மட்டக்களப்பு மத்தி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலைக்கு) விஜயம்
மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள MM.ஜவாத் (SLEAS) இன்று காத்தான்கு கோட்டத்தில் உள்ள-33 பாடசாலைகளுக்கும் குறுகியகால கள விஜயம் ஒன்றை மேற் கொண்டதுடன் பாடசாலைகளின் முகாமைத்துவக் குழுவிடமும் பாடசாலைகளின் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
மேற்படி கள விஜயத்தின் இறுதியாக மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை முகாமைத்துவக் குழுவிடம் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் சுற்றுச் சூழலையும் பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாவும் பாடசாலை சமூகத்துடன் கலந்துரையாடினார்.
இக்கள விஜயத்தில் காத்தான்குடி கோட்டக் கல்வி பனிப்பாளர் AGM.ஹக்கீம் (SLEAS),மட்டக்களப்பு மத்தி வலயத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.நியாஸ் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆரம்க் கல்வி இணைப்பாளர் தஸ்லிமா றிஸ்வியும் கலந்து கொண்டனர்.
மீரா பாலிகா தேசிய பாடசாலை தொடர்பாக கருத்துதுத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் தேசிய ரீதியிலும் கிழக்கு மாகாணத்திலும் முதன்மையான பாடசாலையாகத் திகழும் இப் பாடசாலையின் அடைவு மட்டானது மிகவும் திருப்திகரமானது என்றும் சகல பரீட்சைகளிலும் 100% அடைவு மட்டத்தை கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பாடசாலை நிருவாகத்தினால் எற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வுகளிலும் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் பங்கேற்றதுடன் இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கம் என்போர் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு மத்தி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலைக்கு) விஜயம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 02, 2024
Rating:






கருத்துகள் இல்லை: