அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவ அரசு திட்டம்
அவ்வாறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை சீர்செய்வதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை), (தனியார்) கம்பனிக்கு ஏற்படுகின்ற செலவுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. அதனால், அவ்வாறான காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களை முற்கூட்டியே அடையாளங் கண்டு சரியான வகையில் முகாமைத்துவம் செய்து விமானப் பயணிகளின், விமான நிலையப் பணிக்குழாமினர் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும்,
விமான நிலைய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைத்து தங்குதடையின்றிய விமான சேவைகளை பேணிச் செல்வதற்கும் இயலுமாகும் வகையில் அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: