சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் பொழுது (செப்டம்பர் 26- 27) ஆகிய திகதிகளில், இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் திறந்தவெளி கேட்போர் கூடத்தில், தமிழில் ஏற்பாடு செய்யப்பட்ட பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன..
26 ந்திகதி பிற்பகல் 1.00 மணி முதல் 4.00 மணி வரை கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையும், கவிஞருமான சுபாஷினி பிரணவன் சிறுவர்களுக்கு கதை சொல்லல் நிகழ்ச்சியினை நடத்தினார். இதில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, மட்டகுளி சேர் ராசிக் பரீட் முஸ்லிம் பெண்கள் கல்லூரி, கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, கொழும்பு மோதர ஹம்ஸா ஆண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாண-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டதோடு,சிறப்பான முறையில் நிகழ்ச்சியினை நடத்திய சுபாஷினி பிரணவன் மற்றும் மாண-மாணவிகள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சிங்கள தமிழ் கலை இலக்கியவாதிகளாலும், ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டமை குறிப்பிடதக்கது
செப்டம்பர் 27 ந்திகதி பிற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை, இலங்கை எழுத்தாளர் அமைப்பினால் திறந்தவெளி கேட்போர் கூடத்தில், தமிழில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய நிகழ்ச்சிகள் வரிசையில். மொழிபெயர்ப்பாளரும் ஊடகவியலாளருமான தம்பிஐயா தேவதாஸின் இலங்கையில் ஊடகவியல் '' எனும் நூல் வெளியிட்டப்பட்டது. நூலின் முதற்பிரதியினை இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்று கொண்டார்.. சிறப்பு பிரதிகளை சிங்கள எழுத்தாளர்களான கமல் பெரேரா, , தேவி காலகே, மற்றும் வதிரி. சி.ரவீந்திரன்,யோகராஜன் சுசிலா, ஜெகானந்தன், கவிக்கமல், மார்க்ஸ் பிரபாகர், மேமன்கவி ஆகியோர் பெற்று கொண்டார்கள். நிகழ்ச்சிகளை மொழிபெயரப்பாளரும் தமிழ் மொழி ஆர்வலளருமான ஹேமசந்திர பதிரன சிங்களத்திலும், தமிழிலும் சிறந்த முறையில் தொகுத்தளித்தார். நன்றியுரையை மேமன்கவி நிகழ்த்தினார்.
தொடர்ந்து, யோகராஜன் சுசிலா வின் நெறியாள்கையில் வாசிப்பு பழக்கத்தை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் Ratnam Jegananthan, J. Subathra, . Jeneemy Royreh, . Ursula Neera Fernandez, .keerthika, Fathima ifaza ifthikar,Mohammed fawzan azeez ஆகியோர் நடித்த ''நடமாடும் பிணங்கள்'' எனும் வீதி நாடகம் இடம் பெற்றது. இந்த நாடகத்தில் நடித்த கலைஞர்களுக்கு இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அடுத்து ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் பற்றிய உரையாடல் இடம் பெற்றது.. மொழிபெயர்ப்பாளரும் இலங்கை வானொலி அறிவிப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் வதிரி. சி. ரவீந்திரன், மேமன்கவி ஆகியோருடன் ஈழத்து மெல்லிசைப் பாடல்களை பற்றி உரையாடினார். பல ஈழத்து மெல்லிசைப் பாடல்களும் அங்கு ஒலிப்பரப்பபட்டன. என்பதும் குறிப்பிடதக்கது.
இறுதி நிகழ்ச்சியாக கவிதா நிகழ்வு இடம் பெற்றது. இந்த கவிதா நிகழ்வில் யோகராஜன் சுசிலா, மார்க்ஸ் பிரபாகர், கவிக்கமல்,இரத்தினம் ஜெயகானந்தன், மேமன்கவி ஆகியோர் கலந்து கொண்ட இந்த கவிதா நிகழ்வு இசையுடன் வழங்கப்பட்டமை வித்தியசமான அனுபவமாக அமைந்தமை குறிப்பிடத்க்கது. வாசிக்கப்பட்ட கவிதைகள் சிங்கள மொழியில் ஹேமசந்திர பதிரன அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டன.
சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 29, 2018
Rating:
கருத்துகள் இல்லை: