Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடமாடும் சேவை

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும், தீர்க்கப்படாத பிரச்சினைகளை ஆளுநரின் வழிகாட்டுதலின் கீழ் உரிய அதிகாரிகளின் மூலம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் நடமாடும் சேவையானது மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை வளாக மாநாட்டு மண்டபத்தில் (13) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதே வேளை ஆளுநர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எதிர் காலத்தில் நடமாடும் சேவைகளை வழங்குவதற்கு தேவையற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் மக்கள் சேவையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

காணி, கல்வி, நீர்ப்பாசணம், வீதி அபிவிருத்தி, உள்ளூராட்சி மற்றங்கள், வனஜீவராசி, வனலாக போன்ற பல திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஆளுநரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது.

மேலும் சுமார் 45 வருட காலம் உரிமை கோரி தீர்க்கப்படாத கடைத் தொகுதி, மட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை பிரச்சினைகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் என பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதன் போது ஆளுநர் முதற்கட்டமாக 3500 ஆசிரிய வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடமாடும் சேவை Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 14, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.