கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் Online மூலமாக கொடுக்கல், வாங்கல் சேவை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் மக்களுக்கான நாளாந்த கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளுக்காக Online செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு (17) புதன்கிழமை
இடம்பெற்றது.
வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீபின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார்.
நிகழ்வில், வலய உதவி முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ், வங்கியின் பணிக்குழுவினர்கள் மற்றும் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் ஐ.எல்.நெய்னா முகம்மட் உட்பட கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் Online மூலமாக கொடுக்கல், வாங்கல் சேவை
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 18, 2021
Rating:

கருத்துகள் இல்லை: