செவ்வந்தியின் தொலைபேசி: நாமல் ராஜபக்ச கூறுவது என்ன?
“செவ்வந்தியின் தொலைபேசியில் உங்களது பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்.” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இன்று சிரித்தப்படியே பதிலளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
“ செவ்வந்தியின் தொலைபேசியை பரிசோதித்தவர்களிடம்தான் அது பற்றி கேட்க வேண்டும். செவ்வந்தியின் தொலைபேசியை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர்போல்தான் தெரிவிக்கின்றது.
அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது.” என்பதே மேற்படி கேள்விக்கு நாமல் வழங்கிய பதிலாகும்.
“ சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள்தான் கனவில்கூட வருகின்றனர்;. அந்த கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார், அது அவரா என்பதுகூட தெரியவில்லை. நாமல் என்ற பெயரை கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம். பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால்தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள்;. சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக்கூட இருக்கலாம். “ என்றார் நாமல் ராஜபக்ச.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: