ஜனாதிபதி அனுர குமார அரசாங்கத்திற்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.
தேர்தலுக்குப் பின்னரோ அல்லது அதற்கு அண்மைய காலங்களிலோ என்று நினைக்கிறேன். கொழும்பு வர்த்தக சம்மேளனம் அரசியல் கட்சிகளுக்கிடையே எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஒரு கலந்துரையாடல் அல்லது விவாதம் போன்ற ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான செலவீனங்களுக்கு தேவையான வருமானத்தை எவ்வாறு ஈட்டிக் கொள்வீர்கள் என்கிற கேள்விக்கு தற்போதைய நிதியமைச்சின் செயலாளர் Dr. Harshana Sooriyapperuma அவர்கள் அழகாக ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார்.
அவர் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்துப் பேசவில்லை. ஆனால் நாட்டின் வருமானம் என்பது முழுமையாக நாட்டுக்குக் கிடைக்கவில்லை. அது பல வழிகளில் வெளியேறி விடுகிறது (ஓட்டை வாளி போல.). எமக்கு வருமானம் இழக்கப்படுகிற அந்த ஓட்டைகள் (Revenue leakage) குறித்து எமக்கு நன்கு தெரியும். அவற்றை சீர்செய்வதன் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார்.
அப்போது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பேசிய கலாநிதி ஹர்ஷா டி சில்வா வழமை போல அரை மணித்தியாலம் பொருளாதாரத்தில் உள்ள Technical terms எல்லாவற்றையும் பயன்படுத்தி பேசினாலும் கூட கேட்ட கேள்விக்கு மட்டும் அவரிடம் இருந்து பதில் வரவில்லை. அதற்குள் இடையிடையே சஜித்தின் புகழாரம் வேறு. இதனைப் பார்த்து இடையில் குறுக்கிட்ட ஏற்பாட்டாளர்களையும் பேச விடாமல் மட்டம் தட்டி தனது தலைக்கனத்தைக் காட்டியிருந்தார்.
NPP ஆட்சிக்கு வரும்முன்னர் நானும் NPP தொடர்பில் பலருடன் விவாதம் புரியும்போது கூறும் விடயமும் இதுதான். எமது நாட்டின் அரச இயந்திரத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையானது ஒரு சிறந்த தலைமைத்துவம். அது சரியாக வழங்கப்பட்டாலே போதும். எமது நாடு சரியான திசையை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் என்று கூறுவேன்.
இன்று அதுதான் கண்முன்னே நடந்து வருகிறது. நாட்டின் ஜனாதிபதி அனுர குமார அரசாங்கத்திற்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். அரச நிர்வாகத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகள், ஊழல், இலஞ்சம் போன்றன படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகின்றன.
அதன் விளைவுகள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. நாட்டின் பல்வேறு துறைகள் அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.
மத்திய வங்கியின் ஆளுநர் அவர்கள் ஒரு நேர்காணல் ஒன்றில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி அடைவதாகவும், அடுத்த வருடம் எமது நாடு அதன் பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்த நிலையை விரைவாக அடையும் என்றும் எதிர்வு கூறியிருக்கிறார்.
அப்படி என்றால் ஏன் இன்னும் பொருட்கள் விலை குறைவடையவில்லை என்று யாரும் அடிப்படை அறிவின்றி கிளம்ப வேண்டிய அவசியம் இல்லை.
என்னதான் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்தாலும், கடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை இந்த வளர்ச்சி குறுகிய காலத்தில் சரி செய்து விடாது.
அத்துடன் இன்னமும் நாடு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டத்தின் கீழ் இருப்பதால் அரசாங்கம் எதனையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யவும் முடியாது.
பிள்ளை பிறக்க வேண்டும் என்றால் நாற்பது வாரங்கள் காத்திருக்கத்தான் வேண்டும். குறை மாதப் பிரசவம் குழந்தையின் உயிருக்குத்தான் ஆபத்து.
அப்படி என்றால் இன்று அரசை விமர்சிப்பவர்கள் யார்?
இதுவரை இருந்த ஆட்சிகளுக்குள் இந்த அரசாங்கமே மோசமான ஆட்சியைச் செய்வது போல பலர் அழுது புலம்புவதற்குக் காரணம் என்ன?
அதற்குக் காரணம் நாட்டின் வருமானம் என்னும் வாளியில் இருந்த ஓட்டையால் சிந்திய நீர் அனைத்தையும் அனுபவித்து வந்த அரசியல்வாதிகள், அவர்களது அல்லக்கைகள், அவர்களுடன் கூடிக்குலவிய அரச அதிகாரிகள் என்று எல்லோரும் இப்போது வருமானம் இன்றி சட்டம் எப்போது தங்கள் மீது பாயுமோ என்ற கலக்கத்தில் இருக்கின்றனர்.
பேசுவதற்கு ஒன்றும் இல்லாதவர்கள் ஜனாதிபதியின் சட்டைப் பொத்தான் சரியாகப் போடப் படவில்லை என்று பேசும் அளவிற்கு இவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
இவர்களே இவ்வாறு ஒப்பாரி வைத்து நாட்டின் அபரிமிதமான வளர்ச்சி என்னும் கோட்டினை மறைக்க அதனை விடப் பெரிதாக கோடு ஒன்றைக் கீறிவிட முயற்சி செய்கின்றனர்.
அது இன்று வரை வெறும் முயற்சியாகவே உள்ளது. அதன் நீட்சிகளுள் ஒன்றுதான் இன்றைய ஹர்த்தாலும்.
இவர்கள் பேசும் பிரச்சனைகள் ஒன்றும் இந்த அரசாங்கத்தில் புதிதாகத் தோன்றியவை அல்ல. அவை காலம் காலமாக இருந்த பிரச்சனைதான்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள சகல பிரச்சனைகளும் நாட்டின் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சகல பிரச்சனைகளும் படிப்படியாக தீர்க்கப்படும்.
வெறும் ஆறுமாதம் கூடத் தாங்காது, L போர்ட் என்றெல்லாம் கிண்டல் செய்த அதே அரசாங்கம் செய்கின்ற சாதனைகளைப் பாருங்கள். அதுதான் கெத்து.
இவ்வளவு செய்கின்றவர்கள், ஏனையவற்றையும் நிச்சயம் செய்வார்கள். அதுவரை காத்திருங்கள்.
திருமணமான அடுத்தவாரமே தம்பதிகளிடம் சென்று வயிற்றில் பூச்சி இல்லையா, புழு இல்லையா என்று கேட்டு உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
(குறிப்பு: இங்கு இணைக்கப்பட்டுள்ள செய்திகளை வாசிக்கும் முன்னர் எங்கள் டமில் தேசிய அரசியல்வாதிகள், அவர்களின் விசிறிகள் அனைவரும் கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.)
Copied ✍️✍️✍️
ஜனாதிபதி அனுர குமார அரசாங்கத்திற்கு சிறந்த ஒரு தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 20, 2025
Rating:

கருத்துகள் இல்லை: