நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மண் முனைப் பற்றிற்கான மக்கள் பணிமனை பாலமுனையில் திறந்து வைப்பு
மண்முனைப் பற்று பிரதேச பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அவற்றை உடனடி நடவடிக்கையுடன் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “மக்கள் பணிமனை” காரியாலயம் நேற்று (26.10.2025 ) பாலமுனை ஆர்.டி.எஸ்.வீதியில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம். சியாத்.JP அவர்களின் முயற்சியிலேயே நடைமுறைப்படுத்தப்
பட்டது.
பொது மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் பிரதேச முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை நேரடியாகப் பதிவு செய்து தீர்வுகளைக் கண்டறிவதற்கான திறந்த மேடை என “மக்கள் பணிமனை” அமையும் என அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர்
எம்.எம்.அப்துல்
ரஹ்மான் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர்
கே.செந்தில்குமார் நகர சபை உறுப்பினர் AMM.பர்சாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சமூக சேவை மனப்பாங்குடன் இத்திட்டத்தை முன்னெடுத்து வரும் எம்.ஏ.எம்.சியாத் JP அவர்கள், “பிரதேச மக்களின் குரலை நேரடியாகக் கேட்டு அது தீர்வாக மாறுவதற்காகவே இக்காரியாலயத்தை நிறுவியுள்ளோம் என குறிப்பிட்டார்.மக்கள் மற்றும்
நிருவாகத்திற்கு இடையிலான பாலமாக இது அமையும்,” என தெரிவித்தார்.
நிகழ்வில் NFGGயின் முக்கிய உறுப்பினர்க ளும் NFGGயின் பாலமுனை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
தகவல். சியாத் JP
மண்முனைப்பற்று
பிரதேசசபை உறுப்பினர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மண் முனைப் பற்றிற்கான மக்கள் பணிமனை பாலமுனையில் திறந்து வைப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:




கருத்துகள் இல்லை: