Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய கொடகே தேசிய சாகித்திய விழா சிறப்பாக நடைபெற்றது விருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வழங்கி வைத்தார்.

25வது வெள்ளி விழா தேசிய கொடகே தேசிய சாகித்திய விழா 2023 கடந்த நவம்பர்-15 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு-07ல் அமைந்துள்ள தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் திருமதி நந்தா கொடகே தலைமையில் நடைபெற்றது.

விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த  சிங்கள- தமிழ் ஆங்கில நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழுக்கான விருதுகளாக  2022 ஆம் ஆண்டுக்கான  சிறந்த  நாவலுக்கான  விருது  ஏ.எஸ்.உபைதுல்லாவின்   வேராகிப் போன மனிதர்கள் எனும் நாவலுக்கும்,   சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது மண்டூர் அசோகாவின் எழுதப்படாத கவிதைகள் சிறுகதைத்  தொகுப்புக்கும் கிடைத்தன.

மேலும் சிறந்த கவிதைத்தொகுக்கான விருது  சிவனு மனோஹரனின் மலைகளின் பாடல் எனும் கவிதைத் தொகுப்புக்கும்,.  சிறந்த முதல் நூலுக்கான விருது  ஜெயவதியின் அணங்கே; அகிலம் வெல் எனும் கவிதைத் தொகுப்புக்கும், சிறந்த மொழிபெயர்ப்பு தொகுப்புக்கான விருது  இப்னு அசூமத்தின் நீ கூறுகிறாய் இறந்து விட்டாயாம் நீ எனும் தொகுப்புக்கும், 


2022 ஆண்டுக்குக் கொடகே ஆக்க இலக்கியப் போட்டியில் சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தெரிவு செய்யப்பட்ட  தினுஷா மகாலிங்கத்தின்  சொற்களற்ற இடைவெளி எனும் கவிதைத் தொகுப்புக்கும், சிறந்த சிறுகதைத்  தொகுப்புப்பாகத் தெரிவு செய்யப்பட்ட  ஜே. வஹாப்தீனின்  அவனுக்கும் சிறகுகள் உண்டு எனும்  சிறுகதைத் தொகுப்புக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இவ்விருதுகளை   இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வழங்கி வைத்தார்.  விருதுகளுக்கான அறிவிப்புகளை மும்மொழியிலும்   ஹேமமாலி  ஹேமசந்திரபதிரன,  மேமன்கவி  ஆகியோர்  முன் வைத்தார்கள்.









தேசிய கொடகே தேசிய சாகித்திய விழா சிறப்பாக நடைபெற்றது விருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வழங்கி வைத்தார். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 16, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.