Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) மதவாத அரசியலுக்கு இனியும் இடமில்லை! விழிப்படைந்த முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சிப் பேச்சுகளால் ஏமாற்ற முடியாது


எந்தவொரு சமூகத்தின் உரிமையையும் மற்றொரு சமூகத்தின் உரிமையை பறிப்பதன் மூலம் பாதுகாக்கப்பட கூடாது.

கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியவர்கள், இன்று அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் மற்றும் இனவாத  முழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் கலாசாரத்தை முஸ்லிம் சமூகம் இனியும் நம்பத் தயாராக இல்லை.


கிழக்கில் அண்மையில் கட்சியொன்றின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற ஆசனம் அதே ஊரைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கு ஒருவருடம் வழங்கப்பட்டதை கெளரவிக்கும் வகையில் பொதுக்கூட்டம் ஒன்று  நடைபெற்றது. அக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அவரது உரையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்களும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் இடம்பெற்றன. அதில், இலங்கையில் இரண்டு இனங்களே வாழுகின்றது என்றும், முஸ்லிம் சமூகம் - ஓர் இனமே அல்ல என்கிற நிலைப்பாட்டில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது என  அரசாங்கத்திற்கு எதிரான உச்சநிலை வெறுப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

இத்தகைய மேடைகளில் முன்வைக்கப்படும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்மைகளாலும் ஆதாரங்களாலும் நிரூபிக்கப்பட வேண்டியவை. மாறாக, மத உணர்வுகளைத் தூண்டி, அச்சத்தையும் சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறையல்ல என்பது முஸ்லிம் புத்தி ஜீவிகளின் பார்வையாக உள்ளது.

ஒரு காலத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளாலும், சமூகப் பாதுகாப்பு குறித்த அச்சங்களாலும் மக்களின் அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்க முடிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளின் வார்த்தைகளை மட்டும் கேட்டு முடிவெடுப்பதில்லை. அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளையும், அதிகாரத்தில் இருந்தபோது ஆற்றிய பணிகளையும், இன்று முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் சமூகமாக மாறியுள்ளது.

இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகின்ற அரசியல் சக்திகள், பழைய பாணியிலான மேடைப் பேச்சுகளையே இன்னும் நம்பியிருப்பது காலத்திற்குப் பொருந்தாத அணுகுமுறையாகவே பார்க்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் தனித்துவம் பேசும் இவ்வாறான சிறுபான்மை அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும்,பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அதிகாரத்தில் இருந்தார்கள். அப்படியிருக்க, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இன நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அபாயா அணிந்து சென்ற முஸ்லிம் ஆசிரியையின் ஆடை தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பொழுது, தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததன் காரணமாக முஸ்லிம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பொழுது, தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பான சர்ச்சையும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்ற பொழுது, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மத நடைமுறைகள் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும், அச்சங்களும் எழுந்த பொழுது இவ்வாறானவர்கள் செயற்பட்ட விதம்குறித்த விமர்சனங்கள் இன்றும் உள்ளன. 

அத்தகைய  சம்பவங்கள் ஒவ்வொன்றும் அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகள், கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவம் குறித்த முக்கியமான கேள்விகளையே எழுப்பின.

ஆனால், அவர்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களில் இடம்பெற்ற அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக, அவர்களுடைய அரசியல் பொறுப்பும், செயற்பாடுகளும் இன்று கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.

அதிகாரத்தில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல், இன்று மேடைகளில் முழங்குவதால் மட்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியாது!

உரிமைகள் என்று உணர்ச்சிவசப்பட்டுப் உரையாற்றிய போதிலும், இறுதியில் ஒரு சமூகத்தின் பாதுகாப்பும், கண்ணியமும் கேள்விக்குறியான காலத்தை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறந்துவிடாது. ஜனாஸாக்கள் எரிப்பு போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களின் போது மெளனம் காத்து, அதிகாரத்தையும் அரசியல் சலுகைகளையும் தக்க வைத்துக்கொள்ள துணை நின்றவர்கள் இன்று மீண்டும் மத, இன உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்ய முற்படுவது ஏற்புடையதல்ல என்பதே பொதுவான சமூக கருத்தாதத உள்ளது.

 ஆனால், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களையும் துரோகங்களையும் உணர்ந்துள்ள இன்றைய விழிப்புணர்வுமிக்க முஸ்லிம் சமூகமானது, போலியான உணர்ச்சிப் பேச்சுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் நோக்கங்களை இனியும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை!

முன்னைய ஆட்சியாளர்களுக்கும், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவருக்கு ஆதரவாகக் கைகொடுத்து, இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகக் கொதித்தெழுவதாகக் காட்டிக்கொள்பவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றை மக்கள் மறந்து விடவில்லை. 

அதிகாரத்திற்காகச் சமூகத்தின் உணர்வுகளைப் பயன்படுத்தும் அரசியலை விடவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையும், ஊழலற்ற நிர்வாகமும், இன மத பேதமின்றி மக்களைப் பாதுகாக்கும் ஆட்சியுமே நாட்டிற்கும் சமூகத்திற்கும் அவசியமானவையாக உள்ளது. 

கடந்த கால ஊழல்களும், முறைகேடுகளும் சட்டத்தின் முன் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் காலம் நெருங்குகின்றது என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, இன்றைய ஆட்சியில் எந்தவொரு அரசியல் சக்தியையும் கேள்விக்குட்படுத்தும் உரிமையானது சாதாரண மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் அதிகாரத்தின் துணையுடன் இருந்த அரசியல்வாதிகள் உண்மையான விமர்சனங்களை முன்வைப்பதற்கு அச்சயமடைந்தவர்களாக இருந்தார்கள்.  இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் திறந்த வெளியில் விமர்சிக்கவும் தமது கருத்துகளை முன்வைக்கவும் முடிகின்றது என்றால்,  அது கருத்துச் சுதந்திரத்திற்கும், ஜனநாயக வெளிப்படைத் தன்மைக்கும் வழங்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைப்பதற்குப் பதிலாக, ஊழலற்ற நிர்வாகம், நீதியான ஆட்சி, சமூகப் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான எதிர்காலம் ஆகியவற்றைக் கோருவதே காலத்தின் தேவையாகும். 

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு என்பது தேர்தல் காலங்களில் மேடைகளில் முழங்கப்படும் கோஷமாக மட்டும் இருக்க முடியாது. அது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும். மதச் சுதந்திரம், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவம், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், விவசாயம், மீன்பிடி, வணிகம், நில உரிமைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவைதான் சமூகத்தின் உண்மையான அரசியல் தேவைகளாகும்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைப்பதால் மக்களின் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதே புத்தி ஜீவிகளும், நடுநிலைவாதிகளும் இவர்களைப் பார்த்து கேட்கின்ற கேள்வியாகும்.

அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் இருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும். முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டிருந்தால் சம்பவங்களையும் பொறுப்பான தரப்புகளையும் சுட்டிக்காட்டி, சட்டரீதியான தீர்வுகளைக் கோர வேண்டும். அதுவே பொறுப்புள்ள அரசியல் நடைமுறையாகும்

மக்களின் மத உணர்வுகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை உண்மையான நடைமுறையாக காண்பிக்க முடியாது. அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்குவதே உண்மையான மக்களுக்கான அரசியலாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்குப் பல்வேறு கருத்துகள் இருக்கலாம். எந்தவொரு அரசாங்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக எழும் நியாயமான கேள்விகளுக்கும், குறைகளுக்கும் அரசாங்கம் வெளிப்படையாகப் பதிலளிக்கும் அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் உள்ளது. 

முஸ்லிம் சமூகத்தின் வாக்குரிமை என்பது எந்தவொரு கட்சிக்கும் நிரந்தரமாகச் சொந்தமான சொத்தல்ல. அது மக்களின் ஜனநாயக உரிமையாகும். அந்த வாக்குரிமையை யாருக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. எனவே, முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் அவர்களுடைய மத, கலாச்சார உணர்வுகளைத் தூண்டுவதை விட, அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் தமது கடந்த காலச் செயற்பாடுகளையும் முன்வைக்க வேண்டும்.

இலங்கை என்பது சிங்களம், தமிழ், முஸ்லிம் என ஒரு தனி இனத்திற்கு சொந்தமான நாடாக பார்க்வோ அல்லது உரிமை கோரவோ முடியாது. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமையும், சமமான கண்ணியமும் இருக்க வேண்டிய எல்லோருக்குமான பொதுவான தாய் நாடாகும்.

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமிழ் மக்களுடன் முரண்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் சிங்கள மக்களை எதிரிகளாகக் கருத வேண்டியதுமில்லை. எந்தவொரு சமூகத்தின் உரிமையும் மற்றொரு சமூகத்தின் உரிமையைப் பறிப்பதன் மூலம் பாதுகாக்கப்படக் கூடாது.

நீதியான சட்டங்கள், சுதந்திரமான நிறுவனங்கள், பொறுப்புக்கூறல், மதச் சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மூலமே அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை நீண்டகால அடிப்படையில் பாதுகாக்க முடியும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான ஆதரவோ விமர்சனமோ எதுவாக இருந்தாலும், இந்த அடிப்படைக் கோட்பாடுகளை மக்கள் கைவிடக்கூடாது. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நடை முறைப்படுத்துகிறதா? சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயற்படுகிறதா? சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிப்பதே விழிப்புணர்வுள்ள குடிமக்களின் பொறுப்பாகும்.

ஆகவே, முஸ்லிம் புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் நடுநிலைச் சிந்தனையாளர்கள் உணர்ச்சிகரமான அரசியல் உரைகளைக் கடந்து, உண்மைகளையும் செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட அரசியல் கலாசாரத்தை வளர்க்க மேலும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாய கால கட்டத்தில் இருக்கின்றார்கள்.

இளைஞர்களினதும், எமது பிள்ளைகளினதும்  எதிர்காலத்தை மேடைப் பேச்சுகளுக்குப் பலியாக்கி விட முடியாது. நமது வாக்குரிமையை அச்சத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. நமது மதத்தையும் சமூக அடையாளத்தையும் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கவும் முடியாது.

யார் பேசுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்கும் சமூகமாக இருந்து விடாதீர்கள். அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதையும் பாருங்கள். யார் குற்றஞ்சாட்டுகிறார்கள் என்பதை மட்டும் கேட்கும் கடந்த கால சமூகத்தில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்பதையும் ஆராயும் அரசியல் சிந்தனையாளர்களாக மாற வேண்டிய காலத்தில் தற்போதைய மக்கள் இருக்கின்றார்கள்.

அத்தோடு, யார் நம்மைப் பாதுகாப்பதாகக் கூறுகிறார்கள் என்பதை மட்டும் நம்பாமல்; நமது உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் முன்வைக்கும் நடைமுறைத் திட்டங்களையும் மதிப்பீடு செய்யவதே இளைஞர் சமூகத்துக்கு இருக்கும் முக்கிய தேவைப்பாடாகும்.

முஸ்லிம் சமூகத்திற்குத் தேவை அரசியல் அடிமைத்தனம் அல்ல; அரசியல் சுயசிந்தனையாகும்! மதவாத முழக்கங்கள் அல்ல; உரிமைகளுக்கான உறுதியான குரலாகும்! தேர்தல் கால வாக்குறுதிகள் அல்ல; மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் உண்மையான மாற்றங்களாகும்!

அத்தோடு, இனவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்து, சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும், சமூக நீதியையும் வலியுறுத்தும் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது.

எனவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் மாற்றங்கள் அனைத்தையும் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, நாட்டின் அமைதி, சமத்துவம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகிய இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் மக்கள் விழிப்புடன் பங்கேற்க வேண்டும்.


ஒரு சமூகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியது இனவாதிகளின் கோஷங்களோ, மதவாதிகளின் அச்சுறுத்தல்களோ அல்ல; உண்மையை ஆராயும் மக்களின் விழிப்புணர்வும், நீதியை நிலைநாட்டும் அவர்களின் துணிவும்தான்!

ஒன்று பட்டால்! உரிமைகள் பாதுகாக்கப்படும்! அதனால் இன, மத வேறுபாடுகளைக் கடந்து சமத்துவமான இலங்கையைக் கட்டியெழுப்பவும் முடியும் என்பதே உண்மை.

அஹமட் இர்ஷாட்.
09-10-2026

ආගම් දේශපාලනයට තවත් ඉඩක් නැත! සංවේදී කතාවලට සවිඥානික සමාජයක් රැවටිය නොහැක.

ඕනෑම ජන කොටසකගේ අයිතිය රැකිය යුත්තේ තවත් ජන කොටසකගේ අයිතිය උදුරා ගැනීමෙන් නොවේ.

පසුගිය කාලයේ බලයේ සිටියදී සුළු ජාතීන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීමට අසමත් වූ පිරිස් අද ආණ්ඩුවට පදනම් විරහිත චෝදනා එල්ල කරනවා.

හැඟුම්බර කතා සහ ජාතිවාදී සටන් පාඨ මත පදනම් වූ පැරණි දේශපාලන සංස්කෘතිය විශ්වාස කිරීමට මුස්ලිම් සමාජය තවදුරටත් සූදානම් නැත.
+++++++++++++++++++

නැඟෙනහිරදී පක්ෂයක ජාතික ලැයිස්තු පාර්ලිමේන්තු මන්ත්‍රී ධුරය එම නගරයේම නීතිඥවරයකුට වසරකට පිරිනැමීම වෙනුවෙන් උපහාර ජන හමුවක් පැවැත්විණි. හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු පැමිණ රැස්වීම ඇමතුවා. 

ජාතික ජන බලවේගය රජය දැඩි ලෙස විවේචනය කිරීම සහ මුස්ලිම් ජනතාවට එරෙහිව රජය කටයුතු කරන බවට චෝදනා කිරීම ඔහුගේ කතාවට ඇතුළත් විය. එහි ඔහු ආණ්ඩුවට එරෙහිව දැඩි වෛරයක් පළ කළේ ලංකාවේ ජීවත් වන්නේ ජාතීන් දෙකක් බවත් මුස්ලිම් ප්‍රජාව යනු එක ජාතියක් නොවන බවත්ය.

එවැනි වේදිකාවල කරන එවැනි චෝදනා කරුණු සහ සාක්ෂි සහිතව සනාථ කළ යුතුය. ඊට පටහැනිව, ආගමික හැඟීම් අවුස්සමින්, ජනතාව තුළ භීතිය සහ සැකය ඇති කරමින් දේශපාලන වාසි ලබාගැනීමේ පැරණි දේශපාලන සංස්කෘතිය යළි පණ ගැන්වීමට උත්සාහ කිරීම සෞඛ්‍ය සම්පන්න දේශපාලන ප්‍රවේශයක් නොවන බව මුස්ලිම් බුද්ධිමතුන්ගේ අදහසයි.

වරෙක චිත්තවේගීය වාචාලකම සහ සමාජ ආරක්ෂාව පිළිබඳ බිය මිනිසුන්ගේ දේශපාලන තීරණ තීරණය කළ හැකිය. නමුත් අද පරපුර දේශපාලකයන්ගේ කතාවලට පමණක් සවන් දී තීන්දු තීරණ ගන්නේ නැත. ඔවුන්ගේ අතීත ක්‍රියාවන්, බලයේ සිටියදී කළ වැඩ සහ අද ඔවුන් කරන චෝදනාවලට සාක්ෂි සසඳන සමාජයක් බවට පත්වෙලා.

මෙම වෙනස තේරුම් ගැනීමට අපොහොසත් වී තවමත් පැරණි තාලයේ වේදිකා කතා මත විශ්වාසය තබන දේශපාලන බලවේගයන් සැලකෙන්නේ අනාරක්ෂිත ප්‍රවේශයක් ලෙස ය.

පසුගිය කාලයේ එවැනි සුළු ජාතික දේශපාලන පක්ෂවල අය ඇමැතිවරු, රාජ්‍ය ඇමැතිවරු, මන්ත්‍රීවරු වශයෙන් බලයේ සිටියා. එසේ නම්, සුළු ජාතීන්ගේ අයිතීන් සුරැකීමට, වාර්ගික සහජීවනය ශක්තිමත් කිරීමට සහ නීතිය ඉදිරියේ සියලු දෙනා සමාන බව තහවුරු කිරීමට ඔවුන් කර ඇති දායකත්වය කුමක්ද? යන ප්‍රශ්නය මතුවන්නට පටන්ගෙන තිබේ.

ත්‍රිකුණාමලය ෂන්මුඛා හින්දු කාන්තා විද්‍යාලයේ අබයා ඇඳගත් මුස්ලිම් ගුරුවරියකගේ ඇඳුම සම්බන්ධයෙන් ආන්දෝලනයක් ඇති වූ විට, ධර්මචක්‍රය සහිත ඇඳුමකින් සැරසී මුස්ලිම් දැරියක් අත්අඩංගුවට ගැනීමේදී, තඹුල්ලේ පල්ලියට පහරදීමේ ආන්දෝලනාත්මක ප්‍රහාරයක් එල්ල වූ විට, මෙම විනෝදකාමීන් ක්‍රියා කළ ආකාරය පිළිබඳව විවේචන එල්ල විය. ප්රජාව. අදත් ඉන්නවා. 

එවැනි සෑම සිදුවීමක්ම එකල මුස්ලිම් ප්‍රජාවගේ ආගමික අයිතිවාසිකම්, ගරුත්වය, ආරක්ෂාව සහ සමානාත්මතාවය පිළිබඳ වැදගත් ප්‍රශ්න මතු කළේය.

නමුත් ඔවුන් බලයේ සිටින කාලයේ මෙවැනි සිදුවීම් නිසා ඔවුන්ගේ දේශපාලන වගකීම සහ ක්‍රියා කලාපය අද ප්‍රශ්න කළ යුතු කරුණක් බවට පත්වෙලා.

ඔබ බලයේ සිටියදී කළ දේ පිළිබඳ ප්‍රශ්නයට පිළිතුරු නොදී අද වේදිකාවල නාද කළ පමණින් ජනතා විශ්වාසය දිනාගත නොහැක!

අයිතිවාසිකම් වෙනුවෙන් දැඩි ලෙස ආමන්ත්‍රණය කළ ද අවසානයේ දී ප්‍රජාවක ආරක්‍ෂාව සහ අභිමානය ප්‍රශ්නයට ලක්වන කාලයක් මුස්ලිම් ප්‍රජාවට කිසිදා අමතක නොවේ. ජනාසා ගිනි තැබීම් වැනි සංවේදී ප්‍රශ්නවලදී මුනිවත රකිමින් බලය, දේශපාලන වරප්‍රසාද රැකගැනීමට පැත්තකට වී සිටි පිරිස් අද යළිත් ආගම්වාදී ජනවාර්ගික හැඟීම් අවුස්සමින් දේශපාලනය කිරීමට උත්සාහ කිරීම සුදුසු නොවන බවට පොදු සමාජ මතයක් පවතී

එහෙත් අතීතයේ අමිහිරි අත්දැකීම් සහ පාවාදීම් අවබෝධ කරගත් වර්තමාන සවිඥානික මුස්ලිම් ප්‍රජාව ව්‍යාජ හැඟීම්බර කතා පිටුපස සැඟවී ඇති දේශපාලන අරමුණු අන්ධ ලෙස පිළිගැනීමට තවදුරටත් සූදානම් නැත!

පසුගිය ආණ්ඩු සමයේ ගෝඨාභය රාජපක්ෂ මහතාට සහය දීලා අද අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවට විරුද්ධව කැරලි ගසන අයගෙ අතීත දේශපාලන ඉතිහාසය ජනතාවට අමතක නැහැ. 

සමාජයේ හැගීම් බලය සඳහා යොදා ගන්නා දේශපාලනයට වඩා, නීතිය ඉදිරියේ සියලු දෙනා එක හා සමානයි යන ප්‍රතිපත්තිය, දූෂණයෙන් තොර පාලනයක්, ජාති ආගම් භේදයකින් තොරව ජනතාව රකින ආණ්ඩුවක් රටට සමාජයට අවශ්‍යයි. 

අතීතයේ සිදු වූ දූෂණ හා අක්‍රමිකතා නීතිය හමුවට ගෙන එන කාලය ළං වන බව විශ්වාස කෙරේ. ඒ වගේම අද පවතින පාලනය තුළ ඕනෑම දේශපාලන බලයක් ප්‍රශ්න කිරීමේ අයිතිය සාමාන්‍ය ජනතාවට ලබාදී තිබෙනවා.

වරක් බලයට සම්බන්ධ වූ දේශපාලකයින් සැබෑ විවේචන ඉදිරිපත් කිරීමට බිය වෙති.  අද ජාතික ජන බලවේගයට රජය විවෘතව විවේචනය කිරීමටත් තම මතය ඉදිරිපත් කිරීමටත් හැකි වන්නේ නම් එයින් ඉස්මතු වන්නේ අදහස් ප්‍රකාශ කිරීමේ නිදහසට සහ ප්‍රජාතන්ත්‍රවාදී විනිවිදභාවයට ලබා දී ඇති වැදගත්කමයි.

කුලවාදය සහ කල්ලිවාදය යළි වැපිරීමට මෙම නිදහස භාවිත කරනවා වෙනුවට දූෂණයෙන් තොර පාලනයක්, සාධාරණ පාලනයක්, සමාජ සුරක්ෂිතතාවක් සහ තරුණ පරපුරට අනාගතයක් ඉල්ලා සිටීම යුගයේ අවශ්‍යතාවයයි. 

මුස්ලිම් ප්‍රජාව ආරක්ෂා කිරීම මැතිවරණ කාලවලදී වේදිකාවල නගන සටන් පාඨයක් පමණක් විය නොහැක. එය ප්‍රායෝගිකව තහවුරු කළ යුතු මූලික අයිතිවාසිකමකි. සමාජයේ සැබෑ දේශපාලන අවශ්‍යතා වන්නේ ආගමික නිදහස, පූජනීය ස්ථාන ආරක්ෂා කිරීම, නීතිය ඉදිරියේ සමානාත්මතාවය, අධ්‍යාපන අයිතිය, රැකියා, ආර්ථික සංවර්ධනය, කෘෂිකර්මාන්තය, ධීවර කර්මාන්තය, වෙළෙඳාම, ඉඩම් අයිතිය සහ තරුණයන්ගේ අනාගතයයි.

මේ ප්‍රශ්නවලට විසඳුම් යෝජනා කරනවා වෙනුවට බුද්ධිමතුන් සහ මධ්‍යස්ථ මතධාරීන් අසන ප්‍රශ්නය වන්නේ ආණ්ඩුව මුස්ලිම් විරෝධී යැයි සාමාන්‍ය චෝදනා පමණක් එල්ල කළහොත් ජන ජීවිතය වෙනස් වන්නේ කුමක් ද යන්නයි.

රජයට එරෙහි විවේචන සාක්ෂි සහිතව ඉදිරිපත් කළ යුතුයි. මුස්ලිම් ජනතාවගේ අයිතීන් කඩ වී ඇත්නම් එම සිද්ධීන් හා වගකිව යුතු පාර්ශ්ව පෙන්වා නීතිමය ප්‍රතිකර්ම සෙවිය යුතුය. එය වගකිවයුතු දේශපාලන භාවිතයකි

ජනතාවගේ ආගමික හැඟීම් දේශපාලන අවියක් කර ගැනීම සැබෑ භාවිතයක් ලෙස පෙන්විය නොහැක. සැබෑ මිනිසුන් සඳහා දේශපාලනය යනු ඔවුන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සඳහා ප්‍රායෝගික විසඳුම් නිර්මාණය කිරීමයි.

ජාතික ජනබල ආණ්ඩුවේ ක්‍රියාකාරීත්වය ගැන විවිධ මත මිනිසුන්ට තිබෙන්න පුළුවන්. කිසිම රජයක් විවේචනයෙන් ඔබ්බට නැත. සුළු ජාතීන්ගේ අයිතීන් සම්බන්ධයෙන් පැන නගින නීත්‍යානුකූල ප්‍රශ්න සහ දුක්ගැනවිලි සඳහා විවෘතව පිළිතුරු දීමේ ප්‍රතිපත්තියක් රජය සතුය. 

මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්ද බලය සදාකාලිකව කිසිම පක්ෂයකට අයිති වත්කමක් නොවේ. එය ජනතාවගේ ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතියකි. ඒ ඡන්ද අයිතිය දෙන්නේ කාටද කියලා තීරණය කරන්න ජනතාවට බලය තියෙනවා. ඒ නිසා මුස්ලිම් ජනතාවගේ සහය ලබාගැනීමට කැමති ඕනෑම දේශපාලන පක්ෂයක් ඔවුන්ගේ ආගමික සංස්කෘතික හැඟීම් අවුස්සනවාට වඩා ඔවුන්ගේ ප්‍රශ්නවලට සහ ඔවුන්ගේ අතීත ක්‍රියාකාරකම්වලට විසඳුම් ඉදිරිපත් කළ යුතුයි.

ශ්‍රී ලංකාව සිංහල, දෙමළ, මුස්ලිම් ආදී තනි ජනවර්ගයකට අයත් රටක් ලෙස දැකිය නොහැක. මේ රටේ ජීවත්වන සියලුම මිනිසුන්ට සමාන අයිතිවාසිකම් හා සමාන ගෞරවයක් හිමිවිය යුතු සැමට පොදු මාතෘ භූමියකි.

මුස්ලිම් ජනතාවගේ ආරක්ෂාව තහවුරු කිරීම සඳහා දෙමළ ජනතාව සමඟ ගැටුම් ඇතිකර ගැනීමට අවශ්‍ය නැහැ. දෙමළ ජනතාවගේ අයිතීන් සුරැකීමට සිංහලයන් සතුරන් ලෙස සැලකිය යුතු නැත. ඕනෑම ජන කොටසකගේ අයිතිය රැකිය යුත්තේ තවත් ජන කොටසකගේ අයිතිය උදුරා ගැනීමෙන් නොවේ.

සාධාරණ නීති, නිදහස් ආයතන, වගවීම, ආගමික නිදහස සහ සමානාත්මතාවය තුළින් පමණක් දීර්ඝ කාලීන පදනමකින් සියලු ජන කොටස්වල අයිතිවාසිකම් ආරක්ෂා කළ හැකිය.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ රජයට කුමන ආකාරයේ සහයෝගයක් හෝ විවේචනයක් එල්ල වුවද ජනතාව මෙම මූලික ප්‍රතිපත්ති අත් නොහැරිය යුතුය. රජය දුන් පොරොන්දු ඉටු කරනවාද? නීතිය සැමට එකසේ ක්‍රියාත්මක වේද? සුළු ජාතීන්ගේ අයිතීන් සුරක්ෂිතද? එය නිරීක්ෂණය කිරීම සවිඥානික පුරවැසියන්ගේ වගකීමකි.

එබැවින් මුස්ලිම් බුද්ධිමතුන්, ප්‍රජා නායකයින්, තරුණයින් සහ මධ්‍යස්ථ චින්තකයින් හැඟීම්බර දේශපාලන වාචාල කතාවලින් ඔබ්බට ගොස් කරුණු සහ ක්‍රියාවන් මත පදනම් වූ දේශපාලන සංස්කෘතියක් වර්ධනය කිරීමට වඩාත් කැපවීම අත්‍යවශ්‍ය වේ.

තරුණයන්ගේ සහ අපේ දරුවන්ගේ අනාගතය වේදිකා කතාවලට බිල්ලට දෙන්න බැහැ. අපේ ඡන්ද අයිතිය බයට තීරණය කරන්න බැහැ. අපේ ආගම සහ සමාජ අනන්‍යතාවය දේශපාලන වාසි සඳහා යොදා ගැනීමට ඉඩ දිය නොහැක.

කතා කරන්නේ කවුද කියලා විතරක් බලන සමාජයක් වෙන්න එපා. ඒවගේම බලන්න පසුගිය කාලේ කරපු දේවල්. චෝදනා කරන්නේ කවුදැයි පමණක් අසන අතීතයේ සමාජයකින් එල්ල වන චෝදනාවලට සාක්ෂි මොනවාදැයි විමසා බලන දේශපාලන චින්තකයින් බවට පත් විය යුතු යුගයක අද ජනතාව පත්ව සිටිති.

එසේම, ඔවුන් අපව ආරක්ෂා කරන බව පවසන අය විශ්වාස නොකරන්න; තරුණ ප්‍රජාවගේ ප්‍රධාන අවශ්‍යතාවය වන්නේ අපගේ අයිතීන් සුරැකීමට ඔවුන් ඉදිරිපත් කරන ප්‍රායෝගික සැලසුම් ඇගයීමයි.

මුස්ලිම් ප්‍රජාවට අවශ්‍ය වන්නේ දේශපාලන යටත් කර ගැනීම නොවේ; දේශපාලනය ආත්මාර්ථකාමීයි! ආගමික සටන් පාඨ නොවේ; අයිතිවාසිකම් වෙනුවෙන් ශක්තිමත් හඬක්! මැතිවරණ කාලයේ පොරොන්දු නොවේ; මිනිසුන්ගේ ජීවිතයේ සැබෑ වෙනස්කම්!

ඒ වගේම ජාතිවාදය, ආගම්වාදය ප්‍රතික්ෂේප කරන, නීතියේ ආධිපත්‍යය, ප්‍රජාතන්ත්‍රවාදය සහ සමාජ සාධාරණත්වය අවධාරණය කරන නව දේශපාලන සංස්කෘතියක් ගොඩනැගීමේ අවශ්‍යතාව තිබෙනවා.

එබැවින්, ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ ප්‍රධානත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගය රජය සාක්‍ෂි පදනම් කරගෙන යෝජනා කර ඇති සියලුම වෙනස්කම් විමර්ශනය කර රට තුළ සාමය, සමානාත්මතාවය සහ දූෂණයෙන් තොර පාලනයක් ඇති කිරීමේ අරමුණු සාක්ෂාත් කර ගැනීමේ ප්‍රයත්නයට සක්‍රීයව සහභාගී විය යුතුය.

සමාජයක දේශපාලන අනාගතය තීරණය කළ යුත්තේ ජාතිවාදීන්ගේ සටන් පාඨවලින් හෝ ආගම්වාදීන්ගේ තර්ජනවලින් නොවේ; එය සත්‍යය විමර්ශනය කරන මිනිසුන්ගේ දැනුවත්භාවය සහ යුක්තිය තහවුරු කිරීමට ඔවුන්ගේ ධෛර්යය!

එකමුතු වෙමු! හිමිකම් ඇවිරිණි! ඉතින් අපිට වාර්ගික ආගම් භේද නැති කරලා සමානාත්මතා ශ්‍රී ලංකාවක් ගොඩනගන්න පුළුවන් බව ඇත්ත.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
09-10-2026
සිංහල පරිවර්තනය සමග) மதவாத அரசியலுக்கு இனியும் இடமில்லை! விழிப்படைந்த முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சிப் பேச்சுகளால் ஏமாற்ற முடியாது Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 09, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.