உள்ளூராட்சி மன்றங்களை வெல்வதற்கு மீண்டும் மக்களை ஏமாற்றும் ரவூஃப் ஹக்கீம் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன்.
(எம்.பஹத் ஜுனைட்)
உள்ளூராட்சி மன்றங்கங்களுக்கான தேர்தல்கள் நடத்த புதிய அரசாங்கம் முஸ்தீபுகளை எடுத்து வரும் நேரத்தில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூக்கிப்பிடித்து மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்ற ஹக்கீம் வீயுகம் வகிக்கிறார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனது 22 வருடங்களுக்கு மேற்பட்ட தலைவர் பதவியையும் வைத்துக்கொண்டு 30 வருடங்களுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த தீர்வுகள் என்ன? கேள்வி எழுப்பினார்.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு காணிப்பிரச்சினைகளை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளன கரங்கோ காணிப் பிரச்சினை , வட்டமடு காணி பிரச்சினை, பொன்னன் வெளி காணிப்பிரச்சினை, லகுகல காணிப் பிரச்சினை , கல்லோயா கரும்புச் செய்கையாளர் காணிப்பிரச்சினை, அஷ்ரப் நகர் காணி பிரச்சினை இவ்வாறு அம்பாறை மாவட்டத்தின் தீர்க்கப்படாத பல காணிப் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளை மத்தி பிரதேச செயலக பிரச்சினை, கோரளை மேற்கு ஓட்டமாவடி இருந்து அடாத்தாகக கைப்பற்றப்பட்ட 155 சதுர கிலோ மீட்டர் காணிப் பிரச்சினை, காத்தான்குடி எல்லைப் பிரச்சினை , ஏறாவூர் கிராம சேவையாளர் பிரிவுகள் பிரச்சினைகள்.
திருகோணமலையில் கருமலை உற்று காணி பிரச்சினை , கன்னியா காணிப் பிரச்சினை, புல் மூட்டை அரிசி மலையை காணி பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை .
இவர்கள் ஆட்சியை தீர்மானித்து இருக்கிறார்கள் ஜனாதிபதியை தீர்மானித்திருக்கிறார்கள் அமைச்சரவை உள்ள உயர் அந்தஸ்தில் பதவி வைத்திருக்கிறார்கள் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்திருக்கிறார்கள்.
தங்களுக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி முஸ்லிம் மக்களின் எந்தப் பிரச்சினையும் தனது 30 வருட பதவிக்காலத்தில் ரவூப் ஹக்கீம் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் தீர்த்து வைக்கவில்லை.
இன்னும் இவர்களை நம்ப வேண்டுமா?
மக்களே உங்கள் வாக்கு கேட்டு வரும் போது இந்த பிரச்சனைகளை உடன் தீர்த்து வைக்க கேளுங்கள் அல்லது இவர்களைப் பற்றி இன்னும் ஏமாறாமல் தெளிவான முடிவுகளை எடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
உள்ளூராட்சி மன்றங்களை வெல்வதற்கு மீண்டும் மக்களை ஏமாற்றும் ரவூஃப் ஹக்கீம் - முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: