காத்தான்குடி கலெக்டிவ் அமைப்பினால் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு
(எம் எஸ் எம் நூர்தீன்)
காத்தான்குடி கலெக்டிவ் அமைப்பினால் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு.
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல்மனார் அறிவியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி கலெக்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் கல்வியாளர் மற்றும் சிந்தனையாளரான சட்டத்தரணி மாஹிர் அஸனார் அவர்களினால் இந்த சமூக வலுவூட்டல் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பிரதி அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் கலந்து கொண்டனர்
கலெக்டிவ் அமைப்பின் சார்பில் பொறியியலாளர் நுஸ்கி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலெக்டிவ் அமைப்பின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி துறையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க கலெக்டிவ் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இந்த செயலமர்வும் நடாத்தப்பட்டது.
காத்தான்குடி கலெக்டிவ் அமைப்பினால் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: