எக்சத் என்கின்ற ஐக்கியம்!
சோனக சமூகத்தின் வரலாற்றை ஒரு 100 வருடங்களாக அவதானித்தால் தெரிய வருவது என்னவெனில்,
அரசியல் பண்பு ரீதியாக செய்ய வேண்டிய வேலைகள் எதையும் செய்யாமல் பாம்புக்கு பல் விளக்குதல், பூனைக் குட்டிக்கு மயிர் எண்ணுதல்,கரடிக்கு பேண் பார்த்தல் என தேவையில்லாத விடயங்களையே சமூகத்தின் தலைவர்களும்,புத்திஜீவிகள் என்று சொல்லப் படுபவர்களும், மக்களும் செய்து தொலைகின்றனர்!
வரலாற்றில் விதி விலக்காக சில தலைவர்கள் சில முக்கியமான விடயங்களை செய்து விட்டு சென்றுள்ளனர்
அவற்றில் முக்கியமானவைகளாக பின்வரும் சில விடயங்களை பட்டியலிடலாம்.
01.அறிஞர் சித்தி லெப்பை தொடங்கிய முஸ்லிம் நேசன் பத்திரிகை.
02.அறிஞர் சித்தி லெப்பை பல அறிஞர்களுடன் தொடங்கிய ஸாகிறா கல்லூரிகள்.
03.கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள்
வழங்கிய ஆசிரியர் நியமனங்களும், முஸ்லிம் பாடசாலைகளை அமைந்ததும்.
04.அல்ஹாஜ் அகமது லெப்பையின் சிந்தனையில் உதித்த பள்ளிவாயல் சம்மேளனங்கள்.
05.எம்.ஐ.எம்.முகைதீன் முன் வைத்த சோனகர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம்.
06.இக்பால் ஹோட்டல் முதலாளி அபூபக்கர் ஹாஜியார் உருவாக்கி வளர்த்த எழுச்சிக்குரல் பத்திரிகை.
07.தலைவர் அஸ்ரப் வளர்த்தெடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
மேலும் சோனக சமூகம் இதுவரையிலும் செய்யாத அல்லது செய்ய முயற்சிக்காத முக்கிய விடயமாக இருப்பது சமூகத்திற்கான ஒரு அச்சு, இலத்திரனியல் ஊடகமாகும், ஊடகம் ஒன்றை உருவாக்குவதற்கான பணபலமும், ஊடகவியல் அறிவு சார்ந்த ஜாம்பவான்கள் சோனக சமூகத்தில் இருந்தும் இது வரை அன்னிய சமூகத்திடம் தமது சமூக கருத்துக்களை முன் வைப்பதற்கு கையேந்தும் நிலையிலேயே சமூகமும் மக்களும் தலைவர்களும் காணப்படுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுத்து அதற்கு தேவையான வளங்களையெல்லாம் சேர்த்தெடுத்த தலைவர் அஸ்ரப் அவர்களால் ஏன் ஒரு அச்சு ஊடகத்தை நிலையாக கொண்டுவர முடியவில்லை என எந்த சோனகனும் சிந்தித்து தமது கருத்தை இதுவரை முன் வைக்க வில்லை.
அண்மைக் காலமாக எக்ஸத் என்ற பெயரிலான ஒரு பத்திரிகை சோனக மக்களின் அரசியல் கருத்துக்களையும்,அவர்கள் சார்ந்த நியாயங்களையும் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு கொண்டு செல்வதற்காக வெளியிடப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது,
தனியொருவராக முஸ்லிம் குரல் பத்திரிகையில் எம்முடன் களமாடிய தோழர் சாஜஹான் இந்த எக்ஸத் என்ற ஐக்கியம் என்ற ஊடகத்தை மக்களுக்குள் விதைப்பதற்கு அரும்பாடுபடுவதை அவதானிக்க முடிந்தது,
பிரியாணிக்கு காசை செலவிடும் சமுதாயம் தமக்கான ஒரு ஊடகத்திற்கு பணத்தை செலவிட தயங்குவதுதான் சோனக சமூகத்தின் நக்குவார நிலையாகும்!
எக்ஸத் ஊடகத்தின் மிக சிறந்த பணி!
கடந்த மாதம் எக்ஸத் ஊடகம் பலாத்காரமாக வடக்கு மண்ணிலிருந்து 24 மணித்தியாலத்துக்குள் துரத்தியடிக்கப்பட்ட சோனக மக்களின் நினைவு தினத்தை ஞாபகப்படுத்தி ஒரு நிகழ்வை மேற் கொண்டது.
இஸ்ரேல் பாஸிஸத்தை விட மிக மோசமான பாசிஸ வெறி கொண்ட தமிழ் புலிகள் தமக்கான ஒரு அரசியல் அதிகாரம் கிடைத்திருக்காத நேரத்தில் மேற் கொண்ட இந்த சோனக மக்களின் இன சுத்திகரிப்பு என்பது உலகம் கண்டறியாத ஒரு புதிய இன சுத்திகரிப்பாகும்!
இஸ்ரேல் என்ற பாசிஸ நாடு கூட தமது சொந்த நாட்டின் அரபு குடி மக்களை இது வரை வெளியேற்றியது கிடையாது ஆனால் பாசிஸ இஸ்ரேலில் பயிற்சியெடுத்த பாசிஸ தமிழ் புலிகள் இரவோடிரவாக சோனக மக்களை இன சுத்திகரிப்பு செய்தது,
இந்த இனசுத்திகரிப்பை ஞாபகப்படுத்தி ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து ஒரு நிகழ்வை செய்யக் கூட வக்கற்ற துப்புக் கெட்ட சமூகமாக சோனகர்களும், அதன் தலைவர்களும் கட்சிகளும் இருப்பதே சமூகத்தின் வெட்கக் கேடாகும்!
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் வெளியேற்றப்பட்ட மக்களே சூடு சுரணையற்று இருப்பதாகும், இந்த இலட்சணத்தில் சமூகத்தில் டாக்டர்கள் என்பதும், என்ஜினியர்கள் என்பதும் ,லோயர்கள் என்பதும், புதிதாக நழிமிக்கள் என்ற கூட்டமும் என்பதாக சமூகம் அரசியல் பண்பற்று போக்கிடமற்று திரியும் காலம் ஒன்றுக்காக வேகமாக நகர்ந்து செல்கின்றது,
எக்ஸத் என்ற ஊடகம் செய்ய நினைக்கின்ற ஒரு விடயத்திற்கு, விற்று மிஞ்சிய சுளகைப் போன்று ஒவ்வொரு சோனக ஊரிலும் கடை திறக்கும் ஊடக சங்கங்களும்,அதன் ஊடக ஜம்பவான்களும் ஒத்துழைப்பு வழங்க முன்வருவதில்லை என்பதில் இருந்து சமூகத்தின் கையறு நிலையை அறிந்து கொள்ள முடியும்!
இந்த சமூகம் நிலைக்குமா?காஸா போல் ஆக்கிரமிப்பினால் அழிந்து தொலைக்குமா?
எக்சத் என்கின்ற ஐக்கியம்!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2023
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 16, 2023
Rating:

கருத்துகள் இல்லை: