பிரதியமைச்சர் தோழர் அருண் ஹேமச்சந்திராவை பாராட்டும் பல் சமூகம்
பொத்துவில்-04 ஐ சேர்ந்த சிக்கந்தர் ஜமால்தீன் முர்த்தலா எனும் சகோதரன் தொழில் நிமித்தம் குவைத் நாட்டிற்கு சென்றவர் அங்கு நோய்வாய்ப்பட்டு சுமார் 18 மாதங்களுக்கும் அதிகமாக குவைத் நாட்டின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அவர் (குணமடையாத நிலையில்) அவரை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக அவரது தாயும் சகோதரியும் வைத்த வேண்டுகோளை அறிந்த ஜனாதிபதி Anura Kumara Dissanayake அவரது வைத்தியசாலை செலவுகளாக இருந்த KWD 9000 குவைத் திணார்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 90இலட்சம்) மற்றும் அவருக்கான விசேட வைத்திய கட்டில் SLR 1.5 மில்லியன் ரூபாய் என அவரை இலங்கை விமான நிலையம் வரை கொண்டு வந்து சேர்க்கும் அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று எதிர்வரும் நாட்களில் அவரை நாட்டுக்கு எடுத்து வருவதற்கான வேலைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது...
இந்த விடயத்தை செய்து முடிக்க உதவியாக இருந்த வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதியமைச்சர் தோழர் Arun Hemachandra அவர்களுக்கு பலரும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றர்.
பிரதியமைச்சர் தோழர் அருண் ஹேமச்சந்திராவை பாராட்டும் பல் சமூகம்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 07, 2025
Rating:

கருத்துகள் இல்லை: