சம்பியனாக மகுடம் சூடியது சாய்ந்தமருது பிளைங்ஹோஸ் அணி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், நெஸ்ட் இன்டர்நெஷனல் ப்ரைவேட் லிமிடெட்டின் அனுசணையில் BATTLE OF BEST BLUE NAVYZ CHALLENGE TROPHY/2025 சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய சாய்ந்தமருது பிளைங் ஹோஸ் விளையாட்டுக்கழகம் மிகவும் விறுவிறுப்புக்கு மத்தியில், இரண்டு விக்கற்றுகளால் அபார வெற்றியீட்டி சம்பியனாக மகுடம் சூடியது.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிளைங்ஹோஸ் கழகத்தின் நம்பிக்கைத் துடுப்பாட்ட வீரர், சுழல்பந்து ஜாம்பவான் உப அதிபர் எஸ்.எம். ஸுஜான் 44 (21) தெரிவு செய்யப்பட்டார். அவரின் இச்சுற்றுத் தொடருடைய இரண்டாவது சிறப்பாட்டக்காரர் விருது இதுவாகும்.
மேலும், குழுநிலைப் போட்டிகளில் இரு சிறப்பாட்டக்காரர் விருதுகளை அதேயணியின் சகலதுறை வீரர் எஸ்.ரீ. பர்வான் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் (16) சனிக்கிழமை இடம்பெற்ற மேற்குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லெஜன்ஸ் அணி துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் 122/9 என்ற இலக்கை பிளைங் ஹோஸ் அணிக்கு நிர்ணயித்தனர்.
இந்த இலக்கை 16.2 ஓவரில் 124/8 என்று, மிகவும் விறுவிறுப்பான போட்டிக்கு மத்தியில் அடைந்து, 60,000/= பணப்பரிசுடன், கிண்ணத்தையும் பெற்று பிளைங்ஹோஸ் அணியினர் சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர்.
இரண்டாம் நிலைக் கழகமான லெஜன்ஸ் அணிக்கு 30,000/= ரூபா பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக நெஸ்ட் இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிடெட்டின்
முகாமைத்துவப் பணிப்பாளர், பொறியியலாளர் என். முஹம்மட் சப்னாஸ் கலந்து சிறப்பித்திருந்தார்.
சம்பியனாக மகுடம் சூடியது சாய்ந்தமருது பிளைங்ஹோஸ் அணி
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 23, 2025
Rating: 5

கருத்துகள் இல்லை: