அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் அல் குர்ஆன் மத்ரஸா முஅல்லிம், முஅல்லிமாக்களுக்கான விஷேட செயலமர்வு
காத்தான்குடி மற்றும் காத்தான்குடியை அண்மித்த பகுதிகளில் உள்ள அல்குர்ஆன் மதரஸாக்களின் முஅல்லிம், முஅல்லிமாக்களுக்கான விஷேட செயலமர்வு (07.07.2024 ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை காத்தான்குடி ஷெய்ஹுல் பலாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமயுரை மற்றும் வரவேற்புரையினை ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷேய்க் MIM ஜவாஹிர் (பலாஹி) BA நிகழ்த்தினார்.
"சிறுவர் உளவள வழிகாட்டல் மற்றும் இலகு வழியில் அல்குர்ஆனை கற்பித்தல் முறைகள்" தொடர்பாக நடை பெற்ற இச் செயலமர்வுக்கு வளவாளர்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின
ன் உறுப்பினர்
Ash-Sheikh. M.Fahim.
Assistant Secretary-Quran Madrasa Division-ACJU)
@
Ash-Sheikh-Mohamed Al Hasmee (Coordinator—Quran Madrasa Division-ACJU)
@
Ash-Sheikh-Fazal Al Humaidi (Assistant Coordinator—Quran Madrasa Division-ACJU)
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
150 க்கும் மேற்பட்ட
முஅல்லிம், முஅல்லிமாக்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வுகளை ஜம்இய்யாவின் தஃவா குழு செயலாளர் அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நன்றியுரையினை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷேய்க்AM ஹாரூன்(ரஷாதி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் அல் குர்ஆன் மத்ரஸா முஅல்லிம், முஅல்லிமாக்களுக்கான விஷேட செயலமர்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 08, 2024
Rating:

கருத்துகள் இல்லை: