Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாஸாவை வைத்துக்கொண்டு "இரங்கல் உரை " என்ற பெயரில் அதன் புகழ்பாடுவது, கவிதைகள் அரங்கேற்றுவது , "தெளிவான பித்அத்"

பேராசிரியர்/ அஹமத் அஷ்ரப் 
(நஜ்ரான் பல்கலைக் கழகம், சவூதி அரேபியா)

தொழுகைக்காக கொண்டு வரப்பட்ட ஜனாஸா முன்னிலையில் "இரங்கலுரை"நடாத்தலாமா.?

ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டால், பிற்படுத்தாது தொழுகை நடாத்தப்பட வேண்டும் . 

குடும்பத்தார்கள், அல்லது நலன் விரும்பிகள்,  மைய்யித் அடைக்க வேண்டிய கடன் இருக்கின்றதா என கேட்டு, அதைச் செலுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் (புஹாரி: 2289) 
அதுதவிர இந்நிகழ்வை நாடாத்துபவர்கள் தங்களின் திறைமைகளை, அரசியல், சமூக தொடர்புகளை சந்தைப்
படுத்துவதற்க்கு பயன்படுத்துகின்றனர். 
இந்த பாசாங்குத்தனமான செயலால், மக்கள் நிறைய அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

பல வேலைப் பளுக்களுக்கு மத்தியில், ஜனாஸா கடமையை செய்ய வரும் மக்கள், தொழாமல் எழும்பிச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

எனவே, பள்ளி நிருவாகங்கள், இந்த மலிவான புகழ் பாடும், முகஸ்துதி நிகழ்வை நிறுத்த வேண்டும் . இல்லையெனில் அவர்களுக்கும் மாவத்தில் பங்குண்டு என்பதை மறக்கக்கூடாது.

"உங்களில் மரணித்தவர்களின் நல்ல விடயங்களைக் கூறுங்கள்" என்ற ஹதீஸ் (அபூ தாவூத்: 4900, திர்மிதி:1019) பலவீனமானதாகும். 

அதன் அறிவிப்பாளர் தொடரில்" இம்ரான் பின் அனஸ்" கடும் பலவீனமானவர். . 

மேலும், மற்றுமொரு அறிவிப்பாளர் "அதா பின் அபி ரபாஹ்" , இப்னு உமர் ரழி அவர்களிடமிருந்து ஹதீஸைப் பெறவில்லை. 

மையித்துக்கு தேவையானது
எல்லாம்,  எமது பிரார்த்தனைகள்தான் . பாசாங்குத்தனமான புகழ்கள் அல்ல.  

அல்லாஹ் மரணித்தவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களின் பாவங்களை மன்னிப்பானாக .
ஜனாஸாவை வைத்துக்கொண்டு "இரங்கல் உரை " என்ற பெயரில் அதன் புகழ்பாடுவது, கவிதைகள் அரங்கேற்றுவது , "தெளிவான பித்அத்" Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 17, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.