“ஈக்களை அழிக்க முன் சாக்கடைகளை ஒழிக்க வேண்டும்” என்பது போன்று போதைப் பாவனையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் விற்பனையாளர்களை இல்லாமற் செய்யும் ஜனாதிபதியின் முன்னெடுப்பு ஆக்கபூர்வமானது.
“ஈக்களை அழிக்க முன் சாக்கடைகளை ஒழிக்க வேண்டும்” என்பது போன்று போதைப் பாவனையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் விற்பனையாளர்களை இல்லாமற் செய்யும் பணி ஆக்கபூர்வமானது.
வெறும் கண் துடைப்பிற்காக சில்லறை வியாபாரிகளை பிடித்து சிறையிலடைத்து விட்டு மொத்த வியாபாரிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் காவற்துறையினரின் நடை முறை இப்போது வெகுவாக குறைந்துள்ளது குறித்து பலரும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இன்பகரமான இல்லற வாழ்க்கையை தொலைத்து விட்டு அபாயகரமான போதை வாழ்க்கையில் மூழ்கியுள்ள இளைஞர்களை மீட்டெடுத்து, நல்வழிப்படுத்தும் பணியை முடுக்கிவிடலும் முக்கியமான ஒன்றே.
அரச அதிகாரிகள் முதல் அத்துணை இலங்கையர்களும் “நமது நாடு நமது மக்கள்” என்ற பொது நல சிந்தனையோடு போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கு கைகோர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இது நல்லதொரு தருணம் இதை நமக்கான சந்தர்ப்பமாக அமைத்துக் கொள்ள தவறினால் நாம் வருத்தப்பட வேண்டிவரும்.
ஒவ்வொரு சமூகமும் அவரவர் சமூகம் சார்ந்து சிந்தித்தேனும் செயற்படாவிட்டால் அபாயகரமான சீரழிவால் நமது இளைய தலை முறை அழிந்து போகும் என்பதே நிஜம்.
(அஷ்ஷெய்க்-ஹாறுன் ஸஹ்வி)
“ஈக்களை அழிக்க முன் சாக்கடைகளை ஒழிக்க வேண்டும்” என்பது போன்று போதைப் பாவனையாளர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் விற்பனையாளர்களை இல்லாமற் செய்யும் ஜனாதிபதியின் முன்னெடுப்பு ஆக்கபூர்வமானது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: