ඔහුගේ නිර්භීතකම තේරුම් ගැනීම සහ ඔහුගේ අසාර්ථකත්වයන්ගෙන් පාඩම් ඉගෙන ගැනීම සහ ඔහු තෝරාගත් ක්රම ඉතිහාසයට ප්රවේශ වීමට නිවැරදි මාර්ගය විය යුතු අතර සැමරීමේ මූලික අරමුණ විය යුතුය.
විප්ලවවාදියෙකුගේ සැබෑ උරුමය ඇත්තේ ඔහුගේ මුහුණේ පමණක් නොවේ. ඔහු නගන ප්රශ්නවලට ඉදිරි පරම්පරාව කටයුතු කරන ආකාරය මත එය තීරණය වේ.
යෞවනයනි, ඉතිහාසය කියවන්න. පසුගිය කාලයේ බලය හසුරුවන ආකාරය ප්රශ්න කරන්න. අයුක්තියට එරෙහිව හඬ නඟන්න. ඒ සඳහා මිනිස් ජීවිතයට, නිදහසට, සමානාත්මතාවයට ගරු කරන සමාජ වෙනසක් ඇති කිරීමට වෙහෙසෙන සංවිධානයක් සමඟ අත්වැල් බැඳගෙන ගමන් කරන්න.
මක්නිසාද යත් එය මිනිසෙකු මරා දැමිය හැකි බැවිනි. යෝජනාවක් ද පරාජය කළ හැකිය. එහෙත් සමාජයක පවතින අසාධාරණකම්වලට විසඳුම් සොයන මිනිසුන්ගේ ප්රශ්න සදාකාලිකව නිහඬ කිරීමට තුවක්කුවලට නොහැකිය.
කියුබානු විප්ලවයේ සාර්ථකත්වයෙන් පසු කියුබාවේ වෙළෙඳ අමාත්ය සහ ජාත්යන්තර නියෝජිතයා වූ සේගුරා ශ්රී ලංකාවට (ලංකාව) පැමිණ රබර් වගා ක්රම සහ සීනි වෙළෙඳාම පිළිබඳව විමර්ශනය කළේ මේ අවධියේය.
1959 අගෝස්තු 7 වැනිදා කළුතර දිස්ත්රික්කයේ හොරණ මොරගහහේන පිහිටි ‘යහලක කැලේ’ රබර් වත්තේ ලෝක විප්ලවවාදී සේගුරාගේ අතින් ‘මහෝගනී’ පැළයක් ස්මාරකයක් ලෙස රෝපණය කරන ලදී. වසර හැටකට පසු එම අංකුරය යෝධ ගසක් දක්වා වැඩී තේජාන්විතව පවතී.
ඒ ආකාරයට චේගුවේරාගේ විප්ලවීය චින්තනය මෙන් පීඩිත ජනතාවගේ විමුක්තිය වෙනුවෙන් හඬ නැගූ රෝහණ විජේවීර සහෝදරයා 1960 සැප්තැම්බර් මාසයේදී වෛද්ය අධ්යාපනය සඳහා සෝවියට් සංගමයේ මොස්කව් ලුමුම්බා විශ්වවිද්යාලයට ගියේය. එහි අධ්යාපනය ලබන අතරතුර මාක්ස්වාදී-ලෙනින්වාදී මූලධර්ම පිළිබඳ ගැඹුරින් ඉගෙන ගැනීමට ඔහුට අවස්ථාව ලැබුණි. න්යාය.
පසුව ධනේශ්වර පාලක පන්තියේ සූරාකෑමෙන් පීඩා විඳි පීඩිත ශ්රී ලාංකික ජනතාවගේ විමුක්තිදායකයා වූ රෝහණ විජේවීර විසින් මහජන විමුක්ති පෙරමුණ (ජවිපෙ) පිහිටුවන ලදී. දස දහස් ගණනකගේ ජීවිත පරිත්යාගයෙන් හා දැඩි දුෂ්කරතා මැද වපුරන ලද පක්ෂයේ උසස් දේශපාලන මූලධර්මය අද අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් ජාතික ජන බලවේගය හරහා ජනතාව ලබාදුන් දේශපාලන බලයේ නව මානයකට පැමිණ තිබේ.
අපේ සුන්දර රට ශ්රී ලංකාව දූෂිතයන්ගේ ග්රහණයෙන් ගොඩගැනීම, දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව ස්වාධීන නීතිය සහ යුක්තිය ස්ථාපිත කිරීම, සියලු ජාතීන්ට සමානාත්මතාවයෙන් සහෝදරත්වයෙන් ජීවත් විය හැකි සමෘද්ධිමත් ඒකාග්ර ශ්රී ලාංකේය ජාතියක් ගොඩනැගීමේ පූජනීය අරමුණ කරා මහජන විමුක්ති පෙරමුණ ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය සාර්ථකව ගමන් කරමින් සිටී.
චේගුවේරා කියුබානු විප්ලව ඉතිහාසයේ පරිත්යාගයේ සංකේතයක් වී ලෝකවාසී ජනතාවගේ හදවත් තුළ රැඳෙනවා සේම, ශ්රී ලංකාවේ මහජන විමුක්ති පෙරමුණේ නිර්මාතෘ රෝහණ විජේවීර සහෝදරයා ජීවිතය අවසන් කළද සමාජ සාධාරණත්වය පිළිබඳ අපේක්ෂාවක් ඇති තාක් ජනතා හදවත් තුළ ජීවත් වේ.
ඉතිහාසයේ විප්ලවය සහ බලය පිළිබඳ සාකච්ඡා කෙරෙන සෑම අවස්ථාවකම සමානාත්මතාවය සඳහා වූ අරගලයේ අමරණීය සංකේත ලෙස මෙම නායකයින් දෙදෙනාගේ නම් දිගටම නාද වනු ඇත.
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් සඟරාව සඳහා,
08-10-2026.
සිංහල පරිවර්තනය සමග)புரட்சியாளர்களின் அழியாத தடங்கள்! சே குவேரா முதல் தேசிய மக்கள் சக்தி வரை.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 08, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 08, 2026
Rating:




கருத்துகள் இல்லை: