மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட Clean Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
Clean Sri Lanka
தேசிய வேலைத்திட்டம்தொடர்பாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள கல்வித்துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு விழிப்புணர்வூட்டும் முழுநாள் வேலைத்திட்டம் (06.02.2025) ஆரம்பிக்கப்பட்டது.
மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த 79 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி அபிவிருத்திப் பிரிவின் பிரதி கல்விப் பணிப்பாளர் ரீ.எம்.எஸ். அஹமட், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், ஆகியோர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர்.
பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.றமீஸ்,AGM. ஹக்கீம்,ஏ.எம்.முபாஸ்தின், ஆசிரிய வாண்மை விருத்தி வள நிலையத்தின் முகாமையாளர் ஏ.றியாஸ், ஆகியோர் இங்கு கருத்துரை வழங்கினர்.
Clean Sri Lanka
தேசிய திட்டத்தின் பிரதான தூண்களாக அமைந்துள்ள சமூகம், சூழல் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமை(10) தொடக்கம்
Clean Sri Lanka
தேசிய திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இதனைக் கண்காணிக்க வலயக் கல்விப் பணிமனையூடாக விசேட குழு அமைக்கப்படும் என்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிலான இத்திட்டத்தின் மூலமாக பாடசாலை சமூகத்தை ஒன்றிணைக்க முடியும்.
சமூக மாற்றம் என்பது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்ற யதார்த்தமான சிந்தனையே Clean Sri Lanka திட்டம் என வளவாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.எம்.றமீஸ் கூறினார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட Clean Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 08, 2025
Rating:

கருத்துகள் இல்லை: