பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு..
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி கோட்டம் மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் மாணவன் எம்.எப்.எம்.பாயிக் சூழலில் கிடைக்கும் கழிவுப்பொருட்களை பயண்படுத்தி குறைவான செலவில் எளிய வடிவிலான நுணுக்குக்காட்டி (microscope) தயாரித்துள்ளார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.பரீட் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.எம்.எம்.ஸாகிர் ஆகியோரின் வழிகாட்டலுடன் இக் கண்டுபிடிப்பை இம் மாணவர் மேற்கொண்டுள்ளார்.
இக் கண்டுபிடிப்பின் ஊடாக கல்வி அமைச்சரின் இளம் கண்டுபிடிப்பாளர் ஊக்கப்படுத்தல் திட்டத்தின் ஊடாக ஏனைய பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இம் மாணவனின் எதிர்பார்ப்பாகும்.
பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு..
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2025
Rating:

கருத்துகள் இல்லை: