ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான நிலையத்தில் ஏற்பாட்டில் கருத்தாடல் நிகழ்வு.
பாட்டுக்குமான நிலையத்தில் ஏற்பாட்டில் இன்று 08/02/2025 மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இனப்பிரச்சினை தொடர்பில் முஸ்லிம்களின் வகிபாகம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் எனும் தலைப்பில் உரையாற்ற அவ் அமைப்பினால் அழைக்கப்பட்டிருந்தேன்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் அமைப்பின் தலைவருமான நெளபல் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி செயலமர்வில்
தற்போதைய அரசாங்கத்தின் தீர்வு திட்டமுயற்சிகள்,
முஸ்லிம்களின் அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம் கட்சிகளின் வறுமை,
கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரிக்கப்பட்ட விதங்கள்,
கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள், தொடர்பில் விரிவான உரை ஒன்றை ஆற்றினேன்.
ஆய்வாளர் ஜெஸ்மி மூஸா எம்.ஏ.அவர்கள் மீண்டும் பேசு பொருளாகியுள்ள முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் முக்கியத்துவம் மிக்க உரை ஒன்றை ஆற்றினார்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர் நெளபல் சேர் அவர்களினால் இலங்கையில் சகல இனங்களும் செளஜன்யமாக வாழ்வது எப்படி...?என்ற தலைப்பில் விஷேட உரையாற்றப்பட்டது.
இறுதியில் கவிஞர் விஜிலி மற்றும் சமூக செயற்பாட்டாளர் சத்தார் ஆகியோர்கள் சபையோர் குறிப்புரையை வழங்கினர்
தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அம்ஜத் மற்றும் சமூக நிறுவனங்களின் தலைவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், ஊடகவியலாளர்கள்,
மற்றும் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மேற்படி அமர்வில் கலந்து சிறப்பித்தனர்.
(அன்புடன்.
யூ எல் எம் என் முபீன்)
ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான நிலையத்தில் ஏற்பாட்டில் கருத்தாடல் நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 08, 2025
Rating:

கருத்துகள் இல்லை: