கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!!
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு 04.10.2025 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டு முதல் நாள் பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றுவருகின்றது.
இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு முடித்தவர்கள் என மொத்தமாக 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் இன்றைய இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இப்பட்டமளிப்பு விழா இன்றும் நாளையுமாக இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ளன.
இதன்போது பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு வரலாற்றுத்துறைக்கான கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்களின் போது முறையே 345 மற்றும் 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2025
Rating:

கருத்துகள் இல்லை: