எதிரணிகளின் சங்கமம் என்.பி.பி. அரசுக்கு சவால் அல்ல…!
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
”நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை அவர்கள் ஒன்றிணையவில்லை. போர் நடந்த காலகட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை வெளிப்படுத்துகின்றது.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
எதிரணிகளின் சங்கமம் என்.பி.பி. அரசுக்கு சவால் அல்ல…!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:

கருத்துகள் இல்லை: