மாநபியுமை மதிப்பதிலே இல்லை மாற்றுக்கருத்துகள்...
மாநபியுமை மதிப்பதிலே இல்லை மாற்றுக்கருத்துகள்...
பூநபியுமை புரிந்துகொண்டதில் மாந்தர்க்கிங்காயிரம் மாறுபாடுகள்...
புகழுக்குரியவர் நீங்களென்றே
உமக்கு நாமம் வைத்தானிறை...
பகலுக்கோர் ஆதவனாயுமை படைத்தானவ்வாதியிறை...
இறையின் தூதை எடுத்தியம்பி...
மறையின் வாசம் நுகரச்செய்து...
கறையில்லாக் கல்பு கொண்டு...
பறைந்திட நீரும் மார்க்கம் பெற்றோமே யாம்...
தூதரான கோமான் நபி...
போதனைசெய் பூமான் நபி...
வேதனை மறுமையில் அடையா வண்ணம்...
தீதினை நீக்கிய அண்ணல் நபி...
நீர் நடந்திட்ட நேசவழி...
பார் வாழுயிர்களின் நேர்வழி...
அணுஅணுவாயுமைப் பின்பற்றுவதே...
அனுதினம் யாம் கொள்ளும் நல்வழி...
ஷிர்க்,குப்ர் ஏதுமற்ற...
தர்க்கங்களுக்கப்பாற்பட்ட...
தூய நேசம் கொள்வோம் யாமும்...
தூதரும் வழி சேர்ந்திடத்தானே....
பஸ்லா பர்ஸான்
காத்தான்குடி
05/09/2025
மாநபியுமை மதிப்பதிலே இல்லை மாற்றுக்கருத்துகள்...
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 05, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: